பணம் செலவழிக்காமல் அழகாக இருக்க முடியுமா? இதோ, நீங்கள் தேடிய வழிகள்!

Simple makeover instructions
Natural beauty tips
Published on

ழகாக இருக்க யாருக்குத்தான் ஆசை இல்லை? ஆனால் அழகு நிலையங்களுக்கு செல்லும்போது கை நிறைய காசும் தேவைப்படுகிறதே. பணப்பிரச்னை மட்டுமின்றி சிலருக்கு ஒவ்வாமை போன்ற பிரச்னைகளும் உண்டு என்பதால் இயற்கை வழியிலேயே தங்கள் அழகை மேம்படுத்திக்கொள்ள இயலுமா என்று பார்ப்பார்கள். 

பொதுவாகவே மனிதர்கள் இயற்கையாகவே ஒவ்வொரு விதமான அழகானவர்கள்தான். அந்த இயற்கை அழகை மேலும் மேம்படுத்தி காட்டும் வகையில் சில எளிய அழகு முறைகளை கையாண்டால் நிச்சயம் செயற்கை அழகு இன்றி இயற்கை அழகில் ஜொலிக்கலாம்.

வாருங்கள் இயற்கையாக உங்கள் அழகை எப்படி மேம்படுத்துவது என்பதற்கான சில எளிய மேக் ஓவர் வழிமுறைகள் இங்கு.

முதலில் நமது தோற்றத்தை அழகாக்கிக்காட்ட உதவுவது நமது சருமமே எனலாம். தூய்மையான சருமம் இயற்கையான அழகின் எடுத்துக்காட்டாக அமைகிறது. இந்த சரும பராமரிப்பின் அடிப்படையாக இந்த 3 விஷயங்கள் உள்ளன.

1. ஹைட்ரேட் (Hydrate) - சருமத்தை நீரேற்றமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இளநிலை ஃபிளாஷ் ஜூஸ் போன்றவைகளையும் எடுக்கலாம்.

2. சுத்தப்படுத்துதல் (Cleanse) - அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்க ஒரு நாளைக்கு இரண்டுமுறை முகத்தை கழுவவுது நல்லது.

3. ஈரப்பதம் (Moisturize) - உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க தரமான மாய்ஸ்ரைசரைப் பயன்படுத்துங்கள். தேவைப்படின் தகுந்த அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனை கேட்டு மாய்ஸ்ரைசரை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அழகின் ரகசியங்கள் தெரியுமா?
Simple makeover instructions

அடுத்து நம் அழகை மேம்படுத்திக்காட்டும் நமது தலைமுடிக்கும்  பராமரிப்பு தேவைப்படுகிறது.  தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தலைமுடியை வாரம் இரண்டுமுறை தவறாமல்  ஷாம்பூ போட்டு அலசி காய வைக்கவும். தலைமுடிக்கு  ஊட்டமளிக்கவும் ஈரப்பதமாக்கவும் வாரத்திற்கு ஒருமுறை ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.

உங்கள் உருவம் உயரத்திற்கேற்ப சிகை அலங்காரத்தை எளிமையாகவும் சிரமமின்றியும் வடிவமைத்து  இயற்கை அழகை மேம்படுத்துங்கள். உதாரணமாக குட்டையான கூந்தலுக்கு போனிடெய்லும் நீளமுடிக்கு பூரான் கால் பின்னலும் அழகு தரும்.

அடுத்து ஒப்பனை (Makeup) . அதீத மேக்கப்பை விட இலேசாக செய்யப்படும் ஒப்பனை உங்கள் இயற்கையான அம்சங்களை மேம்படுத்த வழிவகுக்கும்.

முகத்தில் அழகு தரும் கண்களை பிரகாசத்துடன் சிறப்பாக எடுத்துக்காட்ட இமைகள் மீது ஐலைனர் அல்லது மஸ்காராவைப் பயன்படுத்தவும். இயற்கையாகவே சிவந்த உதடுகளுக்கு
அடிக்கும் வண்ணத்தில் லிப்ஸ்டிக் போடாமல் மென்மையான வண்ணத்தை தேர்வு செய்யவும். கண்களும் உதடுகளுமே அழகின் வாசல்கள் என்பதால் இவற்றில் கூடுதல் கவனம் வையுங்கள்.

அழகு நிலையங்கள் செல்வதன் மூலம் உங்கள் புருவங்களை சீராக திருத்திக்கொள்வதும் அதில் ஐப்ரோ கொண்டு வடிவமைப்பதும்  முகத்தை அழகாக்கும். தோற்றத்தை பிரகாசமாக்க உங்கள் உடை மற்றும் அதற்கு ஈடாகும் ஆபரணங்களில்  ஏற்ற வண்ணம் ஸ்டைலான வடிவமைப்பை தேர்வு செய்யவும்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு முதுகு வலி இருக்கிறதா? நீங்கள் வாங்கும் ஷூதான் காரணம்!
Simple makeover instructions

இயற்கையான அழகைப்பெற ஒப்பனை மட்டுமே போதாது. நல்ல ஆரோக்கியமும் வேண்டும். புத்துணர்ச்சி தரும் போதுமான தூக்கம், ஓய்வு ஆகியவற்றுடன் உங்கள் ஆற்றலையும் நம்பிக்கையையும் அதிகரிக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம். உங்கள் முகத்தில் என்றும் தங்கும் புன்னகை பாஸிடிவ் அதிர்வலைகளை சூழவைத்து உங்களை அழகாகக்காட்டும் என்பதை மறவாதீர்கள்.

இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி மிகையற்ற இயற்கை அழகை மேம்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com