ஒரே நிற ஆடைகள், சரியான ஃபிட்டிங், ஹை-வெய்ஸ்ட் ஸ்டைல்களால் உயரமாகத் தோன்றுவது எப்படி?

ஸ்ட்ரெயிட் கட் குர்தா, ஹை-வெய்ஸ்ட் பேண்ட், இலகு புடவை, சரும நிறத்துக்கு ஏற்ற காலணி, நீளமான நகைகள் மூலம் உடலை உயரமாக காட்டும் ஸ்டைல் ரகசியங்கள்.
fashion-tips
fashion-tips
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on: 

ஃபேஷன் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நம்மைச் சுருக்குவது அல்ல; நமது உடலமைப்பிற்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து அணியும் அழகிய கலையாகும். சற்றே உயரம் குறைவான பெண்களுக்கு ஏற்ற வகையிலான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதற்கான டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஆடைகளின் வடிவம், டிசைன் மற்றும் அணியும் முறைகளில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், அவர்கள் தங்களை உயரமாகவும் கம்பீரமாகவும் காட்டிக்கொள்ள முடியும்.

ஒரே நிற ஆடை அமைப்பு:

தலை முதல் கால் வரை ஒரே நிறத்தில் ஆடை அணியவேண்டும். மேலே அணியும் உடையும், கீழே அணியும் உடையும் ஒரே வண்ணத்தைச் சேர்ந்ததாக இருக்கும்போது, அது உங்களைச் சற்றே உயரமாகக் காட்டும். பாரம்பரிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது 'ஸ்ட்ரெயிட் கட் அனார்கலிகள்'  அல்லது ஒரே நிறப் புடவைகளைத் தேர்வு செய்யலாம். புடவைகளில் பெரிய கான்ட்ராஸ்ட்  பார்டர்கள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு வேறு நிறங்களில் குர்தியும் லெகிங்ஸும் அணிவதை விட, ஒரே நிறத்தில் அணிந்தால் உயரம் சற்று அதிகரித்துக்காட்டும்.

சரியான ஃபிட்டிங்:

உயரம் குறைவாக உள்ளவர்களுக்கு, தாங்கள் அணியும் ஆடைகளின் அளவும் ஃபிட்னஸும்  மிக முக்கியம். தொளதொளவென ஆடைகள் அணிந்தால், அது  இன்னும் உயரம் குறைவாகக்காட்டும். நேராக வெட்டப்பட்ட 'ஸ்ட்ரெயிட் கட்' குர்தாக்கள் மற்றும் குர்த்திகள் பொருத்தமாக இருக்கும். முட்டிக்குக் கீழ் அல்லது கணுக்கால் வரை இருக்கும் குர்தாக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவற்றுடன் அகலமான பாட்டியாலாக் களுக்குப் பதிலாக, ஸ்லிம் ஃபிட் பேண்ட்  அல்லது லெகிங்ஸ் பயன்படுத்தலாம். 'வி' நெக் மற்றும் டீப் நெக் லைன்கள் மிகப் பொருத்தமாக இருக்கும்; இது கழுத்துப் பகுதியை நீளமாகக் காட்டி, உயரமான தோற்றத்தைத் தரும்.

புடவைத் தேர்வு:

ஜார்ஜெட், ஷிஃபோன் அல்லது சாஃப்ட் சில்க் போன்ற இலகுவான துணி வகையிலான புடவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய பார்டர் கொண்ட கனமான காஞ்சிபுரம் புடவைகள் உங்கள் உடலை இன்னும் பருமனாகக் காட்டும். எனவே, மெல்லிய பார்டர் கொண்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து, முந்தானையை நேர்த்தியாகப் ப்ளீட்ஸ்  உடுத்துவது நல்லது.

நுட்பமான சிறிய டிசைன்கள்

பெரிய பெரிய பூக்கள் போட்ட டிசைன்கள் அல்லது குறுக்கு வசமான கோடுகள் உடலை அகலமாகக் காட்டுமே தவிர, உயரமாகக் காட்டாது. எனவே, அணியும் ஆடைகளில் சிறிய சிறிய பூக்கள் மற்றும் டிசைன்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நேர்க்கோடுகள் அல்லது நுட்பமான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் உள்ள ஆடைகளைத் தேர்வு செய்தால், அது உங்களை உயரமாகக்காட்டும்.

இதையும் படியுங்கள்:
பன நுங்குவின் மகத்துவங்கள்: ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு சுலபமான வழி!
fashion-tips

ஹை-வெயிஸ்ட் மற்றும் ஃபியூஷன் ஆடைகள்:

கால்களை நீளமாகக் காட்ட, இடுப்புப் பகுதி சற்று உயரமாக இருக்கும் ஆடைகளை அணியலாம். இதற்கு ஹை-வெயிஸ்ட் பேண்ட்கள், பாவாடைகள் அல்லது லெஹங்காக்கள் பொருத்தமாக இருக்கும். லெஹங்கா அல்லது நவீன மாடல் பாவாடைகளை அணியும்போது, அவற்றை தொப்புளுக்குச் சற்று மேலே கட்ட வேண்டும். அதனுடன் சரியான அளவில் பொருந்தும் கிராப் டாப்  அணியும்போது, உடலமைப்பு உயரமாகத் தெரியும்.

பொருத்தமான அணிகலன்கள்:

காலணிகள்: உங்கள் சருமத்தின் நிறத்திற்குப் பொருத்தமான காலணிகள்  கால்களை நீளமாகக் காட்டும். காலணிகளை அணிவதாக இருந்தால், முன்பக்கம் உருண்டையாக இல்லாமல், சற்று கூர்மையாக இருக்கும் 'பாயிண்ட்டெட் டோ' (Pointed-toe) வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
திருமண வைபவங்களை ஜொலிக்க வைக்கும் இந்திய பாரம்பரிய உடைகள்!
fashion-tips

நகைகள்: கழுத்தை ஒட்டி இருக்கும் கனமான சோக்கர் நகைகளைத் தவிர்த்து, நீளமான நெக்லஸ்கள் மற்றும் தொங்கும் கம்மல்களை (ஜிமிக்கிகளை) அணியலாம்.

இந்த டிப்ஸ்களைப் பின்பற்றி ஆடை அலங்காரம் செய்துகொண்ட பின், உள்ளத்திலும் முகத்திலும் தன்னம்பிக்கையை ஏந்துங்கள். புன்னகையுடனும் தன்னம்பிக்கையுடனும் நீங்கள் வலம் வரும்போது, அனைவரின் கண்களுக்கும் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிப்பீர்கள்!

logo
Kalki Online
kalkionline.com