

பெரும்பாலும் ராஜ்மா சாவல் (Rajma Chawal) சாதத்துடன் சேர்த்து உண்ணப்படும், இந்த ராஜ்மா சாவல் (Rajma Chawal) வட இந்தியர்களின் பிரதான உணவாகும். வட இந்திய வீடுகளில் பல ஆண்டுகளாக பெரும்பாலோனோர் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மதிய உணவாகவும், குழந்தைகளுக்கான பள்ளி நாட்களின் எளிய மதிய உணவாகவும் இதை சாப்பிடுவர்.
ராஜ்மா என்ப துகிட்னி பீன்ஸ், (Kidney Beans) என்று அழைக்கப்படும், சிறுநீரக வடிவிலான, சிகப்பு நிற பருப்பு வகை. புரதச் சத்து மிகுந்த இந்த பயறு வகை. வட இந்தியரின் உணவில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். இதனை வேகவைத்து, தக்காளி–வெங்காய மசாலாவோடு கலந்து, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளும் கிரேவியாக (Rajma Masala) சமைக்கிறார்கள்.
ஆனால், சரியான முறையில் சாப்பிட்டால் ராஜ்மா–சாவல் உடல் எடைக் குறைப்பிற்கும் உதவக்கூடும். உடல் எடை குறைக்க விரும்புவோர் சாதத்தின் அளவை குறைக்க வேண்டும். அதிக கார்போஹைட்ரேட் உள்ள அரிசியை குறைவாக சேர்த்து, ராஜ்மா குழம்பை அதிகமாக சேர்த்து சாப்பிடலாம். ராஜ்மா நார்ச்சத்து, தாவர புரதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இது நீண்ட நேரம் பசியை தாங்குவதோடு, சோர்வடையாமல் இருக்க உதவுகிறது. இது உடல் எடை குறையும்போது உடலுக்கு தேவையான சத்தையும் கொடுக்க உதவும்.
மேலும், வேகவைத்த ராஜ்மாவுடன் ஒரு பங்கு பச்சை காய்கறி கலவையை சேர்த்தால் நார்ச்சத்து மற்றும் மைக்ரோநியூட்ரியன்ட்கள் அதிகரிக்கும். இது உணவை எளிதாக சாப்பிட உதவுவதோடு, தேவையான சத்தையும் சமநிலையையும் தரும்.
ராஜ்மாவில் ஏற்கனவே புரத சத்து அதிகம் இருந்தாலும், உடற்பயிற்சி செய்பவர்கள் கூடுதலாக 200 கிராம் கிரீக் தயிர் சேர்க்கலாம். இது உணவின் புரத அளவை உயர்த்தி, தசை வளர்ச்சிக்கும் உதவும். மேலும், உணவின் சுவையையும் மேம்படுத்தும்.
ராஜ்மாவின் முக்கிய சிறப்புகள்:
ஊட்டச்சத்து: புரதம் (Protein), நார்ச்சத்து (Fiber), பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம்.
வடிவம்: மனித சிறுநீரகத்தைப் போல இருப்பதால் “கிட்னி பீன்ஸ்” என அழைக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம், உடல் எடை மேலாண்மை மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர், ராஜ்மா–சாவலை முழுமையாக தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. சாதத்தை குறைத்து, ராஜ்மா, சாலட் மற்றும் கிரீக் தயிரைச் சேர்த்து சாப்பிட்டாலே ராஜ்மா–சாவல் உடல் எடைக் குறைப்பிற்கு முக்கியமான உணவாக மாறிவிடுகிறது.