
கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மைகொண்டது. அழகிய புருவம் கொண்ட பெண்கள் எந்தக் கூட்டத்திலும் எவரையும் கவர்வார்கள்.
புருவங்களை பராமரிக்க எளிமையான வழிகள் என்ன என்று பார்ப்போம்.
அழகா இல்லையே? என்று புருவத்தில் கை வைப்பவர்கள் அதன் பின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருமுறை த்ரெட்டிங் செய்தால் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் பருவங்களில் முடி வளர்ச்சி தாறுமாறாக மாறி முக அழைகையே கெடுத்துவிடும். திரெட்டிங் செய்யும் முன் பாத கண்களை சுற்றி எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். பின் கழுவிவிட்டு திரட்டிங் செய்தால் புருவம் அழகான வடிவத்துக்கு மாறிவிடும்.
சில பெண்களுக்கு வெறும் புருவத்துக்கும் இடையே முடி சேர்ந்து கூட்டு பருவம்போல இருக்கும் இந்த கூட்டு புருவ முடியை எளிதாக அகற்றலாம். கிழங்கு மஞ்சள் தூள், கஸ்தூரி மஞ்சள் தூள், கடலைமாவு சமஅளவு எடுத்து பாலில் கலந்து பசை போல ஆக்கி மூக்கின் நுனி ஆரம்பித்து புருவம் வரை திக்காக பூசி அரைமணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒற்றி எடுத்து இப்படி தொடர்ந்து செய்து வந்தால், அந்த இடத்தில் முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.
சில பெண்களுக்கு பெரிய முகத்தில் புருவங்கள் மிக அடர்த்தியாக இருப்பதும் ஒரு காரணம். இவர்கள் புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்துகொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத் தெரியும்.
சிலருக்கு புருவங்கள் இருப்பதே தெரியாது. குறைவாக இருக்கும். இவர்கள் உருவத்தை த்ரெட்டிங் செய்யும்போது மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று திக்காகவைத்துக் கொள்ளலாம்.
சில பெண்களுக்கு நெற்றி பெரியதாக இருக்கும். நெற்றியின் அளவை குறைத்துக்காட்ட இவர்கள் புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறிதாக காட்ட முடியாது. புருவத்தை மேலே தூக்கலாக தெரியும்படி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அகலம் தெரியாது. அழகான தோற்றமும் கிடைக்கும்.
நீள் வட்டமாக முக வடிவம் உள்ளவர்கள், லேசாக வளைந்து முனையில் கூர்மையான புருவம் குவர்களுக்கு அழகு தோற்றம் தரும்.
நீளமான முகத்துக்கு நேர்கோடு போன்ற புருவங்கள் அழகு . லேசாக கீழ் நோக்கி வளைந்ததுபோன்ற புருவமும் , அழகு ஊட்டும். பருவங்களை கண்களுக்கு சற்று வெளியே இருக்கும் படி பார்த்து ஷேக் செய்யவேண்டும். முகத்தின் நீளத்தை மறைத்து இயல்பாகக்காட்டும் இது. இப்படிப்பட்ட புருவங்கள் மேலும் அழகு ஊட்டும்.
சிறிய முகத்திற்கு புருவங்கள் ரொம்பவும் நீளமாக இருக்கக் கூடாது. எப்போதும் புருவங்களை ரொம்பவும் கீழ் நோக்கி வளைத்து ஷேப் செய்யக்கூடாது. அது இளமையான தோற்றம் தராது. முக வடிவை பொறுத்து புருவத்தின் வடிவத்தையும் மாற்றி முகத்தை அழகாக்கலாம்.
நிலவு போன்ற வட்டமான முகத்துக்கு வளைந்த புருவங்களை வெகு பொருத்தமாக இருக்கும். சராசரி அளவில் இருக்கும் முகத்திற்கு சாதாரண அளவில் உருவத்தை ஷேப் செய்யலாம்.
முகத்தின் நீளமும் அகலமும் ஒன்றுபோல இருக்கும் சதுர முகத்துக்கு மெல்லிய வளைந்த புருவங்களை அழகு.
நெற்றி அகலமாகவும், தாடை குறுகலாகவும், இதயம் போன்ற ஷேப்பில் இருக்கும் முகத்துக்கு, இருபுறமும் வளைந்தது போன்ற வில் தோற்றத்தில் தூக்கலாக இருக்கும் புருவம் பொருத்தம். இது நெற்றியின் அகலத்தைக் குறைத்துக் காட்டுவதுடன் குறுகிய தாடையையும் பேலன்ஸ் செய்து காட்டுகிறது.
புருவங்களில் முடி வளர விளக்கெண்ணெய் உதவுகிறது. விளக்கெண்ணெயுடன் சமஅளவு வைட்டமின் ஈ எண்ணெய் சம அளவு கலந்து இரவு தூங்கப்போவதற்கு முன்பாக உருவத்தில் தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
சின்ன வெங்காயச்சாற்றை எடுத்து காட்டனில் நனைத்து புருவத்தில் தினமும் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் புருவத்தில் தடவி கொண்டு தினமும் செய்து வந்தால், புருவத்தில் கூந்தல் வளர்ச்சி போல் அதிகமாக வளரும். மேலும் சரும கோளாறுகளையும் இது தீர்க்கும்.
வெந்தயத்தை நன்கு பசை போல அரைத்து இரவில் புருவத்தில் தடவிக்கொண்டு மறுநாள் காலையில் கழுவி விடவேண்டும். இது மாதிரி செய்து வந்தால் அடர்த்தியாக வளரும்.