முடிகொட்டும் பிரச்னைக்கு முடிவு கட்டும் 5 பானங்கள் எவை தெரியுமா?

 problem of hair loss
Azhagu kurippugal
Published on

ண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி பிரச்னை. அந்த வகையில் முடி ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க காலை வேளையில் குடிக்கவேண்டிய ஐந்து இயற்கை பானங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. கற்றாழை சாறு:

கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் இருப்பதால் இவை உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை இரட்டிப்பாக்குகின்றன. அதோடு கற்றாழையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பொடுகு, அரிப்பு மற்றும் முடி எரிச்சலை குறைத்து மயிர்கால்களை வலுப்படுத்து கின்றன . காலையில் அரை கப் கற்றாழைசாறு குடிப்பதால், முடியின் அமைப்பு, பொலிவு மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

2. கேரட் ஜூஸ்:

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி சேதத்தை தடுத்து, முடிக்கு பளபளப்பையும் அடர்த்தியையும் தருகின்றது.

இதையும் படியுங்கள்:
தலைமுடி வளர்ச்சிக்கு இந்த ஐந்து சமையலறைப் பொருட்கள் போதுமே!
 problem of hair loss

3. நெல்லிக்காய் ஜூஸ்:

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இதிலிருந்து தயாரிக்கப்படும்ஜூஸை காலையில் குடிப்பதால் கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பதோடு, நெல்லிக்காய் சாற்றில் உள்ள நச்சுத்தன்மை அசுத்தங்களை அகற்ற உதவுவதால் பொடுகு, அரிப்பு போன்ற முடி பிரச்னைகள் நீங்குகின்றன.

4. இஞ்சி நீர்:

இஞ்சி நீர் விரைவான முடி வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளது .இஞ்சியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சுழற்சி பூஸ்டர்கள் உச்சந்தலையின் செயல்பாட்டை தூண்டி, மயிர்க் கால்களை வலுப்படுத்தி புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. காலையில் இஞ்சி நீரைக் குடிப்பதால் முடியின் அமைப்பு, பளபளப்பு மற்றும் நீளமாக வளர உதவுவதோடு, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு கப் தண்ணீரில் சிறிது இஞ்சி சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வடிகட்டி குடிக்கவும்.

இதையும் படியுங்கள்:
பனிக்காலத்தில் சரும அழகைப் பராமரிக்கும் விதங்கள்!
 problem of hair loss

5. சோம்பு தண்ணீர்:

சோம்பு தண்ணீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் , வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்வை குறைத்து மயிர்கால்களை பலப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பேணி கூந்தலுக்கு பொலிவைக் கொடுக்கிறது. சோம்பைஇரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடிக்கவும்.

மேற்கூறிய 5 பானங்களை காலையில் குடித்து வர முடி ஆரோக்கியம் மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com