மஞ்சள் பற்களா? முத்துப் போல ஜொலிக்க இந்த எளிய இயற்கையான வழிகள் போதும்!

பல் வலி, துர்நாற்றம் நீங்கி பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் எளிய இயற்கை வழிகள்.
பற்கள்
பற்கள் Gemini image
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

நம் முன்னோர் காலத்தில் பற்களை கை விரலால் அல்லது வேப்பங்குச்சி போன்றவற்றால் துலக்குவது வழக்கம். ஆனால் அது அந்த காலம். தற்போது இது எல்லாம் மலை ஏறி போய்விட்டது.

இந்த காலத்தில் ஒரு வயது சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பல் தேய்ப்பதற்கு பிரஷ்களை உபயோக்கிறார்கள்.

என்னதான் புதுப்புது வகையான பிரஷ்கள் வந்தாலும், இயற்கை அளிக்கும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றிற்கு அவை ஈடாகாது. ஆனால் பெரும்பாலும் இவற்றால் பல்துலக்குவதற்கு இப்போது யாரும் முன் வருவது இல்லை.

நூற்றுக்கு 90% பேர் பற்பொடி, பற்பசை இவற்றைக் கொண்டே பற்களை சுத்தம் செய்கின்றனர். சிலர் பற்களை சுத்தம் செய்வதற்கு சாம்பல், செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வது பற்களுக்கு கெடுதலை உண்டு பண்ணும் .

அதனால் பல்வலி, ஈறு வீக்கம், சீழ் வடிதல் போன்றவை ஏற்பட்டு வாய் துர்நாற்றம் வீசும். இவ்வாறு இல்லாமல் பற்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பளிச்சென இருக்கும் படியும் செய்வதற்கான சில எளிய முறைகளை பார்ப்போம்.

பல் தேய்க்கும்போது ஈறுகளை முதல் விரலைக்கொண்டு (ஆட்காட்டி விரல்) மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து வந்தால் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

பச்சை பெரிய நெல்லிக்காயை பற்களால் கடித்து தின்றால் பற்களில் உள்ள கறை நீங்கும். கரும்பை கடித்து சாப்பிட்டால் பற்கள் சுத்தமாகி பலம் பெறும்.

ஆரஞ்சு பழதோல்களை உலர்த்தி பொடி செய்து அதனைக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறை நீங்கும்.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென்று மாறும்.

எலுமிச்சை சாறில் சிறிது உப்பை தொட்டு பல் தேய்க்கும் பிரஷ்ஷால் பல் தேய்த்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும்.

புதினா இலையை காய வைத்து பொடி செய்து அதை கொண்டு பல் துலக்கி வந்தாலும் பற்கள் பளிச்சென்று மாறும்.

பற்கள்
பற்கள்Gemini image

எலுமிச்சை பழ தோல்களுக்கு காயவைத்து பொடி ஆக்கி உப்பு சேர்த்து நல்லெண்ணையில் குழைத்து பற்களை தேய்த்து வந்தால் பற்கள் பளபளவென மாறும்.

கேரட்டை பச்சையாக கடித்து உண்பது பற்களுக்கு பலன் தரும்.

கிராம்பை வாயில் மென்று வந்தால் வாய் நாற்றம் அகலும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பிரஷை மாற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தினமும் 2 முறை பல் தேய்த்தாலும் பற்கள் மஞ்சளாக மாற இதுதான் காரணம்!
பற்கள்

பற்களை தேய்ப்பதோடு நாக்கையும் பிரஷால் லேசாக தேய்த்து சுத்தம் செய்தால் நாக்கு சுத்தப்படுத்துவதோடு வாய் நாற்றமும் நீங்கும்.

சாப்பிட்ட பின்பு நன்கு வாயை கொப்பளிக்க வேண்டும் முடிந்தால் உப்பு கலந்த நீரால் கொப்பளித்தால் எந்த விதமான பல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.

பராமரிக்கும் முறைகள்:

தினமும் இரண்டு முறை பல் தேய்க்க வேண்டும். காலையில் பற்களின் அழகிற்காகவும் இரவில் பல்லின் ஆரோக்கியத்திற்காகவும் துலக்கவேண்டும்.

மூன்று நிமிடத்திற்கு மேல் பற்களை துலக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் பற்களின் 'எனாமல்' பாதிக்கப்பட்டு விரைவில் பல் கூச்சம் ஏற்படும்.

பிரஷ்ஷை உபயோகப்படுத்துபவர்கள் பிரஷில் உள்ள நார் கடினமாக இல்லாமல் வாங்க வேண்டும். மூன்று வகைகளில் பிரஷ் தரம் பார்த்து வாங்க வேண்டும். சாப்ட், மீடியம், ஹார்டு என்ற மூன்று வகைகளில் உள்ளது. கடினமான பிரஷ்கள் ஈறுகளில் காயத்தை ஏற்படுத்திவிடும்.

மிகவும் பெரியதாக இல்லாத முனை அமைப்பைக் கொண்ட பிரஷ் வகைகளிலேயே வாங்க வேண்டும். அவற்றால் பற்களின் பின்புறத்தை சுத்தம் செய்யவும் பயன்படும்.

பெரும்பாலும் சாப்ட் வகை உபயோகப்படுத்துவதே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
வரண்டுபோன உதடுகளுக்கு விடை கொடுங்கள்: ஜொலிக்கும் உதடுகளைப் பெற எளிய டிப்ஸ்!
பற்கள்

பல் மற்றும் வேறு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் பல் டாக்டரிடம் கேட்டு அவர் சொல்லும் பிரஷ்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

நல்லெண்ணையை வாயில் ஊற்றி ஐந்து நிமிடம் கொப்பளித்து விட்டு துப்பி விடவேண்டும். இவ்வாறு செய்வதால் பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க இது உதவும். மேலும் தொண்டை சம்பந்தமான நோய்களும் வராது.

இப்படிப்பட்ட எளிய முறைகளை செய்து வந்தால் பற்களின் ஆயுள் நீடிக்கும். பல் வலி, பல் சொத்தை வராது. பல் சம்பந்தமான நோய்களும் வராது.

வாசகர்கள் தங்களுடைய அன்றாட பல் பராமரிப்பு முறைகளில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொண்டு, இயற்கை முறைகள் மற்றும் சரியான பிரஷ் மூலம் பற்களின் ஆயுளை எப்படி அதிகரிப்பது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com