ஐ-லைனர் முதல் மஸ்காரா வரை: கண்களைக் கவரும் வித்தைகள்!


From eyeliner to mascara
From eyeliner to mascara
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

* மஸ்காரா, ஐ லைனர் போன்றவை எதிர்பாராதவிதமாக கண் கருவிழிப் படலத்தில் படும்போது தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேப்போல் ஒவ்வாமை பிரச்னை இருந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.  

* தூங்கும் முன் மேக்கப்பை கட்டாயமாக கலைத்து விட வேண்டும். இல்லாவிட்டால், கண்களில் எரிச்சல், சிவத்தல், வீக்கம் அல்லது தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

* ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை வாங்குவதற்கு முன் காலாவதி தேதி உள்ளிட்ட தகவல்களை சரிபார்ப்பது அவசியமாகும்.

* தவறான மேக்கப் காரணமாக ஒரு சிலருக்கு இளஞ்சிவப்பு கண் பொதுவான பிரச்னையாகும்.  

* மேக்கப் பொருட்கள் பெரும்பாலும் பாதுகாப்பு அம்சங்களுடன் தான் தயாரிக்கப்படுகிறது.  

* இருப்பினும், காலாவதியான அல்லது தரம் குறைவாக உள்ள பொருட்கள் பாக்டீரியாக்களின் பாதிப்புக்கு உள்ளாகிறது.

* இது வெண்படலம் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. 

* அசுத்தமான கான்டாக்ட் லென்ஸ்கள் எரிச்சல் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.  

* லென்சில் சிறிதளவு மேக்கப் பட்டாலும், ஒவ்வாமை பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

* கண் பிரச்னைகளை தவிர்க்க சில டிப்ஸ்!

* மேக்கப் பொருட்களை மற்றவர்களுடன் பகிரும்போது, கண் எரிச்சல், வெண்படலம் போன்றவைக்கான பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், முடிந்தளவுக்கு தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பளபளக்கும் முகத்தைப் பெற தேன் மற்றும் ஓட்ஸ் செய்யும் மேஜிக்!

From eyeliner to mascara

* குறைந்தப்பட்சமாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கண் மேக்கப் அயிட்டங்களை மாற்றுவது அவசியமானது என்பது தோல் மருத்துவர்களின் அட்வைஸாகும். 

* காரில் செல்லும்போது எதிர்பாராத நிலையில் கருவிழிப்படலத்தில் மேக்கப் பொருட்கள் படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, காரில் பயணம் செய்து கொண்டே மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.

* கண்களில் எரிச்சல், சிவத்தல் போன்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக அனைத்து மேக்கப் பொருட்களையும் மாற்ற வேண்டும். இதனால், தொற்று மேலும் பரவுவதை தவிர்க்கலாம்.

* இரவு தூங்கச்செல்லும் முன் கண் மேக்கப் அனைத்தையும் நீக்கிவிட்டு, தண்ணீரில் சுத்தப்படுத்த வேண்டும். அப்போது, சிறிது பாதாம், தேங்காய் எண்ணெயை தொட்டோ அல்லது பாலில் ஊறவைத்த பஞ்சு வைத்தோ, மெல்லிய காட்டன் துணியையோ பயன்படுத்தலாம்."

* இவற்றையெல்லம் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

-செளமியா சுப்ரமணியம்

logo
Kalki Online
kalkionline.com