கிளியோபாட்ரா: எகிப்திய ராணியின் திகிலூட்டும் மேக்கப் ரகசியங்கள்!

cleopatra eye shadow history
cleopatra eye shadow history
Published on

ரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், அழகு என்ற வார்த்தைக்குப் பக்கத்தில் கண்டிப்பாக கிளியோபாட்ராவின் பெயர் இருக்கும். எகிப்தை ஆண்ட கடைசி ராணியான இவர், தனது அறிவாற்றலால் மட்டுமல்லாமல், வசீகரிக்கும் தோற்றத்தாலும் ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி போன்ற ரோமானியப் பேரரசர்களைக் கட்டிப்போட்டவர். கிளியோபாட்ரா என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கூர்மையான மூக்கோ அல்லது தங்க நகைகளோ அல்ல, அவரது வித்தியாசமான கண் அலங்காரம்தான். 

இன்றைய நவீனப் பெண்கள் விரும்பும் Cat Eye, Smokey Eyes போன்றவற்றுக்கெல்லாம் முன்னோடி கிளியோபாட்ராதான். ஆனால் அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அந்த அலங்காரத்திற்குப் பின்னால் இருந்த ரகசியங்கள் வெறும் அழகு சார்ந்தவை மட்டுமல்ல, அது அறிவியல், மருத்துவம் கலந்தது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

விலையுயர்ந்த கற்களே வண்ணங்கள்!

இன்று நாம் கடையில் வாங்கும் ஐ ஷேடோக்களில் பலவிதமான ரசாயனங்கள் கலந்துள்ளன. ஆனால் கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்தில் இயற்கை மட்டுமே அவர்களுக்குத் துணையாக இருந்தது. கிளியோபாட்ரா தனது கண்களின் மேல் இமைக்கு அடர் நீல நிறத்தையும், கீழ் இமைக்குத் தர்பூசணி போன்ற பச்சை நிறத்தையும் பயன்படுத்தினார். இந்த நிறங்கள் சாதாரணச் செடிகளில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல.

நீல நிறத்திற்காக 'லாபிஸ் லாசுலி' (Lapis Lazuli) என்ற விலை உயர்ந்த நவரத்தினக் கல்லையும், பச்சை நிறத்திற்காக 'மலாக்கிட்' (Malachite) என்ற கனிமப் பாறையையும் பயன்படுத்தினார். இந்தக் கற்களை நன்கு அரைத்து, அதைத் விலங்குகளின் கொழுப்பு அல்லது காய்கறி எண்ணெயுடன் கலந்து பசை போல மாற்றித் தன் கண்களில் பூசிக் கொண்டார். இது அவருக்கு ஒரு தெய்வீகத் தோற்றத்தைக் கொடுத்தது.

இதையும் படியுங்கள்:
கருப்பு நிறம் பிடிக்குமா? இது உங்களுக்குத்தான்! Check it out!
cleopatra eye shadow history

ஈயம் கலந்த கருப்பு மை!

கிளியோபாட்ராவின் கண் அலங்காரத்தில் மிக முக்கியமானது அந்தக் கருப்பு நிற அவுட்லைன். இதை அவர்கள் 'கோல்' (Kohl) என்று அழைத்தனர். Galena எனப்படும் ஈயம் கலந்த தாதுப்பொருளை எரித்து, கருகிய பாதாம் பருப்பு மற்றும் களிமண் சேர்த்து இந்த மை தயாரிக்கப்பட்டது. இதை ஒரு குச்சியின் உதவியுடன் கண்ணின் ஓரத்தில் தொடங்கி நெற்றிப்பொட்டு வரை நீளமாக இழுத்து வரைவார். இது கண்களைப் பெரிதாகவும், ஈர்ப்பாகவும் காட்ட உதவியது.

அழகு Vs மருத்துவம்!

கிளியோபாட்ரா மேக்கப் போட்டதற்கு ஒரு மருத்துவக் காரணமும் உள்ளது. எகிப்தில் நைல் நதி பெருக்கெடுக்கும் காலங்களில் கண் சம்பந்தப்பட்ட நோய்களும், பாக்டீரியா தொற்றுகளும் மக்களுக்கு அதிகம் ஏற்படும். கிளியோபாட்ரா பயன்படுத்திய அந்த ஈயம் கலந்த மை, கண்களில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்டியது. இது இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்தாகச் செயல்பட்டது. எனவே, அவரது மேக்கப் அவரை அழகாகக் காட்டியது மட்டுமல்லாமல், அவரை நோய்களிலிருந்தும் பாதுகாத்தது என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

சூரியனிடமிருந்து பாதுகாப்பு!

பாலைவனப் பிரதேசமான எகிப்தில் சூரிய ஒளியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடும்போது கண்ணுக்குக் கீழே க்ரீம் பூசுவதைப் பார்த்திருப்போம். அதே தத்துவத்தைத்தான் கிளியோபாட்ராவும் பயன் படுத்தினார். அந்தக் கருமையான கண் மை, சூரிய ஒளி கண்களில் பட்டுப் பிரதிபலிப்பதைத் தடுத்து, கண் கூசுவதைக் குறைத்தது. இதனால் அவரால் யாரையும் நேராகவும் கூர்மையாகவும் பார்க்க முடிந்தது.

இதையும் படியுங்கள்:
கிளியோபாட்ரா முதல் நம் தாத்தா பாட்டி வரை - 4000 வருடப் பழைய ரகசியம்!
cleopatra eye shadow history

கிளியோபாட்ரா தன்னிடம் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, தன்னை அழகாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் வித்தையை அவர் நன்கு அறிந்திருந்தார். இன்று நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களுக்கு அடித்தளம் இட்டவர் அவரே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com