

நம்முடைய முடிக்கு எது சிறந்ததோ அதை நாம் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். நல்ல நீரேற்றத்திற்கு தேங்காய் எண்ணெய் புரதத்திற்கு முட்டை, நல்ல கொழுப்புச் சத்திற்கு அவகேடோ இப்படி இயற்கை பொருட்கள் நமக்கு உதவுகின்றன. முடி ஆரோக்கியத்துக்கான சிறந்த இயற்கை மாஸ்க்குகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சிறந்த மாஸ்க்
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து அதை நன்கு முடியில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ சிறந்த பலனைத்தரும்.
அவகேடோ தேன் மற்றும் ஆலிவ் ஆயில்
அரை அவகேடோவை நன்கு மசித்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவை மூலம் நல்ல நீரேற்றம், நல்ல ஊட்டச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புச்சத்து முடிக்குக் கிடைக்கும். முடியில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அவகேடோவின் கொழுப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சிறந்த கண்டீஷனராக செயல்படும்.
முட்டை, க்ரீக் யோக்ஹர்ட் புரத மாஸ்க்
ஒரு முட்டையை நன்றாக அடித்து அதில் 2,டேபிள் ஸ்பூன் க்ரீக் யோகாஹர்ட் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த மாஸ்க் பயன்படுத்துவதால் முடியில் வேர்க்கால்கள் வலுவாகும் யோக்ஹர்ட்டின் லாக்டிக் அமிலம் நல்ல எக்ஸ்ஃபோலியேட்டாகவும், முட்டையின் புரதமும் முடியை நன்கு வலுப்படுத்தும்.
முடியின் அடர்த்தியை ஊக்குவிக்கும் தேங்காய் எண்ணை மற்றும் பட்டை மாஸ்க்
மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒருடீஸ்பூன் பட்டைபௌடரைச் சேர்க்கவும். பட்டை முடியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தேங்காய் எண்ணை முடியை பாதுகாக்கும். இந்த கலவையை முடிக்கு மசாஜ் செய்யவும். இது நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆலோவேரா, ஆப்பிள் சிடார் வினீகர் மற்றும் தேன் மாஸ்க்
2 டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல்லுடன் 1டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகருடன் கலந்து இதை முடியில் மசாஜ் செய்யவும். இது எண்ணைப் பசையுள்ள முடி உள்ளவர்களுக்கு ஏற்றது. ஆலோவேரா முடியை மென்மையாக்கும். ஆப்பிள் சிடார் வினீகர் பி. ஹெச்சை பாலன்ஸ் செய்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
முட்டை மற்றும் எலுமிச்சை மாஸ்க்
இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு மென்மையாக ஆகி அதில் 1டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜுஸ் சேர்க்கவும். இது எண்ணைப் பசையுள்ள முடிக்கு ஏற்றது. முட்டை முடியின் எண்ணைப் பசையை உறிஞ்சும். எலுமிச்சை சீபத்தை சமநிலையில் வைக்கும். குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.
களிமண் ஆப்பிள் சிடார் வினீகர் மாஸ்க்
2 டேபிள் ஸ்பூன் பென்டோனைட் களிமண்ணுடன் 1டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகரை சேர்த்து இதை முடியில் தடவி 15நிமிடம் கழித்து கழுவவும். களிமண் முடியின் அழுக்கை நீக்கும் மேலும் அதிக எண்ணைப் பசையையும் போக்கும்.
வாழைப்பழம் தேங்காய் எண்ணை மாஸ்க்
பழுத்த வாழைப்பழ கூழுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை மற்றும் 1டேபிள் ஸ்பூன் தேனும் சேர்த்து நன்கு கலந்து முடியில் தடவி அரைமணிநேரம் கழித்து வாஷ்செய்யவும். இது முடிக்கு பளபளப்பைக் கொடுக்கும். வாழைப்பழத்தின் பொட்டாசியம் முடிக்கு வலுவை அளிக்கும். தேங்காய் எண்ணை முடி வேர்க்காலை வலுப்படுத்தி நீரேற்றத்தையும் தரும்.
மேற்கூறிய மாஸ்குகளை பயன்படுத்தும்போது முதலில் வெதுவெதுப்பான நீரில் மாஸ்குகளை கழுவி பிறகு பிறகு குளிர்ந்த நீரால் ஷாம்பூ வாஷ் செய்யவும். வாரத்தில் ஒருமுறை இவற்றை பயன்படுத்தலாம். கெமிக்கல்கள் இல்லாததால் இவைகள் எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது.