அடர்த்தியான கூந்தல் பெற இதை சாப்பிடுங்கள்!

முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர உதவும் 10 சூப்பர் உணவுகள்.
கூந்தல் வளர்ச்சி
கூந்தல் வளர்ச்சிAI image
Updated on

பொதுவாக அழகான கூந்தல் மேல் எல்லா பெண்களுக்கும் ஆசை தான். சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கூந்தலே அழகான கூந்தலாகும். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகை தருவது அவர்களின் அழகான தலைமுடி தான். ஆனால், இன்று பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலான பிரச்னைகளில் தலைமுடி பிரச்னைகளும் ஒன்று. முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்னைகளை சந்தித்து வருகின்றோம்.

இரும்புச்சத்து, புரதம், வைட்டமின்கள் இல்லாதது, அதிகப்படியான கவலை, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல்நலப் பிரச்னைகள் மற்றும் ஹார்மோன் வேறுபாடுகள் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

ஆரோக்கியமான கூந்தலுக்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. பசுமையான காய்கறிகள்: சர்க்கரை வள்ளிக்கிழங்கு- பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் C நிறைந்த இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியை வலுப்படுத்துகிறது. வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் முடி உதிர்வை குறைத்து, முடி உடைவதைத் தடுக்கும்.

பசலைக் கீரை இதில் உள்ள வைட்டமின் A, C, ஃபோலேட், இரும்புச் சத்து முடி உதிர்வைத் தடுத்து, உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் ' சி ', இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.அவை தலைமுடியை உடைந்துவிடாமல் பாதுகாக்கிறது.

2. பருப்பு வகைகள்: சோயா,அவரை விதை போன்ற பருப்பு வகைகளில் புரதம், இரும்பு, துத்தநாகம், பயோட்டின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.இவை தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

3. பழுப்பு நிற அரிசி: கார்போஹைட்ரேட், வைட்டமின் 'பி' மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு நிற அரிசி தலைமுடி உதிராமல் பாதுகாத்து,அவற்றை உறுதியாக்கிறது.

4.வைட்டமின்: தலைமுடி கருமை நிறத்தில் பளபளப்பாக இருக்க' பி'பிரிவு வைட்டமின் சார்ந்த பயோட்டின் தேவை.இது நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும் . முழு தானிய கோதுமை ரொட்டி தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.மேலும் இதில் துத்தநாகம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை தலைமுடியின் வேகமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.

5. பாதாம் மற்றும் பிரேசில் நட்ஸ்: செலினியம் எனும் சத்து இந்த கொட்டைகளில் உள்ளது.இது தலைமுடியின் வேரை உறுதியாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இவற்றில் ஆல்பா லினோலினிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உள்ளது. இவைகள் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த சத்துக்கள் நிலக்கடலையிலும் உள்ளது.

கூந்தல் வளர்ச்சி
கூந்தல் வளர்ச்சிAI image

6. வாதுமை: வைட்டமின்' ஈ', கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்பு , மெக்னீசியம் போன்ற தலைமுடிக்கு ஆரோக்கியமான சத்துக்கள் வாதுமை எனும் வால்நட் கொட்டைகளில் உள்ளது.இவை தலை முடிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குகின்றன

7. தயிர்- தயிரை உணவில் சேர்த்தால் முடி வேர்களை வலுப்படுத்தி, பொடுகை குறைத்து, முடியை மென்மையாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
காபி தூளை இப்படி யூஸ் பண்ணிப் பாருங்க... உங்க முடி காடு மாதிரி வளரும்!
கூந்தல் வளர்ச்சி

8. பாலாடைக்கட்டி: கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த இந்த பாலாடைக்கட்டி அடிக்கடி எடுத்துக் கொள்ள தலைமுடி நன்கு வளர உதவுகிறது. அசைவ உணவு தவிர்ப்பார்கள் இதனை அவைகளுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.

முட்டை- தலை முடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதற்கு முட்டை மிகச் சிறந்த உணவு.இதில் நிறைந்துள்ள புரதம், பயோட்டின், வைட்டமின்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியாக வளர உதவுகிறது. முட்டையை அவித்தோ, அல்லது ஆம்லெட், ஆப்பாயில் போன்றவைகளை ஏதேனும் ஒரு வகையில் தினமும் சாப்பிடுங்கள்.

9. இறைச்சி: வாரத்தில் இரண்டு முறையாவது கோழிக்கறி சாப்பிடுவது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. காரணம் கோழிக்கறியில் புரதம், வைட்டமின் 'பி', இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் சத்துக்கள் இருப்பதுதான் ‌.

10. மீன்: புரதச்சத்துக்கள், வைட்டமின் பி-12, ஒமேகா- 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த உணவுப் பொருள் மீன். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த உணவாகும்.இவை முடி உதிர்வதை தவிர்க்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வரண்டுபோன உதடுகளுக்கு விடை கொடுங்கள்: ஜொலிக்கும் உதடுகளைப் பெற எளிய டிப்ஸ்!
கூந்தல் வளர்ச்சி

தலை முடி ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு களுடன், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நாள்பட்ட மன அழுத்தமானது முடியை முன்கூட்டியே நரைக்க வழிவகுக்கிறது. எனவே, உடற்பயிற்சி அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிப்பது முக்கியமாகும். அதோடு இரவில் ஆரோக்கியமான தூக்கமும் முக்கியம்.

ஆரோக்கியமான முடி அழகு பெற உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். தலைமுடியை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், முடி உதிர்வு முழுமையாகக் கட்டுப்பட்டு, உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் பளபளப்பாக மாறுவதை உங்களால் நேரடியாக அனுபவிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com