ஆலிவ் ஆயில்: கூந்தல் வளர்ச்சிக்கும், சருமப் பொலிவிற்கும் அருமருந்து!

Olive oil Beauty tips
Olive oil
Published on

ழகான கூந்தலையும், பளபளக்கும் சருமத்தையும் விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. அடர்த்தியான கருகருவென கூந்தல் பெண்களுக்கு ஒரு கூடுதல் அழகு. தலைக்கும், முகம் மற்றும் தோலுக்கும் ஆலிவ் ஆயில் தேய்த்துக் கொள்வதால் ஏற்படும் பலன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆலிவ் ஆயிலில் ஏ, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. ஆலிவ் ஆயிலில் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால்  கூந்தல் மற்றும் தோல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

நீங்களும் ஆலிவ் எண்ணெயை வாங்க ஆசைப்படுகிறீர்களா?

தலைமுடி அழகிற்கு உதவும் ஆலிவ் ஆயில்;

1. பொடுகுத் தொல்லையை நீக்குவதில் ஆலிவ் ஆயில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக ஸ்கேல்ப் எனப்படும் உச்சந்தலை உலர்ந்து விடுவதால் தான் பொடுகு வருகிறது. ஆலிவ் ஆயிலை  தினமும் உபயோகித்து வந்தால் தலையில் ஈரப்பதமாக வைக்கிறது அதனால் பொடுகு தொல்லை அடியோடு நீக்கப்படுகிறது.

2. இது தலை முடிக்கு நல்ல போஷாக்கு அளிக்கிறது. இயற்கையான கண்டிஷனரும் கூட. தலைமுடி உடைந்து போவதை தடுக்கிறது. கூந்தலை மென்மையாக்கி பார்ப்பதற்கு அழகாக வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஐஸ் வாட்டர் ஃபேஷியல்: உடனடிப் பொலிவுக்கு ஒரு குளிர்ச்சியான தீர்வு!
Olive oil Beauty tips

3. தினமும் ஆலிவ் ஆயிலை சில சொட்டுக்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவிக் கொள்வதால் தலையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அழிக்கப்படுகிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தலை முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. முடி வறண்டு போவதையும் தடுக்கிறது. பளபளப்பான தோற்றம் தருகிறது.

4. ஆலிவ் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி உச்சந்தலையில் தடவி தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும்.அரைமணிநேரம் கழித்து தலைக்குத்  தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி, முடிகொட்டுவதும் நின்று விடும். கூந்தல் கருகருவென்றும் அடர்த்தியாகவும் வளரும். செம்பட்டை முடி இருப்பவர் களுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால் செம்பட்டை நிறம் மாறி கருமை நிறம் கிடைக்கும்.

சரும அழகிற்கு ஆலிவ் ஆயில்;

1.   ஆலிவ் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும், இது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

2.   இதில் உள்ள  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் செயல்பாடுகளால் வயதான தோற்றத்தை தடுத்து இளமையாக வைக்கிறது.

3.   தினமும் தூங்கும் முன்பு இதை  உதடுகளில் தடவினால், உதடுகள் வசீகரமாக மென்மையாக, மாறும்.

இதையும் படியுங்கள்:
முகப்பருவால் ஏற்பட்ட கறைகள், தழும்புகள் நீங்க - செலவில்லாத வழிகள்!
Olive oil Beauty tips

4.   சின்னஞ்சிறு குழந்தைகளுக்குக் கூட ஆலிவ் ஆயிலை உடல் முழுதும் தடவி, சிறிது நேரம் காலை நேர இளவெயிலில் காட்டி,பின்பு பயத்தம்மாவு கொண்டு தேய்த்துக் குளிக்க வைத்தால், உடல் பளபளப்பாக மாறும்.

5.   தினமும் தூங்கும் முன்பு முகம், கை கால்களில் ஆலிவ் ஆயிலை தேய்த்து லேசாக மசாஜ் செய்து விட்டு தூங்கி எழுந்து காலையில் சோப்புப் போட்டு கழுவி வந்தால் சருமம் பளபளக்கும். முகச்சுருக்கத்தையும் தடுக்கும்.

- எஸ். விஜயலட்சுமி

நீங்களும் ஆலிவ் எண்ணெயை வாங்க ஆசைப்படுகிறீர்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com