

முடி உதிர்வு பிரச்சனையை நீக்கும் இயற்கை தீர்வுகள்
வீட்டிலேயே எந்தவித கெமிகல் கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படும் இயற்கை முடி மாஸ்க்குகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. அவகேடோ மற்றும் தேன் மாஸ்க்
இது வறண்ட பிளவுபட்ட முடிக்குச் சிறந்தது. அரை அவகேடோ பழத்தை மசித்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும். இதை தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசவும். முடிக்கு சாயம் போடுபவர்கள் வறட்சியை இது நீக்கும்.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை மாஸ்க்
தேங்காய் எண்ணெய் தலைமுடியை ஊடுருவிச் செல்லக்கூடியது புரதம் குறைந்தவர்களுக்கு ஏற்றது. ஆராய்ச்சிகளின்படி தேங்காய் எண்ணெய் புரத இழப்பை சரி செய்கிறதாம். முட்டையில் புரதம் உள்ளதால் முடி வலுவாக்கப்படும்.
ஒரு முட்டையை நன்கு அடித்து மென்மையாக்கி இரண்டு டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து தடவி 20 நிமிடம் கழித்து அலசவும்.
3. விளக்கெண்ணெய் மற்றும் ரோஸ்மேரி மாஸ்க்
இது உச்சந்தலைக்கு ஆரோக்கியமானது. விளக்கெண்ணெய் நல்ல கண்டீஷனராக சேயல்படும் இதை முடியின் உச்சந்தலையில் மட்டுமே தடவவும். இது முடி அடர்த்தியை அதிகரிக்கும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையுடன் 5 சொட்டு ரோஸ்மேரி ஆயில் சேர்த்து தலை மேல்பகுதியில் தடவி 45 நிமிடம் கழித்துத் கழுவவும்.
4. வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில்
பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து முடியில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும். இதன் மூலம் முடி வலுப்படும்.
5. ஆப்பிள் சிடார் வினீகர் மற்றும் பென்டோனைட் க்ளியர் மாஸ்க்
எண்ணெய்ப் பசை மற்றும் பொடுகுத்தொல்லை உள்ளவர்களுக்கு ஏற்றது. ஆப்பிள் சிடார் வினீகர் முடியின் பிஹெச் அளவை சமமாக வைக்கும். எண்ணையை நீக்கும்.
2 டேபிள் ஸ்பூன் பென்டோனைட் களிமண்ணுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகர் சேர்க்கவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலந்து முடியில் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும்.
6. ஆலோவேரா மற்றும் ஆர்கான் ஆயில்
ஆலோவேரா முடிக்கு ஈரப்பதத்தை தரும். அர்கன் ஆயிலில் உள்ள கொழுப்பு முடிக்கு பளபளப்பு தரும். முடிநுனிப் பிளவுகளை தடுக்கும்.
மூன்று டேபிள் ஸ்பூன் ஆலோவேராவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அர்கன் ஆயிலை சேர்க்கவும் இதைத் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். இதற்கு ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம்.
7. வெங்காய ஜுஸ் மற்றும் தேங்காய் எண்ணெய்
முடி இழப்பு மற்றும் முடி குறைவான இடங்களில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அரிப்பு, அழற்சி போன்றவற்றை தடுக்கக் கூடியது. சிறிது எலுமிச்சை ஜுஸ் சேர்த்து ஷாம்புவோடு வாஷ் செய்யலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் வெங்காய ஜுசுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை கலந்து தடவி 30 நிமிடங்கள் கழித்து அலசவும்.
8. மயோனைஸ் மற்றும் விளக்கெண்ணெய் மாஸ்க்
மிக வறண்ட முடிக்கு ஏற்றது மயோனைஸ் ஆயிலில் முட்டை கலந்திருப்பதால் தலை முழுவதும் பரவி நன்கு சுத்தமாக்கும். இது வேர்க்காலை நன்கு வலுவாக்கும் அடிக்கடி கலரிங் செய்பவர்களுக்கு இது சிறந்தது.
இரண்டு டேபிள் ஸ்பூன் மயோனைசுடன் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணை சேர்த்து முடியின் வேர்கள் காலிலிருந்து நுனி வரை தடவவும்.
9. பட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்
வறண்ட முடியை நீக்குகிறது. பட்டை தலைமுடியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது அரிப்பையும் குறைக்கிறது. இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சுடவைத்து அதில் ஒரு டீஸ்பூன் பட்டைப் பொடி சேர்க்கவும். இதைத் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசவும்.
10. எலுமிச்சை ஆப்பிள் சிடார் வினீகர் மற்றும் லாவெண்டர் மாஸ்க்
இது சிறந்த ஆஸ்ட்ரின்ஜென்டாக செயல்பட்டு முடியில் எண்ணைப் பசையை நீக்கும் இது பிஹெச்சையும் சமநிலையில் வைக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகருடன் தண்ணீர் சேர்த்து அதில் 2 டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜுஸ் 5 சொட்டுக்கள் லாவெண்டர் ஆயில் சேர்த்துக் கலந்து தடவவும். இதைத தடவி ஷவர் காப் (cap) போட்டு மூடவும் அரைமணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
மேற்கூறிய எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இயற்கை முடி மாஸ்க்குகளைப் பயன்படுத்தி பளபளபான வலுவான ஆரோக்கிய முடியைப் பெறலாம்.
உங்கள் முடி உதிர்வுப் பிரச்சனையை வேரோடு சரிசெய்வதன் மூலம், அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலைப் பெறுவீர்கள். இயற்கை பொருட்கள் முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, மீண்டும் முடி வளர்ச்சியைத் தூண்டி, உங்கள் கூந்தலை முன்பை விட ஆரோக்கியமாகவும், கம்பீரமாகவும் மாற்றும்.