
இன்றைய சூழலில் நம் ஆரோக்கியத்திற்கென நேரம் கொடுத்து அதை கவனிக்க முடிவதில்லை. தினமும் இல்லையென்றாலும் ரெகுலராக வீட்டில் எளிய பொருட்களை கொண்டு சில வழிமுறைகளை பின்பற்ற சருமம், முகம் என அனைத்தும் சுருக்கம் இன்றி பளபளப்பாகவும், இளமையாகவும் நம்மை காட்டும்.
உருளைக்கிழங்கு:
இதில் அதிகமான விட்டமின் சி இருப்பதால் தோலில் இருக்கும் சுருக்கம் நீக்கி நெகிழ்வுத் தன்மையை அதிகப்படுத்துகிறது. உருளைக்கிழங்கு சாற்றை ஒரு காட்டன் துணியில் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகவும், சுருக்கம் இன்றி மென்மையாகவும் இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஏ,பி,ஈ,துத்தநாகம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை இருப்பதால் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும். மசித்த வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர், ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து முகம்,தோலில் தடவி கழுவிவர நல்ல பொலிவு கிடைக்கும்.
பப்பாளி
பப்பாளி பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்டும் ,அதிகளவிலான எக்ஸ்ஃப்ளாய்டும் தோலுக்கு புத்துணர்வை அளிக்கின்றன. தோலின் நெகிழ்வு தன்மையை அதிகரித்து புதிய செல்களை உற்பத்தி செய்யக் கூடியது. பப்பாளி பழத்தை நன்கு மசித்து கழுத்து மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் சுருக்கம் இன்றி கரும்புள்ளிகள், மங்குநீங்கி பளபளப்பாக இருக்கும்.
முட்டை
முட்டை ஒரு ஆன்டி ஏஜிங் பொருள். இதில் ஒமேகா3, புரோட்டீன், துத்தநாகம் இருப்பதால் தோல் சுருக்கத்தைப் போக்கி இறுக்கமாக்குகிறது. அத்துடன் மென்மையைத் தருகிறது . முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் எ சாறும்,அரை டீஸ்பூன் மில்க் க்ரீமும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஃபேஸ்பேக்காக இதனை செய்யலாம்.
தயிர்
சருமத்தில் சுருக்கம் வராமல் காக்கக் கூடிய விட்டமின்கள், மினரல்கள், என்சைம்கள், கொழுப்பு ஆகியவை தயிரில் இருக்கின்றன. அத்துடன் சருமத்தின் ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் இருக்கும் துளைகளை மூடி இறுக்கத்தைத் தருகிறது.
இரண்டு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை, ஒரு வைட்டமின் ஈ கேப்சூல், சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 15நிமிடங்கள் கழித்து கழுவவும்.வாரத்திற்கு இரண்டுமுறை இதனை செய்யலாம்.
தேன்
தேன் ஓர் இயற்கையான மாய்ஸ்ரைசர்.முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க மாய்ஸ்ரைசர் தேவை. தேனில் ஆண்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் அது சரும பகுதியில் ஏற்படுகிற அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்கிறது. ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தேன் எடுத்து முகத்திலும், கழுத்திலும் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து பின் கழுவ தோல் சுருக்கம் இன்றி இளமையாக இருக்கும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் சருமத்தை மென்மையாக்க கூடியது. வறட்சியான சருமத்திற்கு வி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதில் இருக்கும் ஈரப்பதம் சருமத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்கும்.
முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் விளக்கெண்ணையை தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும். வாரம் 3,நான்கு முறை செய்யலாம்
மேற்சொன்ன வகைகளை ரெகுலராக வீட்டில் செய்துகொள்ள நல்ல பலன் கிடைக்கும்.