
கேரட்டில் ஏ,பி6 ,பி3 ,பி2 பொடாசியம் மற்றும் சி சத்து உள்ளன. இதில் பயோடினும் உள்ளதால் கேரட் ஆயில் முடி வளர்ச்சிக்கும் சிறந்தது.
கேரட் ஆயில் நன்மைகள்:
இதில் பீடா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் உள்ளதால் தலைமுடியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடியை அடர்த்தியாகவும் ஆக்குகிறது
கேரட் ஆயில் முடியின் வேர்கள் கால்களை நீரேற்றமாக வைக்கிறது. எந்த வித ஹேர் ஸ்டைலுக்கும் ஏற்றார் போல் முடியை நெகிழ்ச்சியாக வைக்கிறது. மேலும் இது சூற்றுச்சூழல் மாசுகளிடமிருந்துகாக்கிறது.
கேரட் ஆயிலில் ஏமற்றும் ஈ சத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதன் சூரிய அல்ட்ரா ஒளிக்கதிர் வீச்சில் இருந்து பாதுகாப்பு தருகிறது. மேலும் முடியில் பிளவு ஏற்படாமலும், வறண்டு போகாமலும் தடுக்கிறது.
பயன்பாடு
மூன்று டேபிள் ஸ்பூன் கேரட் ஆயிலுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் யோக்ஹர்ட் சேர்த்து முடியில் நன்கு தடவி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பூ வால் அலசவும்.
கேரட் ஆயில் hot treatment
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் கேரட் ஆயிலை வைத்து சூடுபடுத்தவும் இதை தலையில் நன்கு மசாஜ் செய்யவும். ஷவர் கேப் போட்டு தலையை மூடவும் அரைமணி நேரம் கழித்து அலசவும்.
கேரட் ஆயில் கண்டீஷனர்
ஒருபங்கு கேரட் ஆயிலுடன் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் வைக்கவும். இதைத் தலைக்கு தெளிக்கவும் பிறகு எந்த வித ஹேர் ஸ்டைலும் செய்யலாம்.
கேரட் ஆயில் சீரம்
இரண்டு டேபிள் ஸ்பூன் கேரட் ஆயிலுடன் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணை ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணை சேர்த்து இத்துடன் சில சொட்டுக்கள் ரோஸ்மேரி ஆயில் சேர்க்கவும். இதை தலைக்குத் தடவி மசாஜ் செய்யவும்.
நீரேற்ற கேரட் ஆயில் மாஸ்க்
ஒரு அவகேடோ பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கேரட் ஆயில்,ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் கலக்கவும். பிறகு இதை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து அலசவும்.
கேரட் ஆயில் rinse
ஒரு கப் க்ரீன் டீ டிகாக்ஷன் எடுத்து, அது ஆறியதும் இரண்டு டேபிள் ஸ்பூன் கேரட் ஆயில் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் கழித்து அலசவும்.
கேரட் ஆயில் எப்படி தயாரிப்பது
கேரட்டை வாங்கி நன்கு கழுவி துருவி வெயிலில் இரண்டு நாட்கள் காயவைத்து பிறகு தேங்காய் எண்ணை சேர்த்து திரும்பவும் ஒருநாள் வெயிலில் காயவைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.