

உதடுகள் கண்களுக்கு அடுத்த முக்கிய அங்கமாக, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கருவி என கட்டுரை விளக்குகிறது. பழங்காலத்தில் ரோஜா இதழ், பீட்ரூட், கத்தா போன்ற இயற்கை பொருட்களால் உதடுகளை அழகாக்கியதைச் சொல்கிறது. இன்றைய லிப்ஸ்டிக், லிப் பாம், லிப் ஸ்கரப் போன்ற தயாரிப்புகள் காய்கறி கொழுப்பில் இருந்து தயாராகி, உதடுகளுக்கு நீர்ச்சத்து, கொழுப்பு சத்து தருவதை விவரிக்கிறது.
முகத்தில் கண்களை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது உதடுகள். சந்தோஷம், சோகம் போன்றவற்றை கண்கள் எப்படி வெளிப்படுத்துகிறதோ அதைப் போலத்தான் உதடுகளும். சோகமாக இருந்தால் கீழ் நோக்கியும், சந்தோஷமாக இருக்கும்போது மேல் நோக்கியும் இருக்கும்.
உதடு அழகு பெற இயற்கையான முறைகளை கையாள்வது எப்படி?
சென்ற தலைமுறையில் லிப்ஸ்டிக், லிப் பாம் போன்ற அழகு சாதன பொருட்கள் கிடையாது. இயற்கையாகவே உதடுகளை அழகாக்கிட ரோஜா இதழ்கள், பீட்ரூட் சாறு, கத்தா பவுடர் என உபயோகித்தனர். முன்பெல்லாம் மீன் செதில்கள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் கொழுப்புகள் லிப்ஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. தற்போது காய்கறிகளில் கிடைக்கும் கொழுப்பினால் லிப்ஸ்டிக், லிப்ஸ்கரப் என பலவித தயாரிப்புகளில் கிடைக்கிறது.
கண்ணுக்கு அடியில் உள்ள சருமத்தை போன்று உதடுகளிலும் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. அதனால் அதிக குளிர், அதிக வெப்பத்தை உதடுகள் தாங்க முடியாமல் உடைந்து, காய்ந்து போய் விடும். இதற்கு சாப்ஸ்டிக் என்ற லிப் பாம் உதடுகளில் பூசலாம். பக்க விளைவுகள் இருக்காது. உதடுகளுக்கு நீர்ச்சத்தும், கொழுப்பு சத்தையும் கொடுக்கும்.
வாய்ப்பகுதியைச் சுற்றி உதடுகளின் ஓரத்தில் புண் இருக்கும். இதற்கு விட்டமின் ஈ உள்ள சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தினால் பிரச்னை சரியாகும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
கொழுப்பு சத்து குறைய குறைய உதடு சுருங்கி வயதான தன்மையை அடையும். அதற்கு வெளிப்புறத்தில் இருந்து ஊட்டம் தர வேண்டியது அவசியம். உதட்டிற்கு வாசலின் தடவுவது மிகவும் நல்லது.
வேறு எந்த மேக்கபும் இல்லாவிட்டாலும் லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக் கொண்டாலே முகம் பளிச்சென்று இருக்கும்.
தரமில்லாத தவறான லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் உதட்டில் வெடிப்பு ஏற்படும். உதட்டின் தோல் எரியும். ஈயோசின் என்ற பிக்மெண்ட் கலந்து செய்யப்படும் லிப்ஸ்டிக் தரம் குறைவாக இருக்கும்.
பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டினாலும் உதட்டின் ஓரத்தில் புண்கள் வரலாம். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கறுப்பாக இருக்கும் உதடு வெயிலில் இருந்து, குளிரிலிந்து பாதுகாக்கும்.அதில் மெலனின் நிறமி அதிகம்.
இரவில் ஒரு டீஸ்பூன் கிளிசரின் எடுத்து ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். காலையில் அதை துடைத்துவிட்டு பாலாடையைத் தடவி 15 நிமிடம் ஊறிய பிறகு கழுவி துடைத்திட உதடுகள் கருமை, வெடிப்பு இன்றி மென்மையாக இருக்கும்.
உதட்டை எச்சிலால் ஈரப்படுத்துவது தவறு. இதனால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியா உதட்டில் புண்கள், கருமையை ஏற்படுத்தி விடும்.
மேல் உதட்டில் இரண்டு ஓரங்களிலிருந்தும் மசாஜ் செய்து உதட்டிற்கு நடுவே கொண்டு வரவும். கீழ் உதட்டில் நடுவிலிருந்து மசாஜ் செய்து ஓரங்களுக்கு கொண்டு வரவேண்டும்.
A,e,i,o,u எழுத்துகளை மெதுவாக தொடர்ந்து இருபது நிமிடம் சொல்லலாம். சிலருக்கு தாடை பெருத்து இருக்கும். கழுத்திலிருந்து உதடு வரைக்கும் கைகளால் மேல் நோக்கி மசாஜ் செய்தால் குறையும். காலையும், மாலையும் ஐந்து நிமிடம் இந்தப் பயிற்சியை செய்யலாம்.
ஃபேரடிக் ஃபேஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை பார்லரில் செய்யப்படுகிறது. ஃபேரடிக் என்ற கரண்ட் கருவி மூலம் தாடைக்கு பயிற்சி கொடுத்து லூசான தசைகள் வலுவாக்கப்படுகிறது.
தலையணை இல்லாமல் தூங்கினால் தலை பின்னோக்கி செல்லும். இதனால் பருத்த தாடை குறையும்.
சிவப்பாக, மாநிறமாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக் உபயோகிக்க நன்றாக இருக்கும். கறுப்பானவர்கள் ரொம்பவும் டார்க் இல்லாமல், லைட்டாக இல்லாமல் தேர்ந்தெடுத்து போட நன்றாக இருக்கும்.
உதடுகள் பெரிதாக தெரிய முதலில் தேவையான வகையில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள வேண்டும். பின்பு வெள்ளை கலர் லிப்ஸ்டிக் கால் உதட்டின் நடுவில் தடவவும். இதனால் உதடு பளிச்சென்று பெரிதாக தெரியும்.
இவ்வாறு உதடுகளை பராமரித்து, அழகாக்கிட பார்க்க நன்றாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சரியான உதட்டு பராமரிப்புப் பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி எப்போதும் கவர்ச்சிகரமான மற்றும் ஆரோக்கியமான உதடுகளைப் பெறலாம்.
இயற்கையான முறைகளையும் எளிய பராமரிப்பு குறிப்புகளையும் பின்பற்றுவதன் மூலம், உங்கள் உதடுகள் எப்போதும் வறண்டு போகாமல் மென்மையாகவும், இயற்கையான சிவந்த பொலிவுடனும் மிளிரச் செய்யலாம்.