நீங்கள் வாங்கும் பட்டுப் புடவை அசல் தானா? பரிசோதிக்கும் 5 எளிய வழிகள்!

போலிப் புடவைகளைத் தடுத்து, உண்மையான மல்பெரி பட்டுப் புடவையைத் தேர்வு செய்ய உதவும் எளிய வழிகள்.
பட்டுப் புடவை
பட்டுப் புடவைGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல் பளபளப்பாக இருக்கும் எல்லாப் புடவைகளும் நல்ல பட்டுப் புடவை அல்ல என்பதே உண்மை. அசல் மற்றும் தூய பட்டு என்பது 100% இயற்கையான மல்பெரி பட்டு நூலால் நெய்யப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற சில்க் மார்க் முத்திரையைக் கொண்டிருக்கும். வெறும் பெயரையோ அல்லது செயற்கையான பளபளப்பையோ மட்டும் வைத்து பட்டின் தரத்தை முடிவு செய்யக் கூடாது.

இந்தியாவில் பலவகையான பாரம்பரிய பட்டுப் புடவைகள் இருந்தாலும் பயன்பாடு மற்றும் தரத்தின் அடிப்படையில் அவை பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பட்டு வகையும் அதனுடைய தரம், நெசவு மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறந்ததாக விளங்குகிறது.

பட்டு வகைகளும் அவற்றின் சிறப்புகளும்:

1. காஞ்சிபுரம் பட்டு:

தென்னிந்தியாவின் பெருமைக்குரியது. தடித்த மல்பெரி பட்டு நூலால் நெய்யப்படும் இது, பாரம்பரிய விசேஷங்களுக்கும் திருமணங்களுக்கும் மிகச்சிறந்த தேர்வாகும். மல்பெரி பட்டு நூலால், முறுக்கப்பட்ட தடிமனான இழைகளைக்கொண்டு, 'கோர்வை' முறையில் உடல் பகுதியும் பார்டரும் தனித்தனியாக நெய்யப்படும். இதில் பயன்படுத்தப்படும் அசல் வெள்ளி மற்றும் தங்க ஜரிகை இதற்கு ஒரு தனி கம்பீரத்தைத் தரும்.

2. மைசூர் பட்டு:

சுத்தமான மல்பெரி பட்டுக்குத் தரம் வாய்ந்தது. இது காஞ்சிபுரத்தை விட மென்மையானது, இலகுவானது (lightweight) மற்றும் தினசரி அல்லது எளிமையான பயன்பாட்டிற்கு மிகவும் வசதியானது. 98% வரை தூய பட்டுத் தன்மையை கொண்ட இது, எளிமையையும் கண்ணியமான தோற்றத்தையும் விரும்புபவர்களுக்கும் நீண்ட நேரம் அணிந்திருக்கவும் ஏற்றது.

3. பனாரஸ் பட்டு:

வட இந்தியாவின் பாரம்பரியம் மிக்க புகழ்பெற்ற பட்டு இது. இதில் முகலாய காலத்து மலர் மற்றும் கொடி டிசைன்களுடன், தங்கம் மற்றும் வெள்ளி நூல்களின் விரிவான புரோகேட் (Brocade) வேலைபாடுகளுக்குப் பெயர் பெற்றது. நேர்த்தியான ஜரி வேலைப்பாடுகள் மற்றும் மென்மையான மல்பெரி பட்டான இது திருமணங்களுக்குச் சிறந்தது.

பட்டுப் புடவை
பட்டுப் புடவைGemini image

4. ஆரணி மற்றும் திருபுவனம் பட்டு:

தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி பட்டுகள் இவை. ஆரணி பட்டு எடை குறைவாகவும், தனித்துவமான இரட்டை வண்ணக் கலவைகளுடனும் இருக்கும். திருபுவனம் பட்டுகள் ஒற்றை வார்ப் நெசவு முறையில் (Single-warp weaving) பிரத்தியேக ஜரிகை வேலைப் பாடுகளுடன் மங்களகரமான நிகழ்வுகளுக்கு உகந்ததாகத் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
உண்மையான படோலா சில்க் புடவையை கண்டுபிடிப்பது எப்படி? போலிக்கு ஏமாறாமல் இருக்க டிப்ஸ்!
பட்டுப் புடவை

5. டஸ்ஸார் (Tussar) பட்டு:

காட்டுப் பட்டுப்புழுக்களில் இருந்து பெறப்படும் இது, இயற்கையான தங்க நிறமும் கரடுமுரடான, தனித்துவமான அமைப்பும் கொண்டது.

6. முஹா (Muga) பட்டு:

அசாம் மாநிலத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய அரிய வகை தங்க நிறப் பட்டு. இது அதிக நீடித்த தன்மையும் விலை உயர்ந்ததும் ஆகும்.

7. எரி (Eri) பட்டு:

'அகிம்சை பட்டு' என்று அழைக்கப்படுகிறது. பட்டுப்புழுக்களைக் கொல்லாமல் எடுக்கப்படும் இது மென்மையாகவும் கதகதப்பாகவும் இருக்கும்.

உண்மையான பட்டைக் கண்டறியும் எளிய வழிமுறைகள்:

போலி அல்லது ஆப்பரேட்டிவ் சில்க் (Art Silk) புடவைகளுக்கு மத்தியில் அசல் பட்டை சில எளிய சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

1. சில்க் மார்க் (Silk Mark):

மத்திய பட்டு வாரியம் வழங்கும் முப்பரிமாண (Hologram) லேபிள் உள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதாவது பட்டுத் துணியில் அல்லது லேபிளில் சில்க் மார்க் முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்குவது பாதுகாப்பானது.

2. தொடு உணர்வு சோதனை:

தூய பட்டை கையில் தொட்டுத் தேய்க்கும்போது அது மென்மையாகவும், லேசான வெதுவெதுப்பான சூட்டையும் கொடுக்கும். செயற்கைப் பட்டு குளுமையாகவும் வழுவழுப்பாகவும் மட்டுமே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜரிகை மத்தாப்பூ வேண்டாம்! இந்த தீபாவளிக்கு 'க்வயட் லக்ஸுரி' ட்ரெண்ட்!
பட்டுப் புடவை

3. எரிப்பு சோதனை:

பட்டு நூலில் இருந்து ஒரு சிறிய இழை எடுத்து எரித்தால், முடி (கூந்தல்) கருகும் வாசனை வரும். செயற்கை நைலான் அல்லது பாலியஸ்டர் போல இவை உருகுவதில்லை.

4. விலை காரணி:

தூய பட்டு நூல் மற்றும் கைத்தறி கூலி காரணமாக, ஒரு அசல் பட்டுப்புடவை குறைந்தபட்சம் 5,000 அல்லது அதற்கு மேல் மட்டுமே விற்கப்பட முடியும். விலை ₹2,000-க்கும் குறைவாக இருந்து 'சுத்தமான பட்டு' என்று கூறினால் அதன் தரம் சந்தேகத்துக்குரியதே.

5. பளபளப்பு:

உண்மையான பட்டு வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் பொழுது நிறம் மாறுபடும் தன்மைகொண்ட இயற்கை பளபளப்பைக் கொண்டிருக்கும்.

பட்டுப் புடவை வாங்கும்போது ஏமாறாமல், அசல் மற்றும் தூய மல்பெரி பட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளத் தேவையான அனைத்து ரகசியங்களையும் அறிந்துகொள்ளலாம்.