2026 கோடைக்கால கொரிய பியூட்டி டிரெண்ட்ஸ்: மினிமலிஸ்ட் மேக்கப்புடன் இயற்கை பளபளப்பு!

ஹைட்ரேட்டிங் சீரம், SPF, குஷன் ஃபவுண்டேஷன், ஷீட் மாஸ்க், மென்மையான புருவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு வேர்வை வந்தாலும் கலையாத, இளமையான மற்றும் சுவாசிக்கும் சருமத்துக்கான கொரிய கோடை அழகு ரகசியங்கள்.
korean-summer-beauty-trends
korean-summer-beauty-trends
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

2026 ஆம் ஆண்டின் கோடைக்காலத்திற்கான கொரிய பியூட்டி டிரெண்ட்ஸ் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் இயற்கையான மற்றும் இலகுவான பாணியில் உள்ளன. அவை வெப்பமான கால நிலைக்கு ஏற்றவாறு சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் காட்டுகின்றது. இயற்கையான, இளமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.

கண்ணாடி போன்ற சருமம் (Glass Skin/Dewy Glow):

கொரியாவின் அடையாளமான 'கிளாஸ் ஸ்கின்' கோடையில் இன்னும் சிறப்பம்சமாக உள்ளது. இது செயற்கை பளபளப்பு இல்லாமல், ஆரோக்கியமான ஈரப்பதம் கொண்ட சருமத்தைக் குறிக்கிறது. சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி, கண்ணாடி போல பளபளப்பாக மாற்றுவதே இதன் நோக்கம். ஹைலைட்டர்களை பயன்படுத்துவதற்கு முன் நல்ல தரமான 'ஹைட்ரேட்டிங் சீரம்' (Hydrating Serum) மற்றும் சன்ஸ்க்ரீன் (SPF30+) பயன் படுத்துவது அவசியம்.

பட்டர் மற்றும் கிளவுட் ஸ்கின் (Butter and Cloud skin):

கனமான ஃபவுண்டேஷன்களுக்குப் பதிலாக சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, வெண்ணெய் போன்ற மென்மையான அல்லது மேகமூட்டம் போன்ற பவுடரி (cloud) பூச்சு கொண்ட இலகுவான 'குஷன் ஃபவுண்டேஷன்' (Cushion Foundation) அல்லது பிபி க்ரீம் (BB Cream) பயன்படுத்துவது இந்த கோடையின் முக்கிய போக்காகும். இது சருமத்தை இயற்கையான மூச்சு விடக்கூடிய தன்மையுடன் வைத்திருக்கும்.

கண்ணுக்கு கீழே பிளஷ் (Under-Eye Blush):

கன்னங்களின் ஆப்பிள் பகுதியில் பிளஷ் போடுவதற்கு பதிலாக, கண்களுக்கு மிக அருகில், கண் இமைகளுக்குக் கீழே பிளஷ் பூசுவது 2026 இன் டிரெண்டாகும். இதன் மூலம் முகம் தூக்கலாகவும் (lifted), இளமையாகவும், குளிர்ச்சியாகவும் தோற்றமளிக்கும். அத்துடன் முகம் பார்ப்பதற்கு சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்யும். இது  முகத்திற்கு ஒருவித வெட்கமான, அப்பாவியான மற்றும் இளமையான தோற்றத்தைத் தருகிறது. பிங்க் அல்லது பீச் நிற க்ரீம் பிளஷ்கள் இதற்குச் சிறந்தது.

இதையும் படியுங்கள்:
பைக் ஓட்டுவதால் முகம் கருத்துப்போயிருக்கா? இனி கவலையே வேண்டாம்... இதோ 5 நிமிட தீர்வு!
korean-summer-beauty-trends

மென்மையான இயற்கையான புருவங்கள்:

அடர்ந்த மற்றும் கூர்மையான புருவங்களுக்கு பதிலாக, இயற்கையான முடி நிறத்தைவிட ஒன்று அல்லது இரண்டு ஷேட்ஸ் இலகுவான (lighter), நேரான மற்றும் மென்மையான புருவங்களை வரைவது தான் இந்த சீசனின் ட்ரெண்ட்.

மங்கலான உதடுகள் (Blurred Lip Tints): 

உதடுகளின் வெளிப்புறக் கோடுகள் தெரியாத வண்ணம் உதட்டின் மையப் பகுதியில் மட்டும் அடர் நிறத்தையும் (Cherry glaze), ஓரங்களில் மங்கலான தன்மையையும் கொடுக்கும் 'லிப் டின்ட்ஸ்' பயன்பாடு முக்கியமானது. இது இயற்கையான தடித்த உதடு போன்ற தோற்றத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
வேர்வை வந்தாலும் மேக்கப் கலையாது: நிபுணர்கள் கூறும் கோடைக்கால அழகு குறிப்புகள்!
korean-summer-beauty-trends

தாள் மாஸ்க்குகள் (Sheet Masks): 

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தப்படும் தாள் மாஸ்க்குகள், வெயிலில் அலையும் சருமத்திற்கு உடனடி குளிர்ச்சியையும், ஈரப்பதத்தையும் தரும். 

குறைந்தபட்ச மேக்கப் (Minimalist Makeup): 

கோடையில் அதிக மேக்கப் போடுவதைத் தவிர்த்து, லேசான BB கிரீம், லிப் டின்ட் (Lip Tint) மற்றும் தெளிவான மஸ்காரா போன்றவற்றை பயன்படுத்துவது ட்ரெண்ட். இது சருமத்தை சுவாசிக்க வைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com