ஆரோக்கியமான தலைமுடிக்கு ஆரோக்கியமான உச்சந்தலை பராமரிப்பு (Scalp care) அவசியம்!

Scalp care
Scalp care
Published on

நம்முடைய தலைமுடியை பராமரிப்பதற்கு நாம் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சம் கூட உசந்தலை பராமரிப்புக்கு (Scalp care) காட்டுவதில்லை. தலைமுடியை நன்றாக பராமரிப்பதன் மூலம் உசந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 

தலைமுடிக்கு என பார்த்து பார்த்து ஷாம்பு, கன்டீசனர் போன்றவற்றை வாங்க கவனம் செலுத்துகிறோம். ஆனால், உச்சந்தலையில் அரிப்பு, Dandruff போன்ற பிரச்னைகள் வரும் வரை உச்சந்தலை ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துகிறோம். அரிப்பு, சிவந்துப்போதல், வலி, அதிக முடிஉதிர்வு போன்றவை இல்லாமல் இருந்தாலே உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஆரோக்கியமான உச்சந்தலை ஆரோக்கியமான தலைமுடிக்கு வழிவகுக்கும்.

நம்முடைய உச்சந்தலையில் 1,00,000 Follicles இருக்கின்றது. இது Sebum என்னும் எண்ணெய் போன்ற திரவத்தை உற்பத்தி செய்கிறது. இது உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைப்பதோடு மட்டுமில்லாமல் நோய்த்தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது. 

உச்சந்தலையை பாதுகாக்க (Scalp care) இந்த வழிகளை பின்பற்றுங்கள்.

1. ஷாம்பு பயன்படுத்தும் போது சல்பேட், ஆல்கஹால் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஆல்கஹால் உச்சந்தலையில் உள்ள மாய்ஸ்டரைசரை உறிஞ்சிக்கொள்ளும். சல்பேட் உச்சந்தலையில் உள்ள எண்ணெய் சுரப்பை தடுக்கும். இதனால் தலைமுடி உடைந்து, வறட்சியாக காணப்படும்.

2. தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது அழுத்தி தேய்க்காமல் மசாஜ் செய்வது போல ஷாம்புவை பயன்படுத்துவது உச்சந்தலையில் சிராய்ப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

3. அதிகமாக தலைக்குளிப்பதை தவிர்ப்பது நல்லது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக் குளிக்கலாம். அதிகமாக தலைக்குளிப்பதால் தலையை இயற்கையாக உருவாகும் எண்ணெய்யை சுரப்பு குறைந்துவிடும். இதனால் தலையில் அரிப்பு, வறட்சி ஏற்படக்கூடும்.

4. உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள ஷாம்பு, கண்டீசனர் பயன்படுத்துவது மட்டுமில்லாமல் இயற்கையான எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், ஆர்கான் ஆயில், ஜோஜோபா ஆயில் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இது தலையில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு 'ஆதிவாசி ஹேர் ஆயில்' தயாரிப்பது எப்படி தெரியுமா?
Scalp care

உச்சந்தலையை பராமரிப்பதற்கு சிறந்த சீரம், ஆயில், ஸ்க்ரப், கண்டீசனர்கள் சந்தையில் விற்கப்படுகிறது. நல்ல தோல் மருத்துவரை ஆலோசித்த பிறகு பயன்படுத்துவது சிறந்தது.

சாதாரணமாக உச்சந்தலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், Dandruff, வறட்சி, முடி உதிர்த்தல் ஆகும்.

Dandruff பிரச்னையால் தலையில் உள்ள தோல்கள் செதில்களாக உரிந்து கொட்டுவதும், தலையில் அரிப்பும் ஏற்படுவதையும் காணமுடியும். இது Fungal infection ஆல் ஏற்படுகிறது. இதற்கு Zinc pyrithione, Ketoconazole போன்ற Anti dandruff shampoo வை பயன்படுத்தலாம். ஆப்பிள் சீடர் வினிகர் போன்ற இயற்கையான பொருளை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

வறட்சியான உச்சந்தலையை சரிசெய்ய மாய்ஸ்டரைசர் ஷாம்புவை பயன்படுத்தலாம். தலையை மென்மையாக தேய்க்க வேண்டியது அவசியம். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
Scalp care

முடிக்கொட்டுவது மரபியல் காரணமாகவும், ஹார்மோன் பிரச்னையால் அல்லது ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படலாம். அதற்கு தலையை நன்றாக மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். வைட்டமின் B, C, E ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை நீங்களும் சுலபமாக பெறலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com