டல் அடிக்கும் கூந்தலை டாலடிக்கச் செய்யும் உணவுகள்!

hair growth tips
hair growth tips
Updated on

சத்துக் குறைபாடு, மரபணுக் கோளாறு, வைட்டமின் பற்றாக்குறை என முடி உதிர்வுக்கு நிறைய காரணங்கள் உள்ளன. இருந்தாலும் கூந்தலின் ஆரோக்கியத்துக்கு உணவே மிக பிரதானம். என்னென்ன சாப்பிட்டால் கூந்தல் உதிராமல் வளர்ச்சி ஏற்படும் என்பதற்குரியஉணவுப் பட்டியல்.

கீரைகள்

தினம் ஒரு கீரை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் அழகாக அடர்த்தியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கீரைகளில் இருக்கும் வைட்டமின் பி, சி, ஈ பொட்டாசியம், கால்சியம் இரும்பு, 3 கொழுப்பு அமிலம் என ஒவ்வொன்றுமே கூந்தல் ஆரோக்கியத்திற்கு அவசியம் இதில் குறிப்பாக பசலைக்கீரை கூந்தல் உதிர்வதை தடுத்து அதன் உறுதிக்கு உத்தரவாதம் தருகிறது.

தயிர்

பசும்பாலை காய்ச்சி வீட்டில் உறைக்குத்தி செய்து வெண்ணை எடுக்காத முழுமையான தயிரும், கூந்தல் ஆரோக்கியத்துக்கு நல்லது. தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி கூந்தலில் வேர் ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது.

மீன்

சில வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உற்பத்தி செய்வது, முடி உதிர்வதை தடுக்க இது அதிகம் உதவுகிறது. சிலருக்கு உடல் நலக்குறைவு காரணமாக முடி உதிர் பதையும் தடுக்க இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அவசியம்.

பீன்ஸ்

பீன்ஸில் அதிகமாக புரத சத்து உள்ளது. இதில் விட்டமின் பி, சி, கனிமங்கள் / நார்ச்சத்துக்கள் உள்ளதால் இதனை சமையலில் சேர்த்துக்கொள்வது, சோயா பீன்ஸ், கருப்பு பீன்ஸ் என விதைகளாகவும் சாப்பிட்டால் கூந்தல் உதிராமல் அடத்தியாக வளரும்.

பருப்புகள்

பிஸ்தா, வால்நட், முந்திரி போன்ற பருப்புகளில், புரதம், வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. இவற்றை தினமும் சிறிது சாப்பிட்டால் டல் அடிக்கிற கூந்தல் டாலடிக்கும். குறிப்பாக வால்நட்டில் உள்ள வைட்டமின் ஈ, பயோடின் சத்துக்கள் கூந்தல் வறட்சியை போக்கி உடைவதை தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
பியூட்டி பார்லர் என்ற பெயரில் நடக்கும் பகீர் மோசடிகள்... உஷாராகும் நேரம் வந்துவிட்டது!
hair growth tips

முட்டை

பயோடின் எனப்படும் வைட்டமின் பி 7 குறைபாடு இருந்தால் முடி உதிரும். முட்டையில் இந்த வைட்டமின் ஏராளமாக உள்ளது. முட்டை சாப்பிடாதவர்கள் பாதாம் பருப்பு, அவகோடா சாப்பிடலாம். இதில் வைட்டமின் பி7 கணிசமாக உள்ளது. முடி வளர்ச்சியை இது தூண்டுகிறது.

எள்

கூந்தலில் இயல்பான நிறத்தை பாதுகாக்க தாமிரம் அவசியம். எள், சூரியகாந்தி விதை, காளான், சோயா பீன்ஸ்,முந்திரி போன்றவற்றில் தாமிரம் சத்து அதிகம் உள்ளது.

ஓட்ஸ், பார்லி

ஓட்ஸில் இரும்புச்சத்து நார்ச்சத்து ஒமேகா 3 உள்ளதால் முடி அடர்த்தியாகவும், பள பளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளரச் செய்யும். பார்லியில் வைட்டமின் ஈ உள்ளன. அதனால் முடி சேதம் அடைவதை தடுக்கும். ஓட்ஸ், பார்லி கஞ்சி செய்து குடிக்கலாம்.

கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு

இதில் பீட்டா கரோட்டின் உள்ளதால் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

இதையும் படியுங்கள்:
பார்ட்டிக்குத் தயாராவதில் தாமதமா? உங்கள் நேரத்தைச் மிச்சப்படுத்தும் சூப்பர் ஹேக்ஸ்!
hair growth tips

ஆரஞ்சு, கொய்யா

ஆரஞ்சு பழத்தில் பீட்டா பரோட்டின் அதிகம் உள்ளது. இது சரும வறட்சியை முடி உதிர்வையும் தடுக்கிறது. ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.

சிவப்பு கொய்யா

கூந்தலை உடைந்து போகாமல் உறுதியாக வைத்திருந்து காப்பாற்ற வைட்டமின் சி அவசியம். எலுமிச்சை, ஆரஞ்சை விட வைட்டமின் சிவப்பு கொய்யாவில் இதைவிட ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. முடி உதிர்வைதை கட்டுப்படுத்தி கூந்தலை வளரச் செய்யும்.

logo
Kalki Online
kalkionline.com