
வறட்சியான செம்பட்டை நிறம் உடைய கூந்தலை உடையவர்கள் ஆமணுக்கு எண்ணையை கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
செம்பட்டை முடி மாறுவதற்கு காலை உணவில் செம்பருத்தி பூ அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.
தினமும் தேங்காய் பால் முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை சரியாகும்.
நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமையாக மாறும்.
தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்தில் முன்னர் ஆமணக்கு எண்ணையை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.
ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தாலும் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருப்பு கலராகும்.
முடி உதிர்வை தடுக்கும் வழிமுறைகள்.
ஒரு கப் தேங்காய் பாலில் ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து சாறு எடுத்து கலக்கி அதை கூந்தலின் வேர்க்கால்களில் படும் படி தேய்த்து அரைமணி நேரம் கழித்து சாதாரண குளிர்ந்த நீரில் தலையை அலசி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
சின்ன வெங்காயத்தை மை போல் அரைத்து கூந்தலின் மயிர் கால்களில் படும்படி தேய்த்து குளித்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும்.
50 கிராம் வெந்தயத்தை ஊறவைத்து மைய அரைத்து, அதனுடன் அயோடின் உப்பு 2 டீஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் நாலு டீஸ்பூன் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வது நாளடைவில் தடுக்கப்பட்டு முடி நன்கு வளரும்.
துவரம் பருப்பை முதல் நாள் ஊறவைத்து மறுநாள் நீர் வடித்து எடுத்து பால் சேர்த்து அரைத்து தலையில் பேக் மாதிரி போட்டு அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.
பசுமையான கருவேப்பிலையை, பால் விட்டு மைய அரைத்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலையை வெறும் நீரில் கழுவிவர முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி நன்றாக செழித்து வளரும்.
நாட்டு வெங்காயத்தை (சின்ன வெங்காயம்) அரைத்து முட்டையின் வெள்ளை கருவுடன் கலந்து தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
தயிரை தலைக்குத் ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
மருதாணியையும் கருவேப்பிலையும் அரைத்து சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி ஆற வைத்து தடவி வர முடி கருமையாகவும் பளபளப்புடன் நீண்டும் வளரும்.
சின்ன வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து அதனுடன் சோற்றுக்கற்றாழை ஜெல் எடுத்து இவற்றை இஞ்சி சாறு, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பேக் போட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். முடி நன்கு வளரும் பளபளப்பாகவும் இருக்கும்.
நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்க வைத்து தேங்காய் எண்ணெயை அதில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
வைட்டமின் ஈ மாத்திரைகளையும், வைட்டமின் ஈச்சத்துள்ள உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு வந்தால் கூந்தல் உதிர்வது நின்று நன்கு முடிவளரும்.
தினமும் மதிய உணவில் அரை கீரை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நீண்ட கூந்தல் வளரும்.
முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
முடி வளர்வதற்கான அரோமா எண்ணெய்கள்.
ரோஸ்மேரி என்கிற அரோமா எண்ணையை நாலு சொட்டு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் முடியில் தடவிவந்தால் முடி நன்றாக வளரும்.