அடர்த்தியான பளபளப்பான முடி வேண்டுமா? இந்த 5 ஹேர் மாஸ்க் போதும்!

உங்கள் முடியின் தேவையை அறிந்து, வீட்டிலேயே புரதம் மற்றும் ஈரப்பதத்தை சமன் செய்யும் சிறந்த ஹேர் மாஸ்க்குகள்.
ஹேர் மாஸ்க்
ஹேர் மாஸ்க்AI image
Updated on

5 வகையான ஹேர் மாஸ்க் தயாரிக்கும் எளிமையான செய்முறைகள்

திக கெமிகல்களின் பயன்பாடுகளால் உங்கள் முடிநுனியில் பிளவு எற்பட வாய்ப்புண்டு. இதற்குச் சரியான தீர்வு தருவது முடி மாஸ்க்குகள் ஆகும். முடியின் வேர்க்கால் பாதிக்கப்படும் போது கார்டெக்ஸ் வெளியே தெரிந்தால் அதனால் முடி சேதமாகிறது.‌‌ சிறந்த முடி மாஸ்க் என்பது புரதத்தையும், ஈரப்பதத்தையும் சமப்படுத்தும் விதத்தில் செயல்படவேண்டும்.‌

அதிக புரதம் முடி உடைதலை ஏற்படுத்தும்‌, அதிக ஈரம் உங்கள் முடியை பலவீனப்படுத்தும்‌. உங்கள் முடி மாஸ்கில் கெராடின், புரதம் மற்றும் அமைனோ அமிலங்கள் நிறைந்திருக்க வேண்டும்‌‌ அத்தகைய முடி மாஸ்க்குகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. தேன் மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்:

இரண்டு டேபிள் ஸ்பூன் தேனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து முடியில் தடவவும். தேன் சிறந்த நீரேற்றம் தரும்‌. ஆலிவ் ஆயில் முடியில் நன்கு ஊடுருவி சிறந்த கண்டீஷனரராக செயல்படும்.‌

இதை அப்படியே 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் மிக வறண்ட நிலையில் இருக்கும் முடிக்கு இது ஏற்றதாகும்.

2. அவகேடோ மற்றும் தேங்காய் எண்ணெய்:

ஒரு அவகேடே பழத்தை நன்கு மசித்து அதில் சிறிது சூடு செய்த இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும். அவகேடோவில் வைட்டமின்களும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. தேங்காய் எண்ணெய் ஊடுருவிச் சென்று முடியை வலுப்படுத்தும் 30 நிமிடங்கள் கழித்து அலச நல்ல பலன் தெரியும். புரதம் மற்றும் ஈரத்தன்மை தேவையான முடிக்கு ஏற்ற முடி மாஸ்காகும்.

3. முட்டை மற்றும் க்ரீக் யோக்ஹர்ட் மாஸ்க்:

ஒரு முட்டையை நன்றாக அடித்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் க்ரீக் யோக்ஹர்ட் சேர்த்து கலக்கவும். முட்டையின் புரதம் முடி வளர்ச்சியைத் தூண்டும்‌. யோக்ஹர்ட்டின் லாக்டிக் அமிலம் எக்ஸ்ஃபோலியேட் செய்து முடியை பொலிவாக்கும்‌. இருபது நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யலாம். குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்

4. வாழைப்பழம் மற்றும் பாதாம் ஆயில் மாஸ்க்:

சிக்கலான முடி உடையவர்களுக்கு சிறந்த மாஸ்க் 25 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யலாம். ஒரு பழுத்த வாழைப் பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆல்மண்ட் ஆயில் கலக்கவும்.‌ வாழைப்பழத்தில் இருக்கும் சிலிகா முடியை வலுப்படுத்தி பளபளப்பைக் கொடுக்கும்‌ ஆல்மண்ட் ஆயில் முடியை மென்மையாக ஆக்கும்.

ஹேர் மாஸ்க்
ஹேர் மாஸ்க்AI image

5. ஆப்பிள் சிடார் வினீகர் மற்றும் தேன்:

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகருடன் முன்று டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.‌ இந்த முடி மாஸ்க் உங்கள் முடியின் பி. ஹெச்சை சமன்படுத்தும்‌ இதன அமிலம் வேர்க்காலை மென்மையாக்கும்‌. வாரத்தில் ஒருமுறை இதைச் செய்யலாம். கெமிகல் மாஸ்கில் சிறந்தவை. அதிக பக்கவிளைவை ஏற்படுத்தாதவை.

ஹைட்ரோலைச்டு புரதம் இந்த ஹைட்ராலைச்டு புரதம் என்பது உங்கள் தலைமுடி சில கெமிகல்களால் பாதிக்கப்படும் போது பயன்படுத்துவது கெராடின் சில்க் மற்றும் கொலாஜன் புரதங்களை பயன்படுத்துவது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
நீங்க செம ஹேண்ட்சமா மாறணுமா? ஆண்கள் செய்யும் 9 ஆடை, ஸ்டைல் தவறுகளும்... அதற்கான தீர்வுகளும்!
ஹேர் மாஸ்க்

சிராமைடு மாஸ்க்:

முடியின் லிபிடுகளையே சிராமைடு என்பர். இது முடியின் ஈரத்தை தக்க வைக்கும்‌ முடிக்கு மிகச்சிறந்தது.

கெராடின் ரிப்பேர்:

இது முடிக்கும் தேவையான புரதங்களை தந்து வேர்க்காலை பாதுகாக்கும். சிக்கலான முடியிருப்பவர்களுக்குச் சிறந்த ட்ரீட்மெண்ட்.

மாலிகுலர் ட்ரீட்மெண்ட்:

நீங்கள் எந்த ஸ்டைல் செய்து கொண்டாலும் இந்த முறை உங்கள் முடியை பாதுகாக்கும்.

முடி மாஸ்க் பயன்பாடு:

உங்கள் வேர்க்கால்கள் சிறிது ஈரமாக இருக்கும் போதே முடி மாஸ்க் பயன்படுத்துங்கள். ஈரமாக இருக்கும் போது வேர்க்கால்கள் திறந்து இருப்பதால் அது ஊடுருவிச் சென்று நல்ல பலன் தரும். நீங்கள் மைக்ரோ ஃபைபர் டவல் பயன்படுத்துவது நல்லது‌. வேர்க்காலைவிட முடியில் அதிகம் தடவுங்கள் பெரிய பற்கள் உள்ள சீப்பு கொண்டு பரவலாக முடி மீது மாஸ்க் படும்படி செய்யுங்கள் அதிக நேரம் வைக்காதீர்கள். இது முடியை பலவீனப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் வைக்கலாமா, கூடாதா? இதோ தெளிவான விளக்கம்!
ஹேர் மாஸ்க்

நல்ல முடி சீரம் பயன்படுத்துங்கள்.‌ சிலிகான் அல்லது சைக்ளோமெதிகோன் சீரம் பயன்படுத்துங்கள் அர்கன் மற்றும் ஜோஜோபா பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் இரவு படுக்கும் உன் முடியின் நுனியில் சிறிது எண்ணெய் தடவுவதால் பிளவு தடுக்கப்படும்.

இந்த வழிமுறைகளை உங்கள் வாராந்திர ஹேர் கேர் வழக்கத்தில் சேர்ப்பதன் மூலம், எந்த விதமான பக்கவிளைவுகளும் இன்றி, salon போன்ற மென்மையான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com