பளபளக்கும் முகத்தைப் பெற தேன் மற்றும் ஓட்ஸ் செய்யும் மேஜிக்!

To get a glowing face
To get a glowing face
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சருமத்தில் இயற்கையான பளபளப்பு மற்றும் பொலிவை ஏற்படுத்தக்கூடிய எக்ஸ்ஃபோலியேட்டர்கள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

ஓட்ஸ்:

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். அத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய் சிறிது, பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி, சிறிய வட்ட இயக்கங்களில் மெதுவாக ஸ்கிரப் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட முகம் பளபளக்கும்.

சர்க்கரை:

இறந்த சரும செல்களை அகற்றவும், வயதான அறிகுறிகளை தோற்றுவிக்கும் சரும தொய்வை போக்கவும் உதவும் சர்க்கரை கொண்டு மிருதுவான சருமத்தைப் பெறலாம். ஒரு ஸ்பூன் சர்க்கரையுடன் அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து சருமத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட சருமத்தை சேதப்படுத்தாமல் பளபளக்கச் செய்யலாம்.

தேன்:

வறண்ட சருமத்திற்கு ஏற்றது. தேனில் சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. முகப்பரு மற்றும் சரும தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூள் கலந்து லேசாக சூடு படுத்தி சருமத்தில் தடவவும். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட ஊட்டச்சத்து மிக்க தேன் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

தயிர்:

ரெண்டு ஸ்பூன் தயிர் உடன் அரை ஸ்பூன் தேன் கலந்து மென்மையாக கலக்கி சருமத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவிவிட வறண்ட சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
புதுசா குழந்தை பெத்தவங்க இந்த நைட்டியை மட்டும் வாங்காதீங்க... நிபுணர்கள் சொல்லும் பகீர் காரணம்!
To get a glowing face

பப்பாளி:

பப்பாளியில் உள்ள பப்பேன் எனப்படும் நொதி, இறந்த சரும செல்களை நீக்குவதுடன் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இரண்டு பப்பாளித் துண்டுகளுடன் சிறிது தேன் கலந்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். அதனை சருமத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்து தடவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

கல் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் செய்யும் மேஜிக்:

அரை ஸ்பூன் கல்லுப்புடன் நான்கு சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். இவை சருமத்தில் உள்ள இயற்கை எண்ணையை அகற்றாமல் சருமத்தின் மேற்பரப்பில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பத்தே நிமிடத்தில் கோல்டன் குளோ - சிம்பிள் ஹோம் மேட் டிப்ஸ்!
To get a glowing face

முக்கிய குறிப்பு:

அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சில சமயம் இந்த இயற்கை பொருட்கள் சருமத்தில் சேதத்தை உண்டு பண்ணலாம். எனவே நன்கு அரைக்கப்படாத எந்த ஒரு இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டரும் சருமத்திற்கு ஏற்றதல்ல. குறிப்பாக கல் உப்பு, ஓட்ஸ் மற்றும் சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்தும்போது நன்கு கலந்து கரைந்துவிட்டதை உறுதிப்படுத்துவதில் அதிக கவனம் தேவை.

logo
Kalki Online
kalkionline.com