

அனைத்து தரப்பினரையும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடிய பிரச்னை முடி உதிர்தல், வழுக்கை மற்றும் இளமையிலேயே நரை வருவது.
இவையெல்லாவற்றிற்கும் ஒருவரது பயோட்டின் அளவு குறைவதே காரணமாக இருக்கிறது. பயோட்டின் அளவு உடலில் குறையும் போது, முடியின் அடர்த்தி குறைந்து வலுவிழந்து உடைந்து போகிறது. பயோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் முடி உதிர்தல் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்.
முடி வளர்ச்சிக்கு துத்தநாகம் அவசியம். துத்தநாகம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இளம் பெண்கள் தங்கள் ஆரோக்கியமான முடியை ஹேர் ஸ்ட்ரைட்டனிங், கலரிங், ப்ளீச்சிங் மூலம் அவர்களே கெடுத்துக் கொள்கிறார்கள். இதனால் முடியின் இயற்கை அழகுமுற்றிலுமாக மாறிவிடுகிறது.
முடியின் தன்மைமாறாமல் இருக்க இவற்றை தவிர்ப்பதே நல்லது. அவசியம் இல்லாமல் எடைக் குறைப்பு நடவடிக்கை, டயட் என்ற பெயரில் உடலை வருத்திக்கொண்டாலும் முடி உதிர்தல் கண்டிப்பாக இருக்கும்.
முடி உதிர்கிறதே என கவலைப்படுவதாலும் முடி கொட்டும்.மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். யோகா மற்றும் தியானம் செய்ய ஆரோக்கியம் மேம்படும். மன உளைச்சல் இல்லாமல் இருந்தாலே முடி உதிர்தல் குறையும்.
முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதை தொடர்ந்து பராமரிப்பது அவசியம். வாரமிருமுறை தலையை அலசி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அகண்ட பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்த முடி உதிர்தல் குறையும். ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த முடி சிக்காவதிலிருந்து தடுக்கலாம். வெயிலில் செல்வோர் சிங்க் ஆக்ஸைட் கண்டிஷனர் பயன்படுத்துவதால் முடியை செழுமையாக்கலாம்.
ஈரமுடியை அழுத்தமாக சீவுவது, துண்டால் அழுத்தி துடைப்பத்தை தவிர்க்கவேண்டும். ஹேர் டிரையர் முடி உதிர்வை அதிகப்படுத்தும். நாள் ஒன்றுக்கு 100முடிகளுக்கு மேல் உதிர ஆரம்பித்தாலோ, வட்ட வடிவில் திட்டு திட்டாக உதிர்ந்து தழும்பாக மாறினாலோ மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளோ, உணவு பழக்கங்களை கடைபிடிக்கவோ செய்ய முடி வளர்ச்சிக்கு உத்தரவாதம் பெறலாம். சிறுவயது குழந்தைகளுக்கு இறுக ரப்பர் பேண்ட் போடுவது, அவர்களுக்கு பிடிக்காது என போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளால் உடல் முதல் முடி வரை அனைத்தும் பாதிக்கப்படும் என அவர்களுக்கு புரிய வைக்க தம் உடல்நலனில் அக்கறை கொள்வர்.