சன்ஸ்கிரீன் பற்றி மக்கள் நம்பும் பகீர் பொய்கள்.. உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!

வெயில் காலத்தில் மட்டுமே சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட, சருமப் பாதுகாப்பு பற்றி மக்கள் மத்தியில் பரவியுள்ள சில தவறான கட்டுக்கதைகளும் அதன் உண்மைகளும்.
Sunscreen usage tips
Sunscreen usage tips
Updated on

தற்போதைய காலகட்டத்தில் சரும பராமரிப்பில் சன்ஸ்கிரீன் பயன்பாடு பற்றி இணையத்தில் தினமும் பல வகையான தகவல்கள் உலா வருகின்றன. இதைப் பார்த்து நம்மில் பலரும் எதை நம்புவது எதை தவிர்ப்பது என்று குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறோம். சன்ஸ்கிரீன் பற்றி பல காலமாக மக்கள் மத்தியில் சில தவறான கட்டுக்கதைகள் ஆழமாகப் பதிந்துள்ளன. 

இந்தக் கட்டுக்கதைகளை நம்பி நாம் செய்யும் சிறிய தவறுகள் நமது சருமத்தை மிக மோசமாகப் பாதிக்கும். அப்படி மக்கள் கண்மூடித்தனமாக நம்பும் சில பிரதான சன்ஸ்கிரீன் பொய்களையும், அதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வெயில் காலத்தில் மட்டுமே தேவை!

இதுதான் பெரும்பாலான மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. வெயில் கொளுத்தும் கோடை காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றால் மட்டுமே சன்ஸ்கிரீன் தடவ வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், வானம் மேகமூட்டமாக இருக்கும் மழைக்காலம் மற்றும் பனிக்காலத்திலும் சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடையும். 

இந்தக் கதிர்கள் மேகங்களை எளிதாக ஊடுருவி நமது சருமத்தை பாதிக்கும் தன்மை கொண்டவை. எனவே எந்த சீசனாக இருந்தாலும் சரி, வெளியே செல்லும்போது இதைத் தடவுவது மிக மிக அவசியம்.

வீட்டிற்குள் இருக்கும்போது தேவையில்லை!

நான் எப்போதுமே வீட்டில் தான் இருக்கிறேன், எனக்கு எதற்கு சன்ஸ்கிரீன் என்று பலரும் வாதிடுவார்கள். நமது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் சூரியனின் குறிப்பிட்ட கதிர்களை மட்டுமே தடுக்கும் ஆற்றல் கொண்டவை. சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் கதிர்கள் அந்தக் கண்ணாடிகளை சுலபமாகத் தாண்டி வீட்டுக்குள் வரும். 

அதுமட்டுமில்லாமல், நாம் நாள் முழுவதும் பார்க்கும் மொபைல் மற்றும் லேப்டாப் திரைகளில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளியும் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும். ஆகையால் வீட்டிற்குள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் போடுவது சருமத்திற்கு ஒரு நல்ல கவசமாகச் செயல்படும்.

இதையும் படியுங்கள்:
பன நுங்குவின் மகத்துவங்கள்: ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு சுலபமான வழி!
Sunscreen usage tips

கருமை நிற சருமத்திற்கு அவசியமில்லை!

நமது இந்தியர்களின் சருமம் பொதுவாகவே சற்று கருமை நிறம் கொண்ட மாநிறமாகவே இருக்கும். கருமையான சருமம் கொண்டவர்களுக்கு இயற்கையாகவே மெலனின் என்ற நிறமி அதிகமாக இருக்கும். இது சூரிய ஒளியில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பைத் தந்தாலும், அது நூறு சதவீத முழுமையான பாதுகாப்பு கிடையாது.

புறஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்புகள் நிற பேதம் இன்றி அனைவரையும் சமமாகவே தாக்கும். எனவே நிறத்தைப் பற்றி கவலைப்படாமல் அனைவரும் இதைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

ஒரு முறை தடவினால் நாள் முழுவதும் பாதுகாப்பு!

காலையில் ஆபீஸ் கிளம்பும்போது ஒருமுறை தடவிவிட்டால் அந்த நாள் முழுவதும் சருமம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைப்பது மாபெரும் கட்டுக்கதை. நாம் தடவும் எந்த ஒரு சன்ஸ்கிரீனும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே வேலை செய்யும். அதன்பிறகு வியர்வை மற்றும் காற்றில் அது அழிந்துவிடும். முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையும் அதை மீண்டும் தடவுவது கட்டாயமாகும்.

இதையும் படியுங்கள்:
இனி பார்லர் போகத் தேவையில்லை! சந்தன ஃபேஸ் பேக் மூலம் முகத்தை ஜொலிக்க வைக்கலாம்!
Sunscreen usage tips

சன்ஸ்கிரீனை அழகு சாதனப் பொருள் என நினைப்பது மிகப்பெரிய தவறு, அது நமது சருமத்தைப் பல பிரச்சனைகளில் இருந்து காக்கும் ஒரு மருத்துவக் கவசம் ஆகும். இணையத்தில் பரவும் இதுபோன்ற அடிப்படையற்ற வதந்திகளை நம்பி உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். 

எந்த ஒரு சீசனாக இருந்தாலும், தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை ஒரு நல்ல பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் உங்கள் சருமம் எந்த ஒரு சுருக்கமும் இன்றி எப்போதும் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கப் பெரிதும் உதவி செய்யும்.

logo
Kalki Online
kalkionline.com