முகம் சுருக்கமா இருக்கா? ஒரே இரவில் இளமையா மாற இந்த ஒரு கிரீம் போதும்!

Skin Problems...
Natural Beauty tips
Published on

கோடை காலத்தில் வெயில் அதிகமாகும்போது சருமம் பல பிரச்னைகளை சந்திக்கிறது. எண்ணை வடிதல், வறண்டு போகுதல், நீர்சத்து குறைதல் மற்றும் சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சு பாதிப்பு என்று பல பிரச்னைகள் சருமத்திற்கு சவாலாக உள்ளன. சருமத்தில் ஈரப்பதம் இல்லாதுதான் கோடையில் வெப்பம் அதிகமாவதாலும் முகத்தில் பரு மற்றும் பிளவுகள் ஏற்படுகின்றன.

நம் சருமம் காலை 9 மணி வரை எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். அப்போது சில விஷயங்களை நாம் கடைபிடித்தால் சரும பாதிப்பைத் தடுக்கலாம். காலை 9:மணிக்குள் சில பராமரிப்பு விஷயங்களை பின்பற்றினால் சருமம் நீரேற்றம் ஆகவும் பொலிவாக்கும் இருக்கும் அந்த விஷயங்கள் என்னென்ன வென்பதைப் பார்ப்போம்.

பச்சை பால்

காலையில் முகத்தில் பச்சைப் பாலைத் தடவுவதன் மூலம் நம் முகத்துளைகள் சுத்தமாக்கப்படும். காய்ச்சாத பாலில் சிறிது உப்பு சேர்த்து முகத்தில் மசாஜ் செய்யவும். வெது வெதுப்பான நீரில் பிறகு கழுவவும்.

யோக்ஹர்ட்

காலையில் முகத்தில் யோக்ஹர்ட் தடவுவதன் முலம் பிசுக்கு நீக்கப்படுகிறது. முகம் நன்கு சுத்தமாகிறது. மேலும் தயிர் சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டாக செயல்படுவதால் முகத்தில் இறந்த திசுக்களை நீக்கி முகத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது

தேன்

முகத்தை நன்கு சுத்தம் படுத்திய பிறகு முகத்தில் தேன் தடவுங்கள். இது ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இருப்பதால் முகப்பருக்களைப் போக்கி பொலிவாக்கும் .இயற்கையான புத்துணர்ச்சிகிடைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் குளிர்ச்சி மற்றும் நீரேற்றம் பண்புகள் பிசுக்கைப் போக்கும். சிறிது மூல்தானி மிட்டியுடன் வெள்ளரிக்காய் ஜுஸ் கலந்து இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துத் கழுவ மிகுந்த பொலிவைத்தரும்.

தக்காளிக் கூழ்

கோடையில் முகத்தில் தக்காளிக் கூழைத்தடவ பிசுக்கைப் போக்கி பிரகாசத்தை தரும். மேலும் தக்காளியின் அமிலத்தன்மை முகத்திட்டுக்கள் மற்றும் கருமையை நீக்கும். மேற்கூறியவற்றை காலை 9 மணிக்குள் மேற்கெள்ள உங்கள் முகம் நான் முழுவதும் பொலிவாகவும் பிரகாசமாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.

வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய கொலாஜன் க்ரீம்

முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுத்து இளமையாக வைக்க கொலாஜன் மிக அவசியம். அத்தகைய கொலாஜன் கீரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சரும ஆரோக்கியத்திற்கு பேபி பவுடர்: பயன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்!
Skin Problems...

தேவையானவை:

பீட்ரூட். 1

கார்ன் ஸ்டார்ச். 1டேபிள் ஸ்பூன்

70 மி லி ரோஸ் வாட்டர்

ஆளி விதைகள் 2 டேபிள் ஸ்பூன்

ஆல்மண்ட் ஆயில். 1 டேபிள் ஸ்பூன்

ஜோஜோபா ஆயில். பத்து சொட்டுக்கள்

செய்முறை:

பீட்ரூட்டைத் தோல் சீவி துருவித்கொள்ளவும். இதிலிருந்து ஜுஸை ஒரு மஸ்லின் துணி கொண்டு வடித்துக்கொள்ளவும். பீட்ரூட்டில் அதிக ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உள்ளன. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

ஒரு வாணலியில் பீட்ரூட் ஜுஸ், ரோஸ் வாட்டர் மற்றும் கார்ன் ஸ்டார்ச் சேர்த்து சூடு செய்யவும் கலக்கிக் கொண்டே இருக்கவும். கலவை கெட்டியானதும் இறக்கி வைக்கவும். கார்ன் ஸ்டார்ச் முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து மென்மையாக்கும்.

மற்றொரு பானில் ஆளிவிதைகளை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். ஜெல் போன்று ஆனதும் இதை வடிகட்டி வைக்கவும். இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. அது மட்டுமல்லாமல் லிக்னன் ம்யுசிலேஜ் போன்றவை ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது.

ஆறிய பீட்ரூட் ஜுஸ் மற்றும் ஆளிவிதை ஜெல் இவற்றோடு ஆல்மண்ட் ஆயில் மற்றும் ஜோஜோபா ஆயிலை சேர்க்கவும். இது நல்ல சீபமாகச் செயல்படும்.

இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜ் ஜில் வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சருமத்தில் திடீர் மாற்றம்? எச்சரிக்கை! இது ஆபத்தானதா?
Skin Problems...

பயன்பாடு

மாலையில் முகத்தை சுத்தம் செய்து இந்த க்ரீமை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அதை இரவு முழுதும் வைத்து மறுநாள் வெது வெதுப்பான நீரில் முகத்தைத் கழுவ முகம் பளபளப்பாகும். பீட்ரூட் பிக்மெண்டேஷனைக் குறைக்கும்.

மேலும் இதில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளதால் மாதவிலக்கு போது ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையைத் தடுக்கும்‌ ஆளிவிதை நெகிழ்வாக்கி முகத்தின் லிபிட்டை சமன்செய்யும். ரோஸ் வாட்டர் அழற்சியைக்குறைத்து ஈரப்பதத்துடன் வைக்கும். கார்ன் ஸ்டார்ச் ஈரப்பதத்தை தக்க வைக்கும். ஆல்மண்ட் ஆயிலில் ஏ,டி,ஈ சத்துக்கள் முகத்தை மென்மையாக்கும். ஜோஜோபா ஆயில் நல்லசீபமாகச் செயல்பட்டு சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com