கெரட்டின் முடி சிகிச்சை: பட்டுப் போன்ற கூந்தலுக்கு வழி தேடுகிறீர்களா?

Keratin hair treatment
கெரட்டின் முடி சிகிச்சை
Published on

நம் அனைவருக்குமே நம் கூந்தல் கவர்ச்சியுடனும் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. தற்காலத்தில் எந்த வகை முடியையும் தகுந்த முறையில் சிகிச்சையளித்து அழகுறச் செய்ய அழகு நிலையங்கள் பல தயாராக உள்ளன. இப்பதிவில் நாம் கெரட்டின் முடி சிகிச்சை பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கெரட்டின் முடி சிகிச்சை என்றால் என்ன? (What is Keratin hair treatment?):

பிரேஸிலியன் கெரட்டின் சிகிச்சை என்றும் அழைக்கப்படும் இந்த வகை சிகிச்சை, கெரட்டினை அடிப்படையாகக் கொண்டு, இரசாயனப் பொருட்களின் துணையோடு அழகு நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது. கெரட்டின் என்பது நம் முடி, சருமம் மற்றும் நகங்களில் காணப்படும், நார்ச்சத்து அடங்கிய ஒரு வகைப் ப்ரோட்டீன்.

இதைப் பயன்படுத்தி வழ வழப்புடன் கூடிய ஸ்மூத்தான, சிக்கல் இல்லாத, சுருள் தன்மையற்ற, நேரான (Straight hair) முடியைக் கொண்டு வர அழகு நிலையங்களில் தரப்படும் சிகிச்சையே கெரட்டின் முடி சிகிச்சை. இந்த சிகிச்சையில், கெரட்டின், முடித்தண்டுகளை (Hair shaft) ஊடுருவிச் சென்று, மயிரிழைகளின் (Hair strands) மீது ஒரு அடுக்கு கெரட்டின் ப்ரோட்டீனை பூசி வைக்கிறது.

கெரட்டின் முடி சிகிச்சையின் நன்மைகள் (Benefits of Keratin hair treatment):

  1. கெரட்டின் முடி சிகிச்சை மூலம் சிதைவடைந்த முடி சீராகவும், முடியின் வறட்சி மற்றும் சிக்கல்கள் நீங்கி முடி ஈரத் தன்மையடையவும் பள பளப்புப் பெறவும் முடியும்.

  2. முடித்தண்டுகளின் மீது பூசப்பட்ட கெரட்டின் மேற்பூச்சு, முடி புற தோல் மீதுள்ள இடைவெளிகளை நிரப்பி முடித்தண்டுகளைப் பாதுகாக்கிறது.

  3. சூரிய உஷ்ணத்தின் பாதிப்பு மற்றும் தூசிகளால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுக்க உதவும் இந்த சிகிச்சை.

  4. முடி அலங்காரம் செய்ய தேவைப்படும் நேரத்தைக் குறைக்க உதவும்.

  5. சிகிச்சையின் பலன் 6 மாதங்கள் வரை நீடிக்கக் கூடும்.

  6. அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்ற சிகிச்சை இது.

கெரட்டின் முடி சிகிச்சை செய்யும் முறை (How is keratin hair treatment done?):

சிகிச்சை ஆரம்பிக்கும் முன் முடியை நன்கு சுத்தப்படுத்தி உலர வைக்க வேண்டும். உடைந்த முடி நுனியை சீராக்கவும், சிதைவுற்ற முடிகளை சரி செய்யவும் சிலர் முடியை வெட்டுவதும் ட்ரிம் பண்ணுவதும் உண்டு.

பின் அழகு நிலைய ஹேர் ஸ்டைலிஸ்ட், முடியை பகுதி பகுதியாகப் பிரித்து கெரட்டின் கரைசலை, ஒவ்வொரு முடி இழைகள் மீதும் படுமாறு தடவி விடுவார். கெரட்டின் கரைசலில் கெரட்டின் ப்ரோட்டீன் மற்றும் ஹேர் கண்டிஷன் செய்யும் பொருட்களும் கலந்திருக்கும்.

கெரட்டின் கரைசலை தடவிய பின், புளோ ட்ரய் (Blow-dry) உதவியால் அதிகப்படியான ஈரத்தன்மையை நீக்குவது அவசியம். அதன் பின் முடியை ஃபிளாட் அயனிங் (Flat ironing) செய்து, கெரட்டின் கரைசல் முடித் தண்டுகள் மீது வலுவாக ஒட்டிக்கொள்ளச் செய்வார்கள். இதன் மூலம் கெரட்டின் ப்ரோட்டீன் செயல்பட ஆரம்பித்து, முடி ஸ்மூத்தாகவும், பள பளப்பாகவும், சிக்கல் இல்லாமலும் மாறும்.

இந்த சிகிச்சை முடிந்த பின், முடியை கழுவி விடுவது, வாரிப் பின்னி விடுதல் போன்றவற்றிற்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறும் வழி முறைகளைப் பின் பற்றுதல்

அவசியம். கெரட்டின் முழுவதுமாக முடிக்குள் உறிஞ்சப் பட, 24-48 மணி நேரம் வரை தேவைப்படலாம்.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுகிறதா? இந்த 3 வெங்காய ரகசியங்கள் உங்கள் வழுக்கையை மாயமாக்கும்!
Keratin hair treatment

கெரட்டின் சிகிச்சைக்குப்பின் பின்பற்ற வேண்டிய முக்கிய மான வழிமுறைகள் (Maintaining results of Keratin hair treatment):

சிகிச்சையின் பலன்களைப் பாதுகாத்துப் பராமரிக்க உதவும் பொருட்களை தேர்ந்தெடுத்து உபயோகிப்பது, சல்ஃபேட் கலப்பில்லாத ஷாம்பு உபயோகிப்பது, ஹீட் உபயோகப்படுத்தாமல் தலையலங்காரம் செய்வது போன்றவை சிறந்த பலன் பெற உதவும்.

கெரட்டின் முடி சிகிச்சையின் பக்க விளைவுகள் (Side effects of Keratin hair treatment):

  • கெரட்டின் சிகிச்சை முடியை ஸ்மூத் ஆக்கவும், straight hair பெறவும் செய்யப்படுகிறது.

  • இந்த சிகிச்சையின்போது, இரசாயனப் பொருட்களின் காரணமாக, ஸ்கேல்ப் (Scalp) பில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகலாம்.

  • அலர்ஜியின் காரணமாக சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகலாம்.

  • கெரட்டின் கரைசலை அதிகமாக பூசி விட்டாலோ அல்லது கரைசலில் இரசாயனப் பொருட்கள் அதிகம் சேர்ந்திருந்தாலோ, முடி உலர்ந்து போகவும், உடையவும், நுனி வெடிக்கவும் காரணமாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
தலை முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தேய்ப்பது பற்றி ஆயுர்வேதம் என்ன கூறுகிறது தெரியுமா?
Keratin hair treatment
  • கெரட்டின் கரைசலிலிருந்து நச்சு கலந்த வாயு உற்பத்தியாகி, அது வெளியேறும் போது கண்கள், சருமம் மற்றும் மூச்சுக் குழாயில் பாதிப்பு உண்டாகக் கூடும்.

  • கொஞ்சமாக கரைசலை பூசி பரிசோதித்த பின் சிகிச்சையை தொடரலாம்.

பட்டுப்போல வழுக்கிக் கொண்டு முதுகுப் புறத்திலும், முன் பக்கம் கொஞ்சமுமாகவும் உங்கள் கூந்தல் வளைவு சுழிவின்றி படர்ந்து பார்ப்போரை கவர வேண்டுமா? உடனே அழகு நிலையம் செல்ல தயாராகுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com