
bleaching hair at home tips: பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் தற்போது பெரும் உற்சாகம் காட்டுகின்றனர். தலை முதல் பாதம் வரை பலவிதமான ஒப்பனை பொருள்களால் அழகை மேம்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.
அதில் ஒன்று தான் தலைமுடியை ப்ளீச் செய்து கொள்வது. கருப்பான தலைமுடியே அழகு என்று இருந்த காலம் மாறி தற்போது பல வண்ணங்களில் முடியை மாற்றிக் கொள்வது ஃபேஷன் உள்ளது. கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை ப்ளீச் செய்ய விரும்புகின்றனர்.
அழகு நிலையங்களில் ப்ளீச்சிங் அதிக கட்டணம் என்பதால் வீட்டிலேயே ப்ளீச் செய்து கொள்பவர்களும் உண்டு. ஆனால் வீட்டிலேயே தலைமுடியை எப்படி ப்ளீச் செய்வது, எவ்வளவு நேரம் அதை உங்கள் தலைமுடியில் வைத்திருக்க வேண்டும், மீளமுடியாத சேதத்தைத் தவிர்ப்பது எப்படி போன்றவற்றில் கவனம் அதிகம் வேண்டும்.
பொதுவாக தானே செய்யும் DIY முறையை முடி நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லை என்றாலும் சில பாதுகாப்பு எச்சரிக்கைகளோடு இதைச் செய்யலாம் என்கின்றனர்.
ப்ளீச் அதன் இராசயன மாற்றம் காரணமாக "ஆக்கிரமிப்பு" தயாரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இது முடியின் மேற்புறச் சுவரைத் திறந்து அதன் நிறத்தை (மெலனின்) கரைத்து முடியை சாயமிடுகிறது. நீங்கள் அதை எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவு புரதப் பிணைப்புகள் (கெரட்டின்) அழிக்கப்படுவது பாதிப்பு தரும்.
வீட்டில் செய்யும் ப்ளீச் குறித்த டிப்ஸ்கள் (bleaching hair at home tips):
உங்கள் முடி வகைக்கு ஏற்ற உயர்தர ப்ளீச்சை கவனமாக தேர்ந்தெடுக்கவும்.மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு ப்ளீச் முகவர்கள் அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு . துரதிர்ஷ்டவசமாக, சேதத்தைத் தவிர்க்க உதவும் பல மாற்றுப் பொருட்கள் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகள் உள்ளதா எனச் சரிபார்ப்பது அவசியம். ப்ளீச்சைச் சோதிக்க உதவும் பேட்ச் சோதனைகளை ப்ளீச்சை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு செய்ய வேண்டும். முன்கையின் உட்புறத்தில் சிறிய பகுதியில் இரண்டு துளிகள் முடி சாயத்தைத் தேய்க்கவும். 24 மணி நேரம் காத்திருங்கள்.
தோலில் உள்ள பகுதி சிவப்பாகவோ, அரிப்பாகவோ, கொப்புளமாகவோ அல்லது வீக்கமாகவோ இருந்தால், பாதகமான எதிர்வினை ஏற்பட்டுள்ளது, அதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ப்ளீச்சிங்கின் எந்தவொரு தயாரிப்பு படிவையும் அகற்ற, உங்கள் தலைமுடிக்கு ஏற்ற மென்மையான ஷாம்பூவால் நன்கு கழுவவும். ப்ளீச்சை அகற்ற உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசவும்.
ப்ளீச்சிங் செயல்முறையின் போது ப்ளீச் சீராகப் பரவ உங்கள் தலைமுடியை பகுதிகளாகப் பிரிக்கவும். இது ப்ளீச்சிங் செய்வதை எளிமையானதாக்கும்.
கையுறைகளைப் பயன்படுத்தி, ப்ளீச் கலவையை உங்கள் தலைமுடியில் தடவவும், வேர்களில் தொடங்கி கீழே செல்வதே சரியான முறை. கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் நிச்சயம் தேவை.
உங்கள் தலைமுடியின் நிறம் மற்றும் அமைப்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும் ப்ளீச்சிங்கின் கால அளவு. பொதுவாக அதிகபட்ச நேரம் 30 நிமிடங்கள் ஆகும். அதற்கு மேல் நீடித்தால், உடையக்கூடிய இழைகள் உட்பட கடுமையான சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எந்த விதமான நிறங்களையும் மேம்படுத்நி சீராக்கவும் ஒரு டோனரைப் பயன்படுத்துவது அவசியம். மேலும் தலைமுடியை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்க ஆழமான கண்டிஷனிங் சிகிச்சையைப் பயன்படுத்துவது சிறப்பு.
ப்ளீச் விஷம் என்பதால் ப்ளீச்சை விழுங்கும்போது அல்லது தோலில் , கண்களில் தெறிக்கும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தைகளை அருகில் விடாமல் இருப்பதில் அதிக கவனம் தேவை.
முடிக்கு ப்ளீச்சிங் செய்வது குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால் அல்லது அனுபவமில்லை என்றால், சிகை அலங்கார நிபுணரை அணுகுவதே நன்மை தரும்.