
பெண்கள் பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். புதிய வகை நகைகளை வாங்கிப் பயன்படுத்துவதற்கு தயங்குகிறார்கள். ஆனால், தற்போது நவநாகரிக பெண்களுக்கு ஏற்றவாறு புதிய உலோகங்களில் நகைகள் எண்ணற்ற டிசைன்களில் சந்தையில் இருக்கின்றன. இந்தப் பதிவில் அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.
1. White gold:
வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் ஒயிட் கோல்ட் பிளேட்டினத்திற்கு பதிலாக உருவாக்கப்பட்டதாகும். இதில் 75 சதவீதம் தங்கம், 25 சதவீதம் நிக்கல், பல்லாடியம், சிங்க் ஆகியவை கலக்கப்பட்டுள்ளது. தங்கத்தை காட்டிலுமே வெள்ளை தங்கம் கீரல்கள், சேதம் ஆகியவற்றை நன்றாக தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கொண்டது.
2.Rose gold:
ரோஸ் கோல்ட் தங்கம் மற்றும் தாமிரத்தின் கலவையில் உருவாக்கப்பட்டதாகும். இது பார்ப்பதற்கு சற்று ரோஸ் நிறத்தைக் கொண்டிருக்கும். இந்த உலோகத்தை நகைகளில், வீட்டை அலங்கரிக்கும் பொருட்களில், எலக்ட்ரானிக் பொருட்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
3. Green gold:
கிரீன் கோல்ட் என்பது தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவற்றின் கலவையில் உருவானதாகும். இதை Electrum என்றும் குறிப்பிடுவார்கள். இது பார்ப்பதற்கு சற்று பச்சை நிறத்தில் இருக்கும்.
4. Black silver.
பிளேக் சில்வர் என்பது ஆக்ஸிடைஸ் செய்த சில்வராகும். சில்வரின் மேற்பகுதி சல்பைட்ஸூடன் சேரும் போது ரசாயன மாற்றத்தின் காரணமாக கருப்புநிறமாக மாறும். இதுவே பிளேக் சில்வராகும். இதனுடைய கருப்பு நிறமும், தனித்துவமான டிசைன்ஸூம், நுணுக்கமான வேலைப்பாடும் இதன் விலை சற்று அதிகமாக இருக்க காரணமாக உள்ளது.
5. Argentium silver:
அர்ஜென்டியம் சில்வரில் 96 சதவீதம் வெள்ளி இருக்கிறது. இந்த வெள்ளியில் ஜெர்மானியம் கலக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு வெண்மையான நிறத்தில் இருக்கும். இந்த வகை சில்வரில் சீக்கிரம் மங்கிப்போகும் பிரச்னை கிடையாது. இந்த சில்வரில் செய்யப்பட்ட நகையை அணிவதால், சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வராது. அர்ஜென்டியம் சில்வர் நகைகளை தினமும் அணிந்துக் கொள்ள பயன்படுத்தினாலும், குளிக்கும் போது கழட்டி வைத்து விடுவது நகை நீண்டநாள் உழைக்க வழிவகுக்கும்.
எனவே, பழைய நகைகளையே அணிந்துக் கொண்டிருப்பதை விடுத்து இதுப்போன்ற புது ஃபேஷன் நகைகளுக்கு மாறி அழகாக அசத்துங்கள்.