இளமை ததும்பும் முகம் வேண்டுமா? இதோ உங்களுக்காக சில 'நேச்சுரல் ஃப்ரூட்' ஃபேஷியல் டிப்ஸ்!

'Natural Fruit' Facial
'Natural Fruit' Facial
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மலா ஆரஞ்சு சாறுடன் இரண்டு மூன்று துளி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு ‌மெல்லிய காட்டன் துணியால் முகத்தில் தொட்டு ஒற்றி எடுக்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மறைவதுடன் நல்ல கலரையும், பளபளப்பையும் தரும்.

வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் இவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அதை சிறு மஸ்லின் துணியில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் இதை எடுத்து கண்களுக்கு மேல் சிறிது நேரம் வைக்க புத்துணர்வைத் தரும்.

ர்பூசணி ஜுஸை ஃப்ரிட்ஜில் வைத்து கட்டிகளாக ஆனதும் அதை எடுத்து முகம், கை, கால்களில் ஒற்றி எடுக்க சொரசொரப்பு நீங்கி சருமம் மிருதுவாகும். நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

ரஞ்சு பழத்தின் தோலை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வெந்தயத்தூளை சேர்த்து தலையை அலச பேன், பொடுகு, அரிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.

ரை டீஸ்பூன் ஜாதிக்காய் பவுடர், மாசிக்காய் பவுடர் அரை டீஸ்பூன் எடுத்து அன்னாசி பழச்சாற்றில் கலந்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ சருமம் பளிச்சென்று இருக்கும்.

மாதுளை ஜுஸுடன் வெட்டி வேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பருக்களின்றி பளிச்சிடும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையான பொலிவுக்கு கேரட் - பீட்ரூட்: வீட்டிலேயே செய்யக்கூடிய 6 எளிய டிப்ஸ்!
'Natural Fruit' Facial

கொட்டை எடுத்த பேரீட்சையை அரைத்து தர்பூசணி சாறுடன் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ டல்லான முகம் பொலிவாகும்.

ப்பாளி பழத்தை மசித்துக்கொண்டு அதை முகம், கழுத்து பகுதிகளில் தடவி கழுவிட கருமை நீங்கி முகம், சருமம் பளிச்சென்று இருக்கும்.

இவ்வாறு பல பழங்களை பேக்காக வீட்டிலிருந்தே போட்டு அழகை பாதுகாக்கலாம்.

-மகாலெட்சுமி சுப்ரமணியன்

logo
Kalki Online
kalkionline.com