
பன்னீர் ரோஜா இதழ்களுடன் சமஅளவு வேப்பிலை சேர்த்து அரைத்து, சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் பூசி, கால்மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பருக்கள், கரும்புள்ளிகள் உள்ள சருமம் பளபளக்கும்.
ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் கலந்து ஃபேஸ் பேக் போன்று முகத்திலும், கழுத்திலும் பூசி கால் மணி நேரம் ஊறவிடவும். பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட கருமை சரியாகும்.
ரோஜா இதழ்களை சில துளிகள் பால் விட்டு விழுதாக அரைத்து, உதடுகளின் மீது பூசினால் உதடுகளுக்கு இயற்கை நிறம் தருவதுடன் உதடுகளை பளபளப்பாக மாற்றும்.
ஒரு கைப்பிடி மல்லிகை பூவுடன் நாலு லவங்கம் சேர்த்து அரைத்து அதில் சுத்தமான சந்தனபொடி சிறிது கலந்து தண்ணீர் ஊற்றி குழைத்து, இதை முகத்திலும், கழுத்திலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் வெயிலில் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் முதலியவை நீங்கும்.
ஒரு கைப்பிடி செம்பருத்தி இதழ்களுடன், இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்து, இதை முகத்திலும் கழுத்திலும் பூசி அரைமணி நேரம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் கோடை காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை, இது தடுத்து முகத்துக்கு மினு மினுப்பைத் தரும்.
ஒரு கைப்பிடி செம்பருத்தி இதழ்களுடன் ஒரு டீஸ்பூன் பழுப்பு அரிசியை ஊறவைத்து நைசாக அரைத்து, முகத்தில் பேஸ் பேக் போல பூசி அரைமணி நேரம் கழித்து முகங்களை கழுவினால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகளுக்கு இது நிவாரணம் அளிக்கும்.
சாமந்திப்பூ இதழ்களை எடுத்து சில துளிகள் பால் கலந்து விழுதாக அரைத்து, இக் கலவையை முகத்திலும் கழுத்திலும் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் வெயிலால் கறுத்த முகம் இயல்பான நிறத்துக்கு மாறிவிடும். சரும நோய்கள் வராமலும் தடுக்கும்.
ஒரு கைப்பிடி அளவு மகிழம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து இக்கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கோடைக் கால சரும பிரச்னைகளை தடுக்கும். வேர்க்குரு, வேனல்கட்டி போன்றவற்றை விரட்டும்.
சூரியகாந்தி இதழ்கள் எடுத்து எலுமிச்சை ஜூஸ், சிறிது சர்க்கரை கலந்து விழுதாக அரைத்து முகத்தில் பூசி விரலால் மசாஜ் செய்யவும் கால் மணி நேரங்கழித்து முகம் கழுவினால முகத்தில் இருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் அகற்றி முகத்துக்கு இது இயற்கையான அழகு தரும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி அதில் சாமந்திப் பூக்களை போட்டு பாத்திரத்தில் அப்படியே மூடி வைத்து, இரவு முழுக்க ஊறியதும் ,மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் முகம் கழுவினால் கருமையான முகம் பளிச்சென்று மாறும்.
வாடாத தாமரையின் இதழ்கள் எடுத்து சிறிது பால் விட்டு விழுதாக அரைத்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் இது முகத்துக்கு நல்ல நிறத்தையும், மென்மையையும் கொடுக்கும் கோடை காலத்தில் வாரம் இரண்டு முறை இதை செய்யலாம்.
மரிக்கொழுந்து பூவின் சாறு இரண்டு டீஸ்பூன் எடுத்து அதில் சந்தன பொடி 2 டீஸ்பூன் கலந்து முகம், கழுத்திலும் ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் நல்ல நிறம் தரும்.