ஒரு வாரத்தில் எத்தனை முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம்? 

Hair Wash.
Hair Wash.
Published on

தலைமுடி என்பது ஒவ்வொருவரின் அழகு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் முக்கிய அங்கமாகும். தலைமுடியை பராமரிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அதில் அடிப்படையானது ஷாம்பு போட்டு குளிப்பது. ஆனால், ஒரு வாரத்தில் எத்தனை முறை ஷாம்பு போட்டு குளிக்கலாம் என்பது பலருக்கு எழும் மிகப்பெரிய கேள்வி. தலைமுடி வகை, தலைமுடி பிரச்சனை, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து இந்த கேள்விக்கான பதில் மாறுபடும். 

தலைமுடியின் வகை என்பது, ஒரு வாரத்தில் நீங்கள் எத்தனை முறை ஷாம்பு போட்டு குளிக்கலாம் என்பதை தீர்மானிக்க முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. உலர்ந்த தலைமுடி உள்ளவர்கள் அதிகமாக ஷாம்பு போட்டு குளித்தால், தலைமுடி மேலும் உலரச் செய்யும். எனவே, வாரத்தில் 2-3 முறை ஷாம்பு போட்டு குளிப்பது போதுமானது. அதேபோல, எண்ணெய் தலைமுடி உள்ளவர்கள் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

தலைமுடி உதிர்வு, பொடுகு, முடி நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஒரு வாரத்தில் அதிகமாக ஷாம்பு போட்டு குளிக்கும் எண்ணிக்கையை மாற்ற வேண்டி இருக்கும். சில சமயங்களில் சரும மருத்துவரை அணுகி இதற்கான ஆலோசனை பெறுவது நல்லது. உங்களுக்கு இத்தகைய பாதிப்புகள் இருந்தால், அவற்றை நீக்குவதற்கு உதவும் ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். 

நீங்கள் வெளியே அதிகமாக செல்லும் நபர் என்றால் தினசரி தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம். அதேநேரம் அதிகமாக வெளியில் சுற்றுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற செயலில் நீங்கள் ஈடுபடுபவர் என்றால், தினசரி ஷாம்பு போட்டு குளிக்க வேண்டி இருக்கும். 

நீங்கள் எதுபோன்ற ஷாம்பு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்தும் ஒரு வாரத்தில் எத்தனை முறை தலைக்கு குளிக்கலாம் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. சல்பேட் இல்லாத ஷாம்பு தலைமுடியை மென்மையாக சுத்தப்படுத்தும். எனவே, இதை தினமும் பயன்படுத்தலாம். அதேநேரம், புரோட்டின் ஷாம்பு தலைமுடியை வலுப்படுத்தும் என்பதால், வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம். தலைமுடியை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் மாய்ஸ்சரைசிங் ஷாம்புவை உலர்ந்த தலைமுடி உள்ளவர்கள் வாரத்தில் 3 நாட்கள் பயன்படுத்துவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
முடி உதிர்வைத் தடுத்து செழிப்பாக வளரச் செய்யும் எளிய ஆலோசனைகள்!
Hair Wash.

ஷாம்பு போடும் முறை: நீங்கள் வாரத்தில் எத்தனை நாட்கள் ஷாம்பு பயன்படுத்துகிறீர்கள் என்பதைவிட, அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். ஷாம்பு போடுவதற்கு முன் தலைமுடியை நன்கு நனைத்து ஷாம்புவை தலைமுடியின் வேர்களில் தடவி நன்றாக மசாஜ் செய்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். 

உங்களது முடியின் வகை, தலைமுடி பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து ஒரு வாரத்தில் எத்தனை முறை தலைக்கு குளிக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதே நேரம் உங்களது தலைமுடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com