தலை முதல் கால் வரை - கடுகு செய்யும் மாயம்!

Mustard oil
Mustard oil
Published on

கடுகு சமையல் பொருள் மட்டும் அல்ல உங்கள் அழகைக் கூட்டும் ரகசிய பொருளும் கூட! தலைமுடி வளர்ச்சி முதல் சருமப் பொலிவு, கருவளையம் மறைப்பு, உடல் எடை குறைப்பு, உதடு வறட்சி நீக்கம் என அழகு சார்ந்த பல பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு.

கூந்தல் வளர்ச்சிக்கு:

முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து மிதமாக சூடு படுத்தி தலைக்குதடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்பட்டு பொடுகு பிரச்சனைகளும் நாளடைவில் குறைந்து விடும்.

முகம் சுருக்கம் தவிர்க்க:

பெண்களின் பல விதமான அழகு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை கடுகு எண்ணெய்க்கு உண்டு.

கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிவர சருமத்தில் உண்டாகும் பருக்கள் கரும்புள்ளிகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

கருத்திட்டுகள் மறைய:

பெண்களின் முகம் சூரிய ஒளி படுவதால் இயல்பான பொலிவை இழக்கும். இதற்கு முகத்தை சுத்தமாக கழுவிய பின், கடுகு எண்ணெய் கொண்டு கைகளால் மசாஜ் செய்து கழுவி வந்தால் சில நாட்களில் முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைந்து முகம் பொலிவடையும்.

கருவளையம் மறைய:

சிலருக்கு நீர்ச்சத்துக் குறைபாட்டால் கண்களுக்கு கீழ் வீக்கம் உண்டாகும். இது முதுமை தோற்றத்தை அளித்து பெண்களின் முக அழகை பாதிக்கும்.

கடுகைப் பொடி செய்து கடுகு எண்ணெயுடன் கலந்து கருவளையம், வீக்கம் உள்ள பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்வதன் மூலம் கருவளையம், வீக்கமும் காணாமல் போகும். (கண்களில் படாத படி செய்ய வேண்டும்.)

முகம் புதுப் பொலிவு பெற:

முகம் டல் அடிக்கிறதா? கடுகையும், பாசிப்பருப்பையும் சம அளவு எடுத்து ஊற வைத்து அரைத்து முகத்தை நன்றாக கழுவிட்டு, இந்த பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் இன்ஸ்டன்ட் ஆக முகம் பொலிவு பெறும். வாரம் இருமுறை முகத்துக்கு இந்த பேக் போட்டால் எப்போதும் மாறாத புத்துணர்வுடன் முகம் பொலிவாகும்.

தழும்புகள் மறைய:

குழந்தை பெற்ற பின் தாயின் வயிற்றில் காணப்படும் தழும்புகள் மறைய தினமும் இரவு படுக்கும் முன் கடுகு எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் மறையும்.

ஸ்லிம் அழகு பெற:

உடலில் அதிகப்படியான சதை இருப்பதாக நினைப்பவர்கள் அந்த இடத்தை ஸ்லிம்மாக்க கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வர, நாளடைவில் குறையும்.

உதடு வறட்சி நீங்க:

உதடுகள் வெடித்து வறட்சியாக காணப்படுபவர்கள் இரவில் கடுகுஎண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் உதடுகள் இயல்பு நிலையை அடையும்.

இதையும் படியுங்கள்:
முகம் கழுவும்போது நாம் காட்டாயம் தவிர்க்கவேண்டிய 7 தவறுகள்!
Mustard oil

சருமம் மென்மையாக:

முழங்கை, முழங்கால் மற்றும் கணுக்கால் முட்டி பகுதிகளில் சிலருக்கு சருமம் கருப்பாகவும், சொரசொரப்பாகவும் காணப்படும். அவர்கள் கடுகை ஊற வைத்து அரைத்து சொரசொரப்பான பகுதியில் தேய்த்து கழுவினால் விரைவில் அந்த பகுதியில் உள்ள சொர சொரப்பு மறைந்து சரும மென்மையாகும்.

கால் பித்த வெடிப்பை போக்க:

பனிக்காலத்தில் கால்களில் ஏற்படும் பித்தவெடிப்புகளை போக்க இரவில் தூங்கச் செல்லும் முன் கடுகு எண்ணெயுடன், மஞ்சள் கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சாக்ஸ் போட்டுக் கொள்ளவும். சில நாட்களிலேயே பாத வெடிப்புகள் மறைந்து பாதங்கள் அழகாகும்.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுகிறதா? இந்த 3 வெங்காய ரகசியங்கள் உங்கள் வழுக்கையை மாயமாக்கும்!
Mustard oil

தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்க:

உடலில் தேவையில்லாத இடங்களில் முடி வளர்வதை தடுக்க 1 டீஸ்பூன், சிறிது கடுகு எண்ணெயுடன் கோதுமை மாவு, பால், நெய், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து இதைக் கைகள், கால்கள், முகம் தேவையற்ற இடங்களில் உருட்டி தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர்வதை தடுக்கலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com