
முகத்தின் அழகை பெருக்கிக்காட்டுவது கருவிழிகள் மற்றும் இமைகளுடன் கூடிய அழகான கண்களே. ஒவ்வொருவரின் கண்களின் அமைப்பும் வண்ணங்கள் முதல் வடிவங்கள் வரை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனினும் இயற்கையாகவே மனிதருக்கு அழகைத் தரும் கண்களுக்கு மேலும் அழகூட்டினால் வெகு சிறப்பாக இருக்கும்.
அந்தக் காலத்தில் கண்கள் மீதுள்ள இமை முடிகள் அடர்த்தியாக இருக்கவும் கண்பார்வை கூர்மைக்கும் தூய்மையான விளக்கெண்ணெயை கண்கள் மீது பூசும் வழக்கம் இருந்தது. தற்போது கலப்படம் அதிகரித்து இதுபோன்ற இயற்கை முறைகள் மறைந்து வருகிறது. இருப்பினும் இப்போதும் தரமான விளக்கெண்ணெய் பயன்படுத்தி இமைகளின் அழகை மேம்படுத்தலாம்.
தற்போது ஐலைனர், மஸ்காரா, ஐஷேடோ என பல கண் ஒப்பனை பொருள்கள் வந்துவிட்டதால் கண் அழகை எளிதாக பேணலாம். கூடுதலாக செயற்கை கண் இமைகளும் தற்போது கிடைப்பது சிறப்பு.
இதோ இயற்கையாக கண் அழகை மேம்படுத்த சில நவீன ஒப்பனை டிப்ஸ்கள் உங்களுக்காக...
ஐ ஷேடோ அதே இடத்தில் நிலைக்கவும், வண்ணங்களை வெளிக்கொணரவும் உதவும் வகையில் ஐ ஷேடோ ப்ரைமரைப் பயன்படுத்துவதே முதல் ஸ்டெப். அதாவது இமைகளை பிரைம் (Prime) செய்து தயார் படுத்துங்கள்.
லைட் பேஸை (Base) உருவாக்க உங்கள் இமை முழுவதும் வெளிர் நிற ஐ ஷேடோ அல்லது ப்ரைமரைப் பயன்படுத்துங்கள். எடுத்துக்காட்ட உதவும்.
ஆடைகள் மற்றும் கண்களின் நிறத்திற்கு ஏற்ப சரியான ஐ ஷேடோ வண்ணங்களைத் தேர்வு செய்வது முக்கியம்.
நியூட்ரல் ஷேடுகள் (Neutral Shades) எனப்படும் இயற்கையான தோற்றத்திற்கு பழுப்பு, டூப் (taupe) அல்லது பீஜ் (beige) போன்ற நடுநிலை ஷேடோக்களைப் பயன்படுத்தவும்.
அடர்ந்த நிறங்கள் (Bold Colors) தரும் மிகவும் வியத்தகு தோற்றத்திற்கு நீலம், பச்சை அல்லது ஊதா போன்ற அடர்த்தியான வண்ணங்களைத் தேர்வு செய்யுங்கள்.
ஐ ஷேடோவைப் பயன்படுத்தும் துவக்கத்தில் முதலில் உங்கள் இமை முழுவதும், கண் இமை கோட்டிலிருந்து மடிப்பு வரை லேசான ஷேடோவை (Light Shade) பயன்படுத்துங்கள். நுட்பமான பரிமாணத்துடன் தெரிய இமை மடிப்பில் நடுத்தர ஷேடோ (medium shade) பயன்படுத்துங்கள். ஹைலைட்டாக இவைகளுக்கு மேலுள்ள புருவ எலும்பில் (brow bone) ஹைலைட் ஷேடைப் பயன்படுத்துங்கள்.
அடுத்து கண்களைக் கவரும் வகையில் காட்ட மை பென்சில் அல்லது லிக்விட் லைனரைப் பயன்படுத்துங்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பென்சில் அல்லது தரமான திரவ லைனரைத் தேர்வு செய்யவும்.
உங்கள் கண்களை உள் மூலையில் இருந்து லைனிங் செய்யத் தொடங்கி வெளிப்புறமாக நிறைவு செய்யுங்கள். மென்மையான தோற்றத்திற்கு லைனரை ஸ்மட்ஜ் (Smudge) செய்யுங்கள்.
மஸ்காரா கண் இமைகளை அழகு படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. மஸ்காராவைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் இமைகளை லேசாக சுருட்டுங்கள் அல்லது மடியுங்கள். அதன் பின் மேல் மற்றும் கீழ் இமைகளுக்கு மஸ்காராவை கண்களில் படாதபடி கவனமாக பயன்படுத்துங்கள்.
இவைகளுடன் இயற்கை தோற்றம் (Natural Look) பெற நடுநிலையான ஷேடோ மற்றும் நுட்பமான லைனரும் வியக்க வைக்கும் புகைபிடித்த கண் தோற்றம் பெற (Smoky Eyes) கருவண்ண ஷேடோ மற்றும் bold லைனரைப் பயன்படுத்தவும். அழகான பூனைகண் (Cat Eye) தோற்றத்தை உருவாக்க திரவ லைனரைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக கண்கள் மென்மையானவை என்பதால் கைகளை கழுவிய பின் ஒப்பனையைத் துவங்குங்கள். தவறுதலாக ஐ லைனர் போன்றவைகள் கண்களுக்குள் பட்டு எரிச்சல் தந்தால் கண்களைக் கசக்காமல் தூய்மையான நீரில் கழுவுவது நல்லது.
கண் ஒப்பனைக்கான பொருள்கள் வாங்கும்போது தகுந்த அழகுக் கலை கலைஞரை ஆலோசித்து உங்கள் கண்களின் தன்மைக்கேற்ப மென்மையான ஒப்பனை செய்வது அழகுடன் கண்களுக்கு பாதுகாப்பும் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.