அடர்த்தியான கூந்தலுக்கு இதோ சில எளிய வழிகள்!

For thick hair
Hair care tips
Published on

வேப்பங்கொழுந்தை கிள்ளி அதில் குப்பைமேனி என்கிற பச்சிலை கைப்பிடி அளவு மஞ்சள் ஒரு பெரிய துண்டு இவற்றுடன் தண்ணீர் தெளித்து மை போல் அரைத்து பெண்கள் தலை முடியில் தடவி ஒருமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும் இதன் மூலம் முடி உதிர்வது நிற்கும். 

சீரகம் ஒரு ஸ்பூன் கட்டி தயிர் நான்கு ஸ்பூன் ஒரு கீற்று தேங்காய் துண்டு இவற்றை அரைத்து கலைந்து தலையில் கால் மணி நேரம் மட்டும் தேய்த்து வைத்து சாதம் வடித்த கஞ்சியுடன் சீயக்காய் பொடி சேர்த்து தேய்த்து வரவேண்டும் முடி பளபளப்புடன் இருப்பதுடன் அழுக்கு துளியும் இன்றி முடி நன்கு கருகருவென்று வளர்ந்து அடர்ந்து வளரும்.

தேங்காய் பால் பிழிந்த சக்கையை தலையில் அடிபுறம் வரை நன்றாக தேய்க்கவேண்டும் இப்போது தலையோடு முடியையும் சேர்த்து துண்டால் ஈரத்தலையை முடிவதுபோல் முடிந்து கொள்ள வேண்டும் ஒருமணி நேரம் கழித்து மிதமான வெந்நீரில் தலையை அலச வேண்டும் இப்படி நாலைந்து முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை மறைந்துவிடும்.

எலுமிச்சம் பழ விதைகளையும் மிளகையும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து மை போல அரைத்து தலையில் பூசவேண்டும். லேசாக விறு விறு என்று இருக்கும் வாரத்துக்கு குறைந்தது இரண்டு நாட்களாவது பூசி நன்றாக ஊறிய பின் நார்த்தங்காய் சாறு பிழிந்து தேய்த்து பத்து நிமிடம் வைத்திருந்து சீகைக்காய் தேய்த்து குளித்துவிட்டால் பொடுகு நீங்கும் தலைமுடி பளபளவென்று துளி அழுக்கின்றி பஞ்சுபோல் இருக்கும் தலைமுடியும் நன்கு வளரும். 

தலைக்கு குளித்த பிறகு ஈரம் நன்றாக உலருவதற்கு முன் தலையில் எண்ணெய் தடவக்கூடாது அப்படி ஈர தலையுடன் எண்ணெய் தடவினால் நாளடைவில் முடிச்செம்பட்டை ஆகிவிடும் ஒரு சிலருக்கு மிகவும் விரைவில் நரைக்க ஆரம்பித்துவிடும்.

விடுமுறை நாளில் அதுவும் மதியத்தில் தலைக்கு குளியுங்கள் முடியை நன்கு காயவைத்து சாம்பிராணி போட்டுக்கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு பொருத்தமான ஜிமிக்கி கம்மலை தேர்ந்தெடுப்பது எப்படி?
For thick hair

நெல்லிக்கனிகளை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் செம்பட்டையான தலைமுடி சில நாட்களில் கருமையாக மாறும். 

இரண்டு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு தேங்காய் கீற்று இவற்றை அரைத்து தயிரில் கலந்து அரை மணி நேரம் தலையில் தேய்த்து சீகைக்காய் கொண்டு குளித்தால் தலைமுடி கொட்டாமல் நன்கு பளபளப்பாக மென்மையாக இருக்கும் முடி கொட்டுவதும் நின்றுவிடும். 

தலைமுடியை நன்கு வளர்க்க வேண்டும் என்றால் தலையை வேர்க்கவிடாமல் வாரத்துக்கு இரண்டு முறை தலையை தேய்த்து குளித்து விட வேண்டும். ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மறுமுறை வெந்தயம் இரண்டு ஸ்பூன் ஊறவைத்தது. ஒரு கீற்று தேங்காய் சீரகம் ஒன்றரை ஸ்பூன் வைத்து அரைத்து அதிகம் புளிக்காத தயிர் மூன்று ஸ்பூன் கலந்து தலையில் தேய்த்தால் கால் மணி நேரம் வைத்திருந்து சீகைக்காய் கொண்டு தலை தேய்த்து குளிக்கவேண்டும்.

பெரிய நெல்லிக்காயை இடித்து விதை நீக்கிக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தமான நல்லெண்ணெய் அரை லிட்டரும் தேங்காய் எண்ணெய் கால் லிட்டரும் கலந்து இடித்த நெல்லிக்காயினை  நல்லெண்ணையில் போட்டு மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்தால் முடி கருகருவென்று இருக்கும். 

சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்திப்பூ இஞ்சி பூண்டு அரை எலுமிச்சம் பழம் வெட்டி நன்றாக காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருகவென்று வளரும் தலைவலி எட்டிக் கூட பார்க்காது.

இதையும் படியுங்கள்:
ஜொலிக்கும் சருமத்திற்கு இரண்டே பொருட்களில் நான்கு டோனர்கள்!
For thick hair

தலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டும் என்றால் இருபது மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதில்  பத்து கிராம் கறிவேப்பிலை வெந்தயம் வெள்ளை மிளகு கலந்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும்.

காய்ச்சிய எண்ணெயை இரண்டு நாள் வெயிலில் வைத்து வெள்ளை துணி கொண்டு வேடுகட்டி வெயிலில் வைக்க வேண்டும். பிறகு தலைக்கு தடவி வரவேண்டும். சாதாரணமாக நன்றாக கருகருவென்று அடர்ந்து நீண்டு பளபளவென்று தலைமுடி செழிப்புடன் வளர செம்பட்டையாகாமல் முடியும். நுனியில் வெடிப்பு ஏற்படாமல் நன்கு ஆரோக்கியமாக வளர இது உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com