
மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் முடி நரைப்பது இயல்பானது . ஆனால் தற்போது இளம் வயதிலேயே நரைமுடி தென்படுவதை அதிகமாக பார்க்க முடிகிறது. முடியை கருப்பாக்க ரசாயன ஹேர் கலர்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு முடியையே பாழ்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் இயற்கையாகவே முடியின் நிறத்தை மீட்டெடுக்க உதவும் 9 உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.கீரை
வெள்ளை முடியை கருப்பாக்க உதவும் உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இரும்பு சத்து நிறைந்த கீரை. இவை முடி வளர்வதற்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்து, முடியின் நிறத்தை பராமரிக்கவும், முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கவும் உதவி புரிகிறது.
2.வால்நட்
வால்நட் உடலுக்கு எவ்வளவு சத்துகளை வழங்குகிறதோ அதே அளவிற்கு முடிக்கும் வழங்குகிறது. முடி திசுக்களை வலுப்படுத்த உதவுவதோடு முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுவதில் வால்நட்டுகள் பெரும்பங்காற்றுகின்றன.
3.ஆம்லா
ஆம்லா எனப்படும் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முடி நிறமியை அதிகரிப்பதன் மூலம் நரைப்பதைத் தடுக்கிறது.
4.எள் விதைகள்
எள் விதைகளில் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் ஏராளம் உள்ளதால் ,இது மெலனின் உற்பத்தியில் பங்கு வகித்து முடியின் நிறத்தை பராமரிக்க பங்களிக்கின்றன.
5.கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளதால்,இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து நரைப்பதை தடுப்பதில் உதவி புரிகிறது.
6.கருப்பு எள் விதைகள்
கருப்பு எள் விதைகளில், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இது முடி நிறத்திற்கு காரணமான நிறமியான மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
7.சக்கரவள்ளி கிழங்கு
இனிப்புஉருளைக்கிழங்கு எனப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமாக உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக மாறுவதால் ,இது உச்சந்தலையில் ஆரோக்கியமான சரும உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு, ஆரோக்கியமாக முடி வளர்வதற்கு உதவுகிறது.
8.பாதாம்
பயோட்டின் நிறைந்த பாதாம் கெரட்டின் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் தலைமுடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க பெருமளவில் உதவுகிறது.
9.கேரட்:
பீட்டா கரோட்டின் நிரம்பிய கேரட், முடியின் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, முடி நரைப்பதை தடுத்து கருப்பாக மாற்றுகிறது.
மேற்கூறிய 9 உணவு வகைகளுமே இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக்குவதில் உதவி புரிவதால் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு முடி ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.