
நம்முடைய அழகான உடலை தாங்குவது பாதங்கள்தான் பட்டுப்போன பாதங்களை சேதப்படுத்தாமல் பராமரிக்க வேண்டுமே , பெரும்பாலான பெண்கள் முக அழகுக்கு கொடுக்கும் கவனிப்பை பாதங்களுக்கு கொடுப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை ஏனென்றால் முகம் மட்டும் பளிச்சு என இருந்தால் போதும் என்றும் பாதம் என்றால் எப்படி இருந்தால் என்ன என்று காட்டும் அலட்சிய போக்கே காரணமாகும்.
கால் பாதத்தை சுத்தமாக வைத்திருப்பவர்கள்தான் தன்னையும் தன் உடலையும் சுத்தமாகவும் அழகாகவும் பேணிக்காப்பார்கள் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர் அதுதான் உண்மையும் கூட.
உணவு சாப்பிடுவதற்கு முன்பு நாம் நம் கைகளை எவ்வாறு தேய்த்து கழுவி விட்டு சாப்பிடுகின்றோமோ அதைப்போலவே நம் கால்களையும் பாதத்தையும் நன்கு தேய்த்து கழுவவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
பாதங்களை எப்பவுமே ஈரப்பசை இல்லாமல் பாதுகாக்க வேண்டும் வெளியே எங்கு போய் வந்தாலும் உடனே பாதங்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாரம் இரண்டு முறை பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம் இதனால் உங்களுடைய பாதம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
எப்போதும் கால்களுக்கு ஏற்ற செருப்புகளை அணியவேண்டும் அதிக நேரம் நடக்கும்போது ஹீல்ஸ் வைத்த செருப்புகளை அணியக்கூடாது.
சிலருக்கு கால் பாதங்கள் வியர்க்கும் அதற்கு பாதங்களுக்கு டால்கம் பவுடர் தடவிய பிறகு செருப்பு அணியலாம்.
பாதம் சொரசொரப்பாக இருந்தால் கடலை மாவு எலுமிச்சம் பழச்சாறு பாலாடை மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எல்லாவற்றையும் கலந்து ஃப்ரிட்ஜில் சில நிமிடம் வைக்கவேண்டும். பிறகு பாதங்களில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவேண்டும்.
இரண்டு வாரத்துக்கு ஒருமுறை படுக்கும் முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை பாதத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் சுமார் பத்து நிமிடம் மசாஜ் செய்யவேண்டும் பிறகு பத்து நிமிடங்கள் கழித்து சுடுநீரில் கழுவவேண்டும் இதனால் பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
வெதுவெதுப்பான நீரில் உங்கள் பாதங்களை சிறிது நேரம் நனைத்து வைத்து சில நிமிடங்களுக்கு பிறகு நல்ல சுத்தமான டவலால் இதமாக துடைக்க வேண்டும்.
வீட்டில் நீங்களே தயாரித்த ரோஸ் வாட்டரை பாதங்களில் தடவி வைத்து சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடியும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவேண்டும் டவலால் மென்மையாக துடைக்க வேண்டும் பாதம் அழகாகும்.
தயிர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது கடைகளில் விற்கும் தரமான ஃபுட் கிரீமை பாதங்களில் தடவி இதமாக மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி டவலினால் துடைக்க வேண்டும்.
குளிக்கும்போது நம் கால்களையும் பாதத்தையும் விரல்களையும் விரல்களுக்கு இடையில் உள்ள இடுக்குகளின் அழுக்குகளையும் தேய்த்து எடுத்து பின்னர் ஒரு ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் நம் பாதமும் கால்களும் பளபளப்பாக பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஒன்றில் பாதியளவுக்கு மிதமான சூடுள்ள நீரையும் மற்றொன்றில் குளிர்ந்த நீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும் முதலில் சுமார் ஐந்து நிமிடம் சுடுநீரில் கால்களை வைத்து எடுக்கவேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரில் சுமார் ஐந்து நிமிடம் கால்களை வைத்து எடுக்க வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் கால் பாதத்தில் ஏற்பட்ட சோர்வு நீங்கும்.
இதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி பன்னீர் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம்பழத்தால் மற்றும் இரண்டு தேக்கரண்டி கிளிசரின் மூன்றையும் கலந்து பாதத்தில் தேய்த்து கழுவிவிட வேண்டும் இப்படி செய்து வந்தால் கால்களுக்கும் பாதத்திற்கும் மிருது தன்மையும் வசீகரமும் ஏற்படும்.