உண்மையான படோலா சில்க் புடவையை கண்டுபிடிப்பது எப்படி? போலிக்கு ஏமாறாமல் இருக்க டிப்ஸ்!

சந்தையில் கிடைக்கும் ப்ரிண்டட் புடவைகளுக்கும் பாரம்பரிய இரட்டை இக்கத் படோலா பட்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் இதோ.
படோலா புடவை
படோலா புடவைGemini image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

குஜராத்தில் பதான் என்ற இடத்தில் உயர்குல குடும்பங்கள் உபயோகிக்கும் இரட்டை இக்கத் சில்க் என்று அடையாளம் பெற்றுள்ளது படோலா சில்க் புடவைகள். இந்தப்புடவை தயாரிக்க அதிக நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன. இது ஏன் தனித்தன்மை வாய்ந்தது என்பதை இப்பதிவில் காண்போம்.

படோலா புடவை

படோலா புடவை என்பது கையினால் இரட்டை இக்கத் என்ற தொழில்நுட்ப முறையில் நெய்யப்படும் பட்டுப் புடவையாகும். இந்த முறையில் பாவும், நூலும் நெய்வதற்கு முன் சாயம் தோய்க்கப் படுகின்றன. இதனால் எம்பிராய்டரி டிசைன்கள் துணியிலேயே நெய்யப்படுகின்றன. இந்த நுட்பத்தில் ஒரே டிசைன் இருபக்கங்களிலும் இருக்கும்‌ உயர்குலத்தில் படோலா சேலைகள் அணிவது தனித்தன்மையானது.

இரட்டை இக்கத் நெசவு

இப்புடவையை நெய்யும் முன் ஒரு கிராஃப் பேப்பரில் கணக்குகள் வரையப்படுகிறது.‌ ‌ பிறகு பாவு மற்றும் நூல் பல நிறங்களில் எந்தெந்த இடத்திற்கு என்னென்ன வண்ணம் சேர்க்கப்பட வேண்டும் என்பதை அறிந்து நெய்யப்படுகிறது. dye செய்யப்பட்ட நூல்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து துணியில் டிசைன் சேர்வதற்குள் தகுந்தாற்போல் தரியில் சேர்க்கப்படுகிறது.

ஒரு படோலா புடவை தயாரிக்க நான்கு மாதங்களில் இருந்து ஒரு வருடம் கூட ஆகலாம். அதிக நாட்கள் தேர்ந்தெடுக்கும் டிசைனைப் பொறுத்து ஆகிறது.‌ மென்மையான பிங்க் படோலா சில்க் மற்றும் பீச் நிற சில்க் புடவைகளில் நல்ல ஜரிகை பார்டர் கண்ணைப் பறிக்கும்.

உண்மையான படோலா மற்றும் ப்ரிண்ட் செய்த படோலா

உண்மையான படோலா சில்க் புடவை தயாரிக்க அதிக நாட்கள் ஆவதால் படோலா ப்ரிண்ட் வகைகள் அதிகமாக கிடைக்கின்றன. இதில் சாதாரண நெய்தலையே காண முடியும். ஜார்ஜெட் மற்றும் சந்தேரி வகைகளைச் சொல்லலாம். ப்ரிண்டட் படோலா திருவிழாக் காலத்திற்கு ஏற்றதென்றாலும் உண்மையான படோலா சில்க் புடவை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அது ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.

படோலா புடவை
படோலா புடவைGemini image

படோலா வண்ணங்களும் டிசைன்களும்

படோலா டிசைன்களில் கிளிகள், யானைகள், பூக்கள மற்றும் நடனமாடும் மனிதர்களும் இடம் பெறும். நாரி குஞ்சம் என்ற டிசைன் படோலாவில் மிகப் புகழ் பெற்ற டிசைன் ஆகும்.‌ இதில் பெண்களையும் யானைகளையும் காணலாம்.‌ மேலும் பான் பட் என்ற படோலா புடவையில் வெற்றிலை டிசைனைக் காணலாம்.‌

இதையும் படியுங்கள்:
பட்டு முதல் லினன் வரை: புடவைகள் பாழாகாமல் பல ஆண்டுகள் புதிது போல் இருக்க 8 வழிகள்!
படோலா புடவை

மரூன் க்ரே, பஸ்டார்டு, ராயல் ப்ளூ என்று பல வண்ணங்களில் படோலா புடவைகளைக் காணலாம்.‌ இதில் இயற்கையான சாயம் சேர்ப்பதால் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் காணப்படும்.

படோலா சில்க் புடவை அணியும்போது தங்கம் மற்றும் குந்தன் நகைகளை அணிந்து சிறப்பாக இருக்கும். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளின்போது அணிவதற்கு ஏற்றாற்போல் உள்ளது. படோலா புடவைகள்‌ நவராத்திரி, தீபாவளி சமயங்களில் அணிவதற்கு ஏற்றது. படோலா, பனாரஸ் மற்றும் காஞ்சிபுரம் இவை அனைத்துமே தனித்தன்மை கொண்டது.‌

இரண்டு பக்கமும் டிசைன் உள்ள படோலா புடவைகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இதன் இரட்டை இக்கத் டெக்னிக் புதுமையானது. சமீபகாலமாக பனாரஸ் புடவைகளில் படோலா ஜரிகையை இணைத்துப் புதுமையான டிசைன்களை நெசவாளர்கள் பயன்படுத்தி உருவாக்குகிறார்கள். பனாரஸ் படோலா ஜரிகை புடவை ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களில் மார்க்கெட்டை கலக்கி வருகிறது.

இதையும் படியுங்கள்:
காஞ்சிபுரம் Vs பனாரஸ்: பட்டுச் சேலை பிரியர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய வித்தியாசங்கள்!
படோலா புடவை

படோலா புடவை பாதுகாப்பு

இதை புதிதாக வைக்க ட்ரை க்ளீன் செய்யவும். இதன்மீது வாசனை திரவியங்களை ஸ்ப்ரே செய்யக்கூடாது‌ இது நிறத்தைப் பாதிக்கும்‌. இதை ஒரு மஸ்லின் துணியில் சுற்றிவைப்பது நல்லது. ப்ளாஸ்டிக் பையில் வைக்க வேண்டாம். பயன்படுத்திய பிறகு சிறிது நேரம் காற்றில் வைத்து பிறகு மடித்து வைக்க வேண்டும்‌. உங்கள் பொக்கிஷத்தில் பனாரஸ், காஞ்சிபுரம், தர்மாவரம் இவற்றோடு மென்மையான தனிச்சிறப்பு வாய்ந்த குஜராத் படோலா சில்க் புடவையும் இருக்கட்டும்.

அசல் படோலா பட்டுப் புடவைகளின் நெசவு நுட்பத்தையும், சந்தையில் கிடைக்கும் ப்ரிண்டட் ரகங்களில் இருந்து அதை எப்படிக் கண்டறிவது என்பதையும் தெரிந்துகொண்டு, சரியான பொக்கிஷத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com