

அழகு என்பது பெண்களின் மொத்த தோற்றத்தில் கைகளும் மிகவும் முக்கியம். பெண்கள் கைகளால் வீட்டு வேலைகள், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கைகள் என பல பாதிப்புகள் ஏற்படும். கைகள் இதனால் முதுமைத் தோற்றத்துக்கு மாறுகின்றன. கைகளுக்கு பின்பற்ற வேண்டிய எளிய முறையில் செய்ய வழி முறைகள்.
மசாஜ் செய்வது
பெண்கள் தங்களது வேலைகளுக்கு அதிக அளவில் கைகளை பயன்படுத்துவதால், கைகள் சுருக்கம் விழுந்து முதுமையான தோற்றத்துக்கு மாறிவிடலாம். இதனால் இரவு தூங்கச்செல்லும் முன் பெண்கள் கை மற்றும் கால்களுக்கு மசாஜ் முறையை பின்பற்றலாம். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி தினமும் கை மற்றும் கால்களை மசாஜ் செய்வதால், எப்போதும் இளமை தன்மையை தக்கவைக்கலாம்.
எலுமிச்சை - ஆரஞ்சு
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளை பயன்படுத்தி கைகள் மற்றும் பாதங்களின் கருமையை போக்கலாம். இந்த பழங்களில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தின் கொலாஜென் உற்பத்தியை தாண்டி சருமம் தளர்வடைவதை தடுக்கும், வறண்ட சருமம் கொண்டவர்கள் இந்த பழங்களின் சாறுடன் ஆலிவ் ஆயில் அல்லது வைட்டமின் ஈ ஆயில் கலந்து தேய்த்து ஊறிய பின் கழுவலாம். இதனால் கைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.
கோதுமை மாவு மாய்சரைசர்
கோதுமை மாவில் சிறிதுபாலும், எலுமிச்சை சாறும் கலந்து பசை போல் ஆக்கி அதை கைகளில் பூசி சில நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவினால் கைகள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இது இயற்கையான மாய்ஸ்ரைசர்.
தக்காளி பேக்
தக்காளியை பேஸ்ட்டாக்கி அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி இந்த பேக்கை கைகள் மற்றும் கால்களில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், கைகள் பளிச்சிடும் சருமத்தின் இளமையும் பாதுகாக்கப்படும்.
கடலைமாவு பேக்
காய்ச்சாத பாலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் தூள் 1 டீ ஸ்பூன், எலுமிச்சைசாறு 1 டீஸ்பூன் சேர்த்து பேஸ்ட்டாக்கி இதை கைகள், கால்களில் பேக்காக போட்டு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தின் வறட்சியை தடுத்து, சன்டேன் நீக்கி கைகள் பளிச்சிடும்.
எலுமிச்சை பேக்
எலுமிச்சை சாறில் சிறிது சர்க்கரை சேர்த்து கரைத்து இந்த சர்க்கரை தண்ணீரை கைகள் மட்டும் கால்களில் தடவி உலர விடவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் கைகள் பொலிவடையும் வாரம் இருமுறை இதைசெய்யலாம்.
ஸ்கரப்
சிறிது சர்க்கரை எடுத்து இதனுடன் ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு கலந்து ஸ்கரப் போல இக்கலவையை கைகள், கால்களில் வட்ட வடிவில் மசாஜ் செய்து கைமுட்டி, கால்முட்டி பகுதிகளில் தேய்த்து வந்தால் கருமையைப் போக்கி கை கால்கள் இளமைப் பொலிவுடன் காணப்படும்.
ஓட்ஸ் பேக்
ஒரு டீஸ்பூன் வெள்ளை ஓட்ஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறியதும், அதில் ஒரு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் பால் சேர்த்து பசைபோல ஆக்கி கைகளில் பூசி 15 நிமிடம் கழித்து வெது வெறுப்பான நீரில் கழுவினால் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.
இந்த குறிப்புகளில் ஏதாவது ஒன்றை செய்து பாருங்கள். கைகளை அழகாக்குங்கள்.