
வைட்டமின் ஈ எண்ணை, அரை டீஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு, இத்துடன் க்ளிசரின் இரண்டு சொட்டு கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் முகம் கழுவ முகம் பளிச்சென்று ஆகும்.
காய்ச்சிய பசும்பாலில் பஞ்சினால் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்து ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ முகம் பிரகாசிக்கும்.
பாதாம் பருப்பை இரவே ஊறவைத்து மறுநாள் அதன் தோலை நீக்கி அதில் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பன்னீர் சேர்த்து மிக்சியில் அரைத்து அந்த விழுதை முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்களுக்குப் பின் கழுவ முகம் பளீரிடும்.
கஸ்தூரி மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், பார்லி பௌடர் 2 டீஸ்பூன், பால் பௌடர் அரை டீஸ்பூன் மூன்றையும் தண்ணீரில் கலந்து முகத்தில் பேக்காகப் போடலாம். அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் பிரகாசமாகும்.
பாலாடை 2 டீஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் புத்துணர்வோடு இருக்கும்.
மூல்தானி மட்டி 2 டீஸ்பூன் காய்ச்சிய பால் அளவாகச் சேர்த்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவ பளிச்சென்று முகம் பிரகாசிக்கும்.
கடலைமாவு, தேன், பால் தலா 2 டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தால் தேய்த்துக்கழுவ முகம் பளீரென்று ஆகும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து அதில் பாலைக்கலந்து பேஸ்டாக்கி முகத்தில் தேய்த்துக்கழுவ முகம் பொலிவாக்கும்.
சர்க்கரை ஒரு 1டீஸ்பூன், வெண்ணெய் அரை டீஸ்பூன், பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை ஆகியவற்றைக் கலந்தால் பேஸ்ட் போல் ஆகும். இதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பிரகாசிக்கும்.
வெள்ளரி சாறு 1டீஸ்பூன், எலுமிச்சைசாறு அரை டீஸ்பூன், கடலைமாவு 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு 1டீஸ்பூன் நான்கையும் கலந்து பூசிவர முகம் பொலிவு அடையும்.
முகப்பரு போயே போச்சு!
ரோஸ் வாட்டரும் சந்தனமும்:
ரோஸ்வாட்டர் ஆன்டி பாக்டீரியல் பண்பு உள்ளது. இதில் உள்ள ஹைட்ரோசாலில் அதிக ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உள்ளது. இது அழற்சியைக் குறைத்து பருக்கள் வராமல் தடுக்கிறது. ரோஸ் வாட்டர் சருமத்தின் பி ஹெச் அளவை சமச்சீராக வைக்கிறது. இதனால் ஈரத்தன்மயை தக்கவைக்கிறது. இதனால் முகத்தில் எண்ணை படியாது.
சந்தனம்
இது ஆயுர்வேதத்தில் பழங்காலத்திலிருந்து பயன்பட்டு வருகின்றது. பருக்களால் ஏற்படும் சிவத்தல் மற்றும் அரிப்பைத் தடுக்கக் கூடியது. மேலும் இது முகத்துளைகளை திறக்கக்கூடியது.
இந்த இரண்டையும் கலந்து பேக் முக அழகை மேம்படுத்துகிறது.
இந்த இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளதால் முகம் சிவத்தல், அரிப்பு மற்றும் முகப்பருவினால் ஏற்படும் வலியை போக்குகிறது.
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு சிறந்த நீரேற்றத்தைத் தருகிறது. சந்தனம் முகத்திற்குப் பொலிவைத் தருகிறது.
சந்தனம் முகத்தின் இறந்த செயல்களைப் புதுப்பிக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் ஈரத்தன்மையைத் தக்கவைக்கிறது.
இந்தபேக் செய்யும் முறை
தேவை:
இரண்டு டேபிள் ஸ்பூன் சந்தனப் பௌடர் 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர். ரோஸ் வாட்டரை சந்தனத்துடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் ஆக்கவும்.
முகத்தை சுத்தமாக கழுவவும். முகத்தில் பேஸ்டைத் தடவி 15 லிருந்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.
இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.முகப் பருக்களால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் உனக்கு இது சிறந்த சிகிச்சை முறையாகும்.