சரும அழகை அதிகரிக்கணுமா? இந்த 'எக்ஸ்ஃபோலியேஷன்' முறைகள் உங்களுக்குத்தான்!

Skin care tips
'Exfoliation' methods
Published on

மது அழகை மேம்படுத்திக்காட்டுவதில் சருமம் முக்கிய இடம் பெறுகிறது. மாசு மருவற்ற பட்டுப்போன்ற சருமம் ஆரோக்கியமான அழகின் ரகசியம். பொலிவிழந்த சருமத்திற்கு புத்துயிர் ஊட்டும் அழகுக்கலைகள் ஏராளம் உண்டு. அதில் ஒன்றுதான் எக்ஸ்ஃபோலியேட் (exfoliate) செய்யும் முறை. இதனால் ஆரோக்கியமான, அதிக பொலிவான தோற்றமுடைய சருமத்தை அடையலாம்.

எக்ஸ்ஃபோலியேட் என்பது சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த சரும செல்களை அகற்றுவதாகும், ஸ்க்ரப்கள் அல்லது பிரஷ்கள் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி மேனுவலாகவோ அல்லது AHAக்கள் மற்றும் BHAக்கள் போன்ற சொல்யூஷன்களை பயன்படுத்தி வேதியியல் ரீதியாகவோ செய்யப்படும் இந்த செயல்முறை அடைபட்ட துளைகளை அழித்து சரும அமைப்பை மேம்படுத்துகிறது, மேலும் புதிய, புதிய சரும செல்கள் மீண்டும் உருவாக்க அனுமதிக்கிறது, இது மிகவும் பொலிவான மற்றும் சீரான நிறத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த 2 முறைகள் பற்றிய விபரம் இங்கு:

Physical Exfoliation எனும் கை முறையில் நமக்கு நாமே இறந்த சரும செல்களை அகற்றலாம். மெல்லிய தானியங்கள், எக்ஸ்ஃபோலியேட்டிங் கையுறைகள், லூஃபாக்கள் கொண்ட முக ஸ்க்ரப்கள், பிரஷ்கள் அல்லது கடற்பாசிகளைப் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை பொலிவாக்கலாம். உதாரணமாக ஈரமான சருமத்தில் ஸ்க்ரப்பைப் பூசி, வட்ட இயக்கத்தில் 30 முதல் 60 வினாடிகள் மெதுவாக மசாஜ் செய்து பின் நன்கு கழுவி சருமத்தை உலர வைக்கவேண்டும்.

Chemical Exfoliation எனும் கெமிக்கல் முறையில் இறந்த சரும செல்களை நீக்க ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் (AHA) அல்லது பீட்டா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் (BHA) பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் செய்ய கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன் AHAக்கள் (கிளைகோலிக் அமிலம் போன்றவை) அல்லது BHAகள் (சாலிசிலிக் அமிலம் போன்றவை) கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி அடையலாம். குறைந்த அளவில் தொடங்கி சருமம் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு படிப்படியாக அதிகரித்தலும் குறிப்பாக அமிலங்களைப் பயன்படுத்தும்போது எப்போதும் மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதலும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான சருமம் வேண்டுமா? இதோ எளிய வழிகள்!
Skin care tips

அடிக்கடி எக்ஸ்ஃபோலியேட் செய்யவேண்டுமா? இல்லை சாதாரண சருமம் என்றால் வாரத்திற்கு 1-2 முறையும் சென்சிடிவான சருமத்திற்கு வாரத்திற்கு 1 முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையும், எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வாரத்திற்கு 2-3 முறையும், வறண்ட சருமத்திற்கு வாரம் 1 முறை அல்லது ஒவ்வொரு 10 நாட்களுக்கும், முகப்பருவினால் அதிக பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு எரிச்சல் இல்லாத மென்மையான வகையில் வாரத்திற்கு 2-3 முறை செய்வதும் நல்லது.

எக்ஸ்ஃபோலியேட் செய்வதால் சருமம் பெறும் நன்மைகள்:

இறந்த சரும செல்களை அகற்றி மேம்பட்ட மென்மையான சருமத்தை பெறவும், சருமத்துளைகளை மூடும் அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றவும் உதவுகிறது. மந்தமான சரும செல்களை நீக்கி சருமத்தில் பிரகாசமான நிறத்தை வெளிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
கண் இமைகள் அடர்த்தியாக வளரணுமா? இந்த 7 உணவுகள் போதும், மேக்கப் இல்லாமலே அழகு தேவதையாக மாறலாம்!
Skin care tips

சருமப் பராமரிப்பில், இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளை அடைத்து, செல் புதுப்பித்தலை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு முக்கியமான வழிமுறையாக எக்ஸ்ஃபோலியேஷன் இருந்தாலும் அடிக்கடி செய்வதை தவிர்த்து நமது சரும வகை மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்பு குறித்து ஆராய்ந்த பின் தகுந்த அழகுக் கலை நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் அதிகப்படியான எக்ஸ்ஃபோலியேஷன் சருமத்தில் சிவத்தல், எரிச்சல் மற்றும் பிற சரும பாதிப்பை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com