அழகு மோகம் ஆபத்தா? 'காஸ்மெட்டிக்ஸ்' அடிமைத்தனம் தரும் பேராபத்து!

சருமத்தைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என விலையுயர்ந்த கிரீம்களை வாங்கி குவிக்கும் இளசுகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
சருமப் பராமரிப்பு
சருமப் பராமரிப்புAI image
Updated on

அடிக்கடி கண்ணாடி முன் நின்று உங்கள் முகம் மற்றும் உடலின் சரும நிலையை பார்க்கிறீர்களா, அளவுக்கு அதிகமாக சரும பாதுகாப்பு பாராமரிப்பு கிரீம்களை வாங்குகிறீர்களா?. மேக் அப் இல்லாமல் வெளியே செல்ல தயங்குகிறீர்களா? உங்கள் சருமத்தை பற்றி அடிக்கடி பதட்டப்படுகிறீர்களா? உங்கள் சருமம் சீராக இல்லாத நிலை கண்டு வருந்துகிறீர்களா? தேவையே இல்லாமல் வயது மூப்பு தடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்களா? இதற்கெல்லாம் நீங்கள் ஆமாம் என்று சொன்னால் உங்களுக்கு ' காஸ்மெட்ரிகோரெக்ஸியா ' (Cosmeticorexia)எனும் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

காஸ்மெட்டிகோரெக்ஸியா என்பது, "குறைபாடற்ற" சருமத்தை அடைவதில் உள்ள, கட்டாயமான மோகத்தை விவரிக்கும் ஒரு நிலையை பற்றிய புதிதாக உருவாக்கப்பட்ட சொல்லாகும். இந்தச் சொல்லை அழகுகலை ஆய்வாளரும் எழுத்தாளருமான ஜெசிகா டிஃபினோ உருவாக்கினார்.

ஒரு காலத்தில் எளிமையான வழக்கமாக இருந்த சருமப் பராமரிப்பு, தற்போது 'டெர்மோரெக்ஸியா' (Dermorexia) என்று அழைக்கப்படும் ஒரு வெறியாக மாறியுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குறைபாடற்ற சருமத்தைப் பெறுவதற்காகப் பலவிதமான சரும தயாரிப்புகளையும், தேவையற்ற வழிமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.

சமூக ஊடகங்களில் வரும் பிராண்டுகள், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் பிரபலங்கள் வழங்கும் இடைவிடாத விளம்பரங்களால் சருமப் பராமரிப்பு மீதான மோகம் தூண்டப்படுகிறது. இது, குறைபாடற்ற சருமத்திற்கு இந்தப் பொருட்கள் அத்தியாவசியமானவை என்பது போலக் காட்டுகிறது. அதனை பின்பற்ற இளம் வயதினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

“மக்கள் தங்களுக்குப் பிடித்தமான இன்ஃப்ளூயன்சர்களையோ அல்லது பிரபலங்களையோ குறைபாடற்ற தோற்றத்தில் காணும்போது, அவர்களும் அதே போன்ற அழகை விரும்புகிறார்கள். இது, பொருட்களை வாங்கத் தூண்டும் ஒரு கட்டாயத்திற்கு வழிவகுக்கிறது. இந்தத் தோற்றங்களுக்குப் பின்னால் உள்ள அதிகப்படியான எடிட்டிங், ஏஐ ஃபில்டர்கள், ஒப்பனை மற்றும் ஒளி அமைப்பு ஆகியவற்றை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.” என்கிறார் அழகுக்கலை நிபுணரான பிரியங்கா வத்வானி.

சருமப் பராமரிப்பு
சருமப் பராமரிப்புAI image

சமூக ஊடகங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர் கலாச்சாரத்தால் பெரிதும் தூண்டப்படும் இந்த மோகம், தனிநபர்களை பெரும்பாலும் பருவ வயதில் மற்றும் இளம் பருவத்தினரை சிக்கலான, பல-படி நிலைகளைக் கொண்ட சருமப் பராமரிப்பு முறைகளை பொருந்தாத வகையில் பயன்படுத்த வழிவகுக்கிறது.

ஒவ்வொரு சருமப் பராமரிப்புப் பேக்கையும் பின்பற்றுதல், அடிக்கடி மாறும் சருமப் பராமரிப்பு வழக்கம், சரும சிறு குறைகளைப் பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப் படுவது. பழையவற்றை முடிப்பதற்கு முன்பே புதியவற்றை வாங்குவது. இந்த மாதிரியான சருமப் பராமரிப்பு மீதான அதீத ஈடுபாடு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்நிலை இறுதியில் உங்கள் சருமத்தை முற்றிலும் சிதைத்து விடும் என்கிறார்கள் சரும நிபுணர்கள். இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

நமது சருமம் இயல்பாக இருப்பதே சிறந்தது என்ற அணுகுமுறையைப் பின்பற்றுங்கள். சரும ஆரோக்கியம் காக்க உணவில் ரெயின்போ வர்ண பலதரப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பாஸ்ட் புட் உணவுகளை தவிருங்கள்.உடலை நிரோற்றமாக வைத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

வெளியே வெயிலில் செல்லும் போது உங்கள் சருமத்திற்கு உகந்த சன்ஸ்கிரீன் கிரிம்களை மட்டுமே பயன் படுத்துங்கள்.எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்திற்கு எந்த கிரீமும் தேவையில்லை. உலர்ந்த சருமம் கொண்டவர்கள் பெட்ரோலியம் ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்ரைசர்களை பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
பார்லி ரகசியம்: உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும் இயற்கை வழிகள்!
சருமப் பராமரிப்பு

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமான கிரீம்கள் தேவைப்படும். அதையும் சரும நல மருத்துவர்கள் ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும்.

வயது ஏற ஏற சருமம் அதற்கு தருதாற்போல மாற்றம் அடையும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதனை தவிர்த்து சருமத்தை பாதுகாக்கிறேன் என்று ஸ்ட்ராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நாமாக வாங்கி பயன்படுத்தும் சில காஸ்மெட்டிக் பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தி சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும், சில நேரங்களில் கருப்பு திட்டுக்களை ஏற்படுத்தும். தீவிர காஸ்மெட்டிக் என்று விளம்பரப் படுத்தப்படும் பொருட்கள் அபாயகரமானது.

விளம்பரங்களில் வரும் விலை உயர்ந்த சரும பராமரிப்பு பொருட்கள் தேவையற்றது, அதனால் ஒரு பயனும் இல்லை. சரும டாக்டர்கள் பரிந்துரைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் என்றால் பயன்படுத்தலாம்.அவர்கள் நமது சருமத்திற்கு உகந்த கிரீம்களை பரிந்துரைப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பாட்டி வைத்தியம்: தேன், ஆலிவ் எண்ணெய், தயிர் தரும் மாயாஜால அழகு ரகசியம்!
சருமப் பராமரிப்பு

சரும பாதுகாப்பு விஷயத்தில் அடிப்படையானவற்றை மட்டும் பயன்படுத்துங்கள். சரும காஸ்மெட்டிக் பொருட்கள் பயன்படுத்தும்போது பொறுமையாக இருங்கள்; முடிவுகள் தெரிய 4–6 வாரங்கள் ஆகும். ஆவேசமான அல்லது நவநாகரீகமான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். புதிய பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு சரும மருத்துவரை அணுகவும்.

செயற்கையான அழகு சாதனப் பொருட்களின் மீதான நச்சுத்தனமான மோகத்திலிருந்து விடுபட்டு, இயற்கையான முறைகள் மூலம் நிரந்தரமான பொலிவையும், மன அமைதியையும், ஆரோக்கியமான இயற்கையான சருமத்தையும் எளிதாகப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com