
இயற்கை விவசாயத்துக்கு பெரிதும் உதவும் ஒவ்வொரு எருக்களில் உள்ள சத்துக்களின் சதவிகித அளவுகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
* தொழு எருவில் 1.24 சதவிகித தழைச்சத்து, 0.78 சதவிகித மணிச்சத்து, 2.08 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* ஆட்டு எருவில் 2.17 சதவிகித தழைச்சத்து, 1.10 சதவிகித மணிச்சத்து, 2.00 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* கோழி எருவில் 5.00 சதவிகித தழைச்சத்து, 2.88 சதவிகித மணிச்சத்து, 1.50 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* பண்ணை எருவில் 1.25 சதவிகித தழைச்சத்து, 0.60 சதவிகித மணிச்சத்து, 1.20 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* மீன் தூளில் 6.80 சதவிகித தழைச்சத்து, 7.10 சதவிகித மணிச்சத்து, 1.00 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* சணப்பில் 2.30 சதவிகித தழைச்சத்து, 0.50 சதவிகித மணிச்சத்து, 1.80 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* பதப்படுத்தப்பட்ட எலும்பில் 3.40 சதவிகித தழைச்சத்து, 20.25 மணிச்சத்து உள்ளது.
* ஆட்டு , குளம்பு கழிவுகளில் 13.00 சதவிகித தழைச்சத்து உள்ளது.
* தக்கைப்பூண்டில் 3.50 சதவிகித தழைச்சத்து, 0.60 சதவிகித மணிச்சத்து, 1.20 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* சீமை அகத்தியில் 2.71 சதவிகித தழைச்சத்து, 0.53 சதவிகித மணிச்சத்து, 2.20 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* புங்கன் இலையில் 3.31 சதவிகித தழைச்சத்து, 0.44 சதவிகித மணிச்சத்து, 2.39 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* கிளைரிசீடிரியாவில் 2.90 சதவிகித தழைச்சத்து, 0.50 சதவிகித மணிச்சத்து, 2.80 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* பயிறு வகைகளில் 0.72 சதவிகித தழைச்சத்து, 0.20 சதவிகித மணிச்சத்து, 0.53 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* கடலை புண்ணாக்கில் 7.60 சதவிகித தழைச்சத்து, 1.50 சதவிகித மணிச்சத்து, 1.30 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* வேப்பம் புண்ணாக்கில் 4.90 சதவிகித தழைச்சத்து, 1.70 சதவிகித மணிச்சத்து, 1.40 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* ஆமணக்கு புண்ணாக்கில் 5.30 சதவிகித அளவு தழைச்சத்து, 1.60 சதவிகித மணிச்சத்து, 1.40 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* தேங்காய் புண்ணாக்கில் 3.50 சதவிகித தழைச்சத்து, 1.50 சதவிகித மணிச்சத்து, 2.00 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* எள்ளு புண்ணாக்கில் 5.50 சதவிகித தழைச்சத்து, 1.75 சதவிகித மணிச்சத்து, 1.50 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
* பருத்தி புண்ணாக்கில் 5.00 சதவிகித தழைச்சத்து, 1.75 சதவிகித மணிச்சத்து, 1.50 சதவிகித சாம்பல் சத்து உள்ளது.
உங்கள் நிலம் அல்லது பயிர் விவசாயத்துக்கு என்ன சத்து தேவையோ அந்த உரத்தைப் பயன்படுத்தி வயலை வளம் பெறச் செய்யலாம். அதன்மூலம் மகசூலையும் அதிகரிக்கலாம்.