உங்கள் உதட்டுக்கேற்ற ஸ்க்ரப் எது? சொரசொரப்பான உதட்டுக்கு?

Lip scrub
Lip scrub
Published on

உதடுகள் பொலிவு பெற இயற்கை வழிகள்:

  • ஒரு துண்டு உருளைக்கிழங்கில் மஞ்சள் தூளை தடவவும் பிறகு இதைக்கொண்டு உதட்டில் 5 நிமிடம் தேய்த்து பிறகு கழுவ உதடு பொலிவாக்கும்.

  • ஒரு ஸ்பூன் தேனுல சிலசொட்டுக்கள் எலுமிச்சை ஜுஸ் சேர்த்து உதட்டில் தடவி 15 நிமிடம் கழித்துத் கழுவ உதடு பளபளக்கும்.

  • ஒரு டீஸ்பூன் ஆலோவேரா ஜெல் 1டீஸ்பூன் தேங்காய் எண்ணை கலந் து மசாஜ் செய்ய உதடு பொலிவு பெறும்.

  • ரோஜா இதழ்களை பால்விட்டு அரைத்து இதை உதட்டில் தடவி 20 நிமிடம் கழித்துத் கழுவ நல்ல பலன் தெரியும்.

  • ஒரு டீஸ்பூன் ப்ரௌன் சுகர், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு டீஸ்பூன் வெண்ணை இவற்றைக் கலந்து உதட்டில் தடவிக் கழுவ உதடு பளபளக்கும்.

  • இரண்டு ஸ்ட்ராபெரியை தயிர் விட்டு அரைத்து உதட்டில் பூசி 20 நிமிடம் கழித்துத் கழுவ நல்ல பலன் தெரியும்.

  • பீட்ரூட்டை தண்ணீர் விட்டு அரைத்து அதை ஃப்ரீசரில் வைக்கவும். ஐஸ்க்யூப் ஆனபிறகு உதட்டில் தேய்க்க உதடு நல்ல ஈரப்பதத்துடன் இருக்கும்.

  • டார்க் சாக்லேட் உருகியது கொஞ்சம் எடுத்து அதில் தேங்காய் எண்ணை சேர்த்து உதட்டில் தடவி கழுவ உதடு பொலிவு பெறும்.

  • ஒரு டீஸ்பூன் பாதாம் பௌடருடன் ஒரு டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்துக் கலந்து இதை உதட்டில் தடவிக் கழுவ உதடு பளபளப்பாகும்.

  • கொத்தமல்லிச் சாற்றை உதட்டில் தடவி பிறகு கழுவ உதடு பொலிவாக்கும்.

வீட்டிலையே தயாரிக்கும் ஸ்க்ரப்களால் உதடுகளில் இறந்த செல்கள் நீங்கி பொலிவாகிறது. மென்மையாகவும் நீரேற்றமாக வைக்கிறது.. அதிக செலவில்லாதது.

  • எலுமிச்சை சீனி ஸ்க்ரப்

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜுசுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரையைக் கலந்து உதட்டில் பூசிக்கழுவ பிக்மெண்டேஷன் நீங்கி பொலிவாகும். சீனி சிறந்த எக்ஸ்ஃபோலியேட் ஆகும். எலுமிச்சை நன்கு ப்ளீச் செய்யும்.

  • வறண்ட உதட்டுக்கு தேங்காய் எண்ணை  மற்றும் தேன் ஸ்க்ரப்

ஒரு டேபிள் ஸ்பூன் தேனோடு 1டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை கலந்து இதை உதட்டில் தடவவும். இதன் மூலம் உங்களுக்கு பிங்க் உதடு கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
வெயிலினால் ஏற்படும் உதடு வெடிப்புகள் - வருமுன் காக்க சில வழிமுறைகள்
Lip scrub
  • சொரசொரப்பான உதட்டுக்கு காபி மற்றும் ஆலிவ் ஆயில் ஸ்க்ரப்.

ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் உடன் ஒரு டீஸ்பூன் காபி பௌடர் கலந்து  உதட்டில் தடவி வர மென்மையாக மாறும்.

  • அடர்த்தியான நிறத்துக்கு ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் ஸ்க்ரப்

இரண்டு ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு மசித்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து உதட்டில் தடவி வர பெர்ரியி‌ல் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட் மற்றும் சி சத்து  உதட்டை பளிச்சென்று ஆக்கும் தேன் நன்கு நீரேற்றமாக வைக்கும். 

  • புதினா மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

புதினா சாற்றில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து உதட்டில் தடவி அவை புத்துணர்ச்சியோடு பிரகாசமாகவும் சிறந்த மணமும் கொடுக்கும்.

  • பாதாம் மற்றும் பால் ஸ்க்ரப்

பாதாமில் ஈ சத்து நல்ல அழுத்தமான நிறம் தரும். பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது‌. கொஞ்சம் பாதாமை பொடி செய்து அதில் ஒரு டீஸ்பூன் பாலை விட்டுக் கலந்து அதில் சில சொட்டு ஆலிவ் ஆயில் சேர்த்து உதட்டில் தடவி மசாஜ் செய்ய வறண்ட பிளவுபட்ஞ உதடு பளபளப்பாகவும்  மென்மையாகவும் ஆகும்.

பெரும்பாலும் இரவு வேளைகளில் ஸ்க்ரப்களை பயன்படுத்துவது நல்ல பலன்களைப் தரும்.

இதையும் படியுங்கள்:
செம்பவள உதடு சொல்லும் இலட்சண குறிப்புகள்!
Lip scrub

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com