
தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கும் ஏ லைன் ஸ்கர்ட்டுகள் கொளுத்தும் வெயிலுக்கு மிகவும் உகந்தவை. ஏ லைன் ஸ்கர்ட்கள் ஏ என்ற எழுத்தை போன்ற வடிவத்தை உருவாக்குவதால் இந்தப் பெயர் பெற்றது. ஏ லைன் ஸ்கர்ட்டுகளின் பல்வேறு வகைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. கிளாசிக் ஏ லைன் ஸ்கர்ட்;
இதுதான் ஏ லைன் பாவாடையின் அடிப்படை பாணி. இது இடுப்பில் இறுக்கமாக பொருந்தி படிப்படியாக விரிவடைந்து முழங்கால்வரை நீளத்தில் இருக்கும். பாதம் வரை நீண்ட முழு நீளத்திலும் இந்த ஸ்கர்ட்டுகள் கிடைக்கின்றன. இவற்றை சாதாரண மற்றும் விசேஷ காலங்களிலும் அணிந்து கொள்ளலாம்.
2. உயர்ந்த இடுப்பு கொண்ட ஏ லைன் ஸ்கர்ட்; (High waist A line skirts)
இடுப்பு பகுதியில் இருந்து சற்றே மேலாக அணியக்கூடிய இந்த ஸ்கர்ட் கால்களை நீளமாகக் காட்டும். இது கிராப் டாப்ஸ் உடன் அணிய மேட்ச் ஆக இருக்கும். இந்த உடை நல்ல நாகரீகமான உடையாகும்.
3. மடிப்புகள் கொண்ட ஏ லைன் ஸ்கர்ட் (Folded A line skirts)
இந்த ஸ்கர்ட்டின் சிறப்பம்சமே இதிலுள்ள மடிப்புகள் தான். இது மிகவும் கட்டமைக்கப்பட்ட முறையில் அமைந்து நேர்த்தியான தோற்றத்தை தருகிறது. இதில் உள்ள மடிப்புகள் சிறிதாகவும், கத்தி மடிப்புகள் போன்று கூர்மையாகவும், அகலமாகவும், பெட்டி போன்ற பாக்ஸ் மடிப்புகளாகவும் இருக்கும். இந்த உடை விசேஷ காலங்களில் அணிய ஏற்றது.
4. பிரிண்டட் ஏ லைன் ஸ்கர்ட்;
இந்த வகையான பாவாடைகளில் பூக்கள், கோடுகள், போல்கா புள்ளிகள் அல்லது வடிவியல் அமைப்புகள் போன்ற வடிவங்களில் வருகின்றன. அவை அணிந்து கொள்ள அழகாகவும் ஆளுமைத் தன்மையையும் தருகின்றன. இவற்றை சாதாரண நிகழ்வுகளுக்கு அணிந்து கொள்ளலாம்.
5. டெனிம் (Denim) ஏ லைன் ஸ்கர்ட்;
டெனிம் துணியால் உருவாக்கப்படும் இந்த ஸ்கர்ட் பார்க்க சாதாரணமாக தோற்றமளித்தாலும் மிகவும் ஸ்டைலாக இருக்கும். இதை டி-ஷர்ட்டுகள் அல்லது பொருத்தமான டாப்புகளுடன் அணிந்துகொள்ளலாம்.
6. மேக்சி ஏ லைன் ஸ்கர்ட்;
இந்த வகையான ஸ்கர்ட் நீளமாக இருக்கும். கணுக்கால் வரை அல்லது பாதம் வரையும் நீண்டிருக்கும் இது நேர்த்தியாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும். சாதாரண நிகழ்வுகள், அன்றாடப் பயன்பாடுகள். கோடைகால சுற்றுலாக்களுக்கு இவற்றை அணிந்து கொள்ளலாம். இலகுரக டாப்ஸ் உடன் இவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
7. மினி ஏ லைன் ஸ்கர்ட்;
இது குட்டையான ஸ்கர்ட் ஆகும். முழங்காலுக்கு மேலே வரை தான் இதன் நீளம் இருக்கும். இது இளமைத் தோற்றத்தையும் நவ நாகரீகமாகவும் இருக்கும். பெரும்பாலும் ஸ்டைலான தோற்றத்திற்காக டைட்ஸ் அல்லது பூட்ஸுடன் அணியப்படுகிறது.
8. சமச்சீரற்ற (Asymmetrical ) ஏ லைன் ஸ்கர்ட்;
இந்தப் பாவாடைகளின் ஓரங்கள் சீரற்றவை. ஒரு பக்கத்தில் மற்ற ஒன்றை விட நீளமானதாக இருக்கும். ஆனாலும் இது ஒரு நவீனத் தோற்றத்தை சேர்ப்பதோடு, தனித்துவமாகவும் கண்ணைக் கவரும் விதத்திலும் தோன்ற செய்யும்.
9.தோல் அல்லது செயற்கை லெதர் பாவாடை ( Leather or faux leather A- line skirt)
தோல் அல்லது செயற்கை தோல் அல்லது செயற்கை நாரால் ஆன ஸ்கர்ட்கள் ஒரு கவர்ச்சியான தோற்றத்தை தருகின்றன. இதனுடன் மென்மையான ஸ்வெட்டர்கள் அல்லது மொறுமொறுப்பான சட்டைகள் போன்ற டாப்ஸ்களுடன் அணிந்து கொள்ளும் போது நவ நாகரிகத் தோற்றத்தை தருகிறது.
10. அடுக்குகள் கொண்ட ஏ லைன் ஸ்கர்ட் ( Tiered A-Line Skirt);
இந்தப் பாவாடைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட துணி அடுக்குகளை கொண்டவை. இவை பெரும்பாலும் விளையாட்டுத்தனமான அல்லது புதுமையான உணர்வை ஏற்படுத்தும். சாதாரண பயணங்களுக்கு ஏற்றவை.