
பெண்களில் யாருக்குத்தான் அழகாக இருக்க வேண்டுமென்று ஆசையில்லை? இதோ அதற்கு பயன்படும் அழகு குறிப்புகள்.
பீட்ரூட்டையும், ரோஜா இதழ்களையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவி வந்தால் நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.
கடலைமாவு, மஞ்சள்பொடி, தயிர் ஆகியவற்றைக் கலந்து கூழாக்கி, அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு, பிறகு முகத்தை நன்கு கழுவி வந்தால், முகத்தில் முடிவளர்வதைக் குறைத்து விடலாம்.
நன்கு கனிந்த வாழைப்பழத்தின் தோலில் சிறிதளவு சர்க்கரை தூவி முகத்தில் தேய்த்தால் ஃ பேஷியல் செய்த மாதிரி சருமம் மின்னும்.
கழுத்து கறுப்பாக இருப்பவர்கள், ஏதேனும் ஒரு ஷாம்பூவில் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் கழுத்தில் தடவி வைத்திருந்து மிதமான சுடுநீரில் கழுவி வர கறுப்பு நிறம் மறைய ஆரம்பிக்கும்.
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து மசாஜ் செய்து குளித்து வந்தால் கைகளின் நிறம் மேம்படும்.
வெது வெதுப்பான பாலில் கசகசா ஒரு டீஸ்பூன், தோல் எடுத்த இரண்டு பாதாம் பருப்பை ஊறவைத்து விழுதாக அரைத்து முகத்தில் பூசி வர நிறம் மிளிரும்.
கலப்படமில்லாத மஞ்சளை நீர்விட்டு அரைத்துக் குளித்தால் தேகம் பொலிவு பெறும்.
ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு தக்காளி பழத்தை சேர்த்து நன்கு பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறையத் துடங்கும்.
வேப்பிலை, கறிவேப்பிலையை சமஅளவு எடுத்து, நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, ஆறினதும் அந்த நீரைக்கொண்டு தலையை அலசினால் தலைமுடி கருமையாக வளரும். முடி உதிர்வதும் தடுக்கப்படும்.
ஒரு முழு கேரட்டுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து, விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் போடவும். இருபது நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகம் தக தகவென ஜொலிக்கும்.
அதிமதுரம், கசகசா போன்றவற்றை பால் சேர்த்து அரைத்து, வாரம் இருமுறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்துக் குளித்து வந்தால் நரைமுடி குறையும்.