
பாத வெடிப்பு நீங்க வெண்ணெய் பால் இரண்டையும் அடிக்க க்ரீம் போல் வரும். அதை பாதத்தில் தடவி பாலிஷ் செய்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
குளிர்காலத்தில் உஷ்ணத்தைக் கொடுக்கும் பொருட்களை கால்களில் தடவுவது நல்ல பலன் கொடுக்கும். கடுகு எண்ணெய் அல்லது கடுகு அரைத்த கலவையைத் தடவும்பேது கால்களுக்கு கதகதப்பு கிடைக்கும். கடுகில் சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்தும் பயன்படுத்த பாதங்கள் மின்னும்.
வாரத்தில் ஒரு நாள் மட்டுப் எலுமிச்சை சாறு எடுத்து பாதங்களின் மேல் கீழ் எல்லாம் நன்கு தேய்த்து விட்டு பத்து நிமிடம் உப்பு கலந்த வெது வெதுப்பான நீரால் கால்களை வைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கு சாறு அரை கப், எலுமிச்சை சாறு அரை கப், பால் கால் கப், பார்லி பௌடர் 3 டீஸ்பூன் இவை நான்கையும் கலந்து காலில் பூசி கழுவ பாதம் மின்னும்.
50 கிராம் வெள்ளை எள்ளுடன் 50 கிராம் கசசாவை அரைத்து அதில் 200 மி. லி நல்லெண்ணை கலந்து இதை காலில் தடவிவர பித்த வெடி மறையும்.
50 கிராம் நல்லெண்ணையை சூடுபடுத்தி அதில் இரண்டு அங்குல நீளமுள்ள மெழுகுவர்த்தியை தூள் பண்ணி போட்டு கரைந்த பின் ஆறியதும் அதை வெடிப்பில் தடவ அவை மறையும்.
மாம் பிசினை வெடிப்பு உள்ள இடங்களில் தடவிவர அவை மறையும்.
கண்டங்கத்திரி இலையை தேங்காய் எண்ணையில் வேகவைத்து காலில் தடவிவர வெடிப்பு குணமாகும்.
அம்மான் பச்சரிசி மலைப்பாதை கால்களில் பூசி வர வெடிப்பு மறையும்.
சுண்ணாம்பையும் விளக்கெண்ணையையும் கலந்து பூசி வர வெடிப்புகள் நீங்கும்.
ஒரு கொட்டில் துண்டை பாலில் நனைத்து ஆல்மண்ட் ஆயில் சேர்த்து வெடிப்புகளில் தடவிவர அவை மறையும்.
குங்கிலியத்தைப் பொடியாக்கி வெண்ணையில் கலந்து காலில் தடவிவர வெடிப்புகள் மறைந்து பாதம் மின்னும்.
அழகிய கைகள் வேண்டுமா இதையெல்லாம் செய்யுங்கள்.
பால் ஏடு எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறும், க்ளிசரினும் சேர்த்து படுக்கப் போகுமுன் கைகளில் தேய்க்கவும்.
சோப் மற்றும் டிடெர்ஜென்ட் கெடுதிகளை நீக்க வினீகர் கலந்த தண்ணீரில் கைகளைக் கழுவவும்.
க்ளிசரின், பன்னீருடன் வெள்ளரிச்சாறு கலந்து கைகளில் தேய்க்க கைகள் மிருதுவாகும்.
குளிர் காலங்களில் கைகள் வரண்டு போகாமல் இருக்க கார்பாலிக் அமிலத்தை வாசலினுடன் கலந்து தடவவும்.
கைகள் கடினமாக இருந்தால் ஒரு கரண்டி சர்க்கரையையும்,எலுமிச்சை சாறை கலந்து சர்க்கரை கரையும் வரை உள்ளங்கையால் தேய்க்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். சர்கரைக்குப் பதிலாக தேனும் உபயோகிக்கலாம்.
பீட்ரூட் விழுது ஒரு மேஜைக்கரண்டியும், ஒரு தேக்கரண்டி தேன் இரு துளி க்ளிசரின் கலந்து கொள்ளவும் இந்தக் கலவையை கைகளின் முன்புறமும் பின்புறமும் பூசிவிட்டு இரண்டு கைகளையும் விரித்து விரித்து மூடவும். இதனால் தோலின் முரட்டுத் தன்மை நீங்கி பட்டு போல் ஆகும்.
அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்வதும் கைகளுக்கு அழகு சேர்க்கும்.
முட்டையின் வெண்கரு மற்றும் பாலேடு கலந்து இரவில் கைகளில் தடவி மறுநாள் பச்சைப்பயறு மாவு போட்டுக்கழுவ விரல்கள் பொன்னிறமாகும்.