கோடையில் வரும் கண் கருவளையங்களை விரட்டணுமா? இந்த 7 மேஜிக் பொருட்கள் போதும்!

best cooling eye patches
best cooling eye patches
Updated on

கோடை வெப்பத்தால் இரவில் சரியான தூக்கமின்றி கண்களுக்கடியில் திட்டுத் திட்டாகத் தோன்றியுள்ள கரு வளையங்களை நீக்க நீங்கள் உபயோகிக்க வேண்டிய ஏழு பொருட்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

Dot & Key watermelon cooling Hydro gel eye patches: பலரால் விரும்பப்படும் இந்த ஹைட்ரோ ஜெல் அழகுப் பராமரிப்பு ஓட்டுத்தாள்கள் தர்பூசணி சாறு, ஹையாலுரோனிக் ஆசிட் மற்றும் நியாசினமைட் கலந்தவை. இவை கண்களுக்கடியில் பாதிப்படைந்த பகுதிகள் நீரேற்றம் பெறவும், வீக்கம் குறையவும், கரு வளையங்கள் மறையவும் உதவி புரிகின்றன. 60 தாள்கள் (Patches) அடங்கிய பாக்கெட் விலை  Rs.695 - Rs.799/-

MCaffeine coffee Hydro gel under eye patches: இதிலுள்ள காஃபின் மற்றும் ஹையாலுரோனிக் ஆசிட், கண்களுக்கடியில் உள்ள மெல்லிய சருமத்தை நீரேற்றதுடன் வைக்கவும், வீக்கங்கள் மற்றும் கரு வளையங்கள் குறையவும் உதவிபுரிகின்றன. தூங்குவதற்கு முன் இந்த ஹைட்ரோ ஜெல் தாள்களைப் பயன் படுத்துவது அதிக நன்மை தரும். 30 ஜோடி (pair) தாள்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டின்  விலை Rs. 639/- to Rs. 799/-

Mamaearth Green Tea under eye patches: இவற்றிலுள்ள க்ரீன் டீ, கொல்லாஜன் மற்றும் நியாசினமைட் போன்றவை இயற்கை முறையில் உப்பலையும், வீக்கத்தையும் நீக்கி சிவந்த இடங்களை மென்மையாக சீராக்கவும், நீரேற்றம் பெறவும் உதவி புரிகின்றன. 30 ஜோடி பேட்ச்களின் விலை Rs. 799/-

Swiss Beauty Hydra Eye Serum Patches: உங்கள் பட்ஜெட்டுக்குள் கிடைக்கக் கூடிய தரமான, தினசரி உபயோகத்திற்கு ஏற்ற பொருள் இது. ஆலுவேரா கலப்பில், கொல்லாஜன் நிறைந்துள்ள இந்த பேட்ச்கள் கண்களுக்கு அடியில் உள்ள சருமத்தை மென்மையாகவும் உறுதியாகவும் மாற்ற உதவுகின்றன. 60 பேட்ச்களின் விலை Rs. 349/-

இதையும் படியுங்கள்:
2026 கோடைக்கால கொரிய பியூட்டி டிரெண்ட்ஸ்: மினிமலிஸ்ட் மேக்கப்புடன் இயற்கை பளபளப்பு!
best cooling eye patches

PIXI Fortif eye firming under eye patches: ரெட்டினால்,  கொல்லாஜன் மற்றும் ஹையாலுரோனிக் ஆசிட் ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருள், கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தின் உப்பலைக் குறைத்து உறுதிப்படுத்தவும், தேவையான அளவு நீரேற்றம் அளித்து கண்கள் பள பளப்புப் பெறவும் உதவுகிறது. மேலும் உடல் வயதான தோற்றம் தருவதை தடுக்கவும் செய்கிறது. ஒரு பாக்கெட்டின் விலை Rs. 2500/-

Quench Botanics Vitamin E under eye patch: கொரியன்  தயாரிப்புகளைப் பார்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் இது. இதில் உள்ள வைட்டமின் E மற்றும்  அவகாடோ பழமானது சருமத்திற்கு ஊட்டச் சத்துக்கள் அளித்து சருமம் பள பளப்புப்பெற உதவுகிறது. சரும் உப்பலை உடனடியாக நீக்கவும் உதவும்.  ஒரு ஜோடி பேட்ச்சின் விலை Rs. 200-250 வரை உள்ளது.

Seoul Skin Snail Musin under eye Serum Patches: இது ஹையாலுரோனிக் ஆசிட் மற்றும் நியாசினமைடுடன் ஸ்னைல் ம்யூஸின் (Snail Musin) சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த பேட்ச்களின் தயாரிப்பில் பாரபென் (Paraben) மற்றும் சல்பேட் (Sulphate) போன்ற இரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. மேலும் எந்த உயிரினங்களும் துன்புறுத்தலுக்குள்ளாவதில்லை. நம்பிக்கையோடு இதை வாங்கி உபயோகிக்கலாம். 32 ஜோடி பேட்ச்களுக்கான விலை Rs. 799 - 899.

மேலே கூறிய பாமரிப்பு சாதனங்களைப் பயன்படுத்தி நீங்களும் நற்பலன் பெறலாமே.

logo
Kalki Online
kalkionline.com