லிப் லைனர் இது பென்சில் போன்ற தோற்றம் உடையது. உதடுகளின் வடிவத்தை லிப் லைனரை கொண்டு வரைந்து, அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிரப்புவது நல்லது.
லிப்ஸ்டிக் உதட்டை விட்டு வெளியே பரவுவதை இது தடுக்கும்.
லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்றவாறு லிப்லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும்போதும் அதற்கேற்ப லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. லிப்ஸ்டிக் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது. உதாரணத்திற்கு சிவப்பு நிறத்தைச் சேர்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும் பிரவுன் நிறத்தை சார்ந்த லிப்ஸ்டிகுகளுக்கு பிரவுன் நிற லிப்லைனரும் உபயோகிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் லிப்லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம் மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால் மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும் .
சுத்தமான வெண்ணையை சிறிதளவு எடுத்து தினமும் உதடுகளில் தடவினால் உதடுகள் மென்மையாகும்.
வெயிலினால் உதடுகள் கருப்பாக மாறலாம் இதை தடுக்க வாஸ்லின் தடவிக்கொள்ள வேண்டும் .
வாடாத கொத்தமல்லி தழைச்சாற்றை இரவு படுக்க போகும் முன் உதட்டில் தடவி வந்தால் ஏழு எட்டு நாட்களில் சிவக்கத் தொடங்கும்.
எலுமிச்சம் பழத்தை நறுக்கி உதட்டில் தடவி வர கருப்பு நீங்கும்.
ரோஜாப்பூ ஒன்று எடுத்து பால் விட்டு நன்றாக விழுது பதத்திற்கு அரைத்து எடுத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு மறையும் .
உதடு வெடிப்பு மறைய முட்டையின் வெள்ளைக்கருவுடன் பாதாம் பவுடர், பாலேடு இரண்டும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்தவுடன் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.
உதட்டில் வெடிப்பு வாயில் புண் ஆகியவை இருந்தால் பாக்கு மரத்தின் வேரை இடித்து கசாயம் போட்டு சாப்பிட்டு, வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்ணும் மாறும் உதட்டு வெடிப்பு மாறும் அழகும் கூடும் . மெல்லிய உதடு உள்ளவர்கள் உதடு சற்று பெரிதாக இருக்குமாறு காட்ட மேல் உதட்டில் உதட்டுக்கு கீழாகவும் லிப்ஸ்டிக்கை பூசிக் கொள்ள வேண்டும்.
லிப்ஸ்டிக் பூசி கொள்வதற்கு முன்பாக உதட்டின் மீது உள்ள ஈரப்பசையை நீக்கிவிட்டால், லிப்ஸ்டிக் விரைவில் அழியாமல் இருக்கும். இளமையாகவும் கவர்ச்சிகரமாகவும் பளிச்சென்றும் உள்ள நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கை உபயோகிக்க வேண்டும் . காலையில் மிகவும் லைட்டாக உள்ள நிறத்தையும் மாலையில் கொஞ்சம் பளிச்சென்று நிறத்தையும் உபயோகிக்கலாம். புதிதாக லிப்ஸ்டிக் உபயோகிக்க துவங்குகிறவர்களும் லைட் கலர் லிப்ஸ்டிக் போடலாம் லிப்ஸ்டிக் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கலர்லெஸ் லிப்ஸ்டிக் லிப் பாம் அல்லது வாஸலின் போட்டுக்கொள்ளலாம் . லிப்ஸ்டிக்கை நேரடியாக உதட்டில் போடாமல் லிப் பிரஷ் உபயோகித்து போடுவது நல்லது அதுவே உதடுகளை இன்னும் அழகாக காட்டும்..