

50 வயதுக்கு மேலும் உங்களது சருமம் 20 வயதுபோல இருக்க வேண்டும் என ஆசையா? அப்படியானால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் ஃபேஸ் மாஸ்க் மட்டும் பயன்படுத்துங்க. அப்படியே முகம் சும்மா தகதகன்னு மின்னும்.
இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறைப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால், பலரது முகத்தில் இளமையிலேயே முதுமை ஊஞ்சலாடுகிறது. இளமையிலேயே முகத்தில் வறட்சி, சுருக்கம், கரும்புள்ளிகள் ஏற்படுவதெல்லாம் சாதாரணமாக மாறிவிட்ட நிலையில், 30 வயதைக் கடப்பதற்கு முன்பாகவே, பலரது தோற்றம் முற்றிலும் மாறிவிடுகிறது. இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு சூப்பர் ஃபேஸ் மாஸ்க் ஒன்று உள்ளது. இதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது மூலமாக, முதுமை காலத்திலும் இளமையான தோற்றத்தைப் பெறலாம்.
சரி வாருங்கள், அந்த அற்புத ஃபேஸ் மாஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஆளி விதை - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு - 5
அரிசி கழுவிய தண்ணீர் - சிறிதளவு
கஸ்தூரி மஞ்சள் - ¼ ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஆளி விதை, பாதாம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் அவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து, அவற்றுடன் அரிசி கழுவிய நீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அந்தக் கலவையை எடுத்து வேறு கிண்ணத்தில் போட்டு, கஸ்தூரி மஞ்சளை சேர்த்து கலக்கினால், முகத்தில் மாயம் செய்யும் அற்புத ஃபேஸ் மாஸ்க் தயார்.
இந்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்னர் ஃபேஸ் மாஸ்கை முகம் முழுவதும் தேய்த்து, பத்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு அரை மணி நேரம் அப்படியே ஊறவிட்டு வெந்நீர் கொண்டு முகத்தைக் கழுவி சுத்தப்படுத்தினால், தகதகவென தங்க பஸ்பம் போல முகம் ஜொலிக்கும்.
இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்றுமுறை தொடர்ச்சியாக செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், தேமல், கருவளையம் போன்ற அனைத்து விதமான சரும பிரச்சனைகளும் நீங்கி, முகம் பிரகாசமாக மாறிவிடும்.