
வேப்பங்கொழுந்தை மை போல அரைத்து சில சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் சீக்கிரம் மறையும்.
பொட்டு வைத்த இடத்தில் அரிப்பும், புண்ணும் வந்தால், வில்வ மரக்கட்டையை உரைத்து, அதன் குழம்பை பூசி வந்தால் புண் குணமாகும்.
உணவில் அதிக அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேகமாக நரைப்பது கட்டுப்படும்.
பெண்கள் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு சில துளிகளாவது தேங்காய் எண்ணையை உடம்பில் தேய்த்துக்கொண்டு குளித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், சருமத்துக்கு மிருதுத்தன்மையும் கிடைக்கும்.
பெண்கள் காலையில் எழுந்ததும் எலுமிச்சை ஜூஸ் பருகி வர நேர்த்தியான, மெல்லிய உடல் வாகை பெறலாம்.
தொந்தி குறைய அடிக்கடி வெந்நீர் குடிக்கவேண்டும்.
புளிப்பு சுவை கொண்ட உணவு பொருட்களை அதிக அளவில் உண்பது தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நல்லெண்ணெயில் சிறிது வேப்பம் பூவும், வெல்லமும் சேர்த்து, நன்கு காய்ச்சி, தலையில் தடவி 30 நிமிடம் ஊறித் தலையை அலசி வந்தால் பொடுகுத்தொல்லை அறவே நீங்கிவிடும்.
ஆரஞ்சுப் பழத்தோல், எலுமிச்சம் பழத்தோல் இவைகளை காயவைத்து பொடி செய்து, கடலைமாவு, தயிர் சேர்த்தால் சிறந்த ஃபேஸ்பேக்காக உபயோகப்படும்.
தலைக்கு சீயக்காய் தூள் மட்டும் தேய்த்தால் தலைமுடி வறட்சியாக இருக்கும். கஞ்சியுடன் தேய்த்தால் பட்டுபோல் மிருதுவாக இருக்கும்.
ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டி இதில் எலுமிச்சை ஜுஸ் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து சிறிது steam சேர்க்கவும். ஆறியதும் கன்னம் மற்றும் உதட்டில் தடவவும். ரோஜா போன்ற கன்னமும் நல்ல மென்மையான உதட்டையும் பெறுவீர்கள்.
உடல் மெலிந்திருக்கிறதா? கவலை வேண்டாம். தேனில் பேரீச்சம்பழத்தை ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும்.
எலுமிச்சம் பழத்தோலை காலின் அடிப்பாகம், கை முட்டி, கணுக்கால், முகம் போன்றவற்றில் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் கழுவினால், தடவிய இடங்கள் பளபளப்பாகும். கறுமை குறையும்.